சிங்கிள் சார்ஜில் 489 கிமீ ஓடும்! விலை இவ்ளோதானா! இந்தியாவையே மிரள விட்ட டாடா எலெக்ட்ரிக் கார்!

இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் (Electric Car) சந்தையில் ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ள நிறுவனங்களில் ஒன்று டாடா மோட்டார்ஸ் (Tata Motors). இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது மிகவும் முக்கியமான மைல்கல் (Sales Milestone) ஒன்றை கடந்துள்ளது.

2.50 லட்சம் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை என்பதுதான் அந்த மைல்கல் ஆகும். இதில், டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) எலெக்ட்ரிக் காரின் விற்பனை எண்ணிக்கை மட்டும் 1 லட்சம் ஆகும். இதன் மூலம் இந்தியாவில் 1 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை கடந்த முதல் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை டாடா நெக்ஸான் இவி பெற்றுள்ளது. இது குறித்து ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Tata Nexon EV V2V Charging

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போதைய நிலையில், டாடா நெக்ஸான் இவி, டாடா டிகோர் இவி (Tata Tigor EV), டாடா டியாகோ இவி (Tata Tiago EV), டாடா பன்ச் இவி (Tata Punch EV), டாடா கர்வ் இவி (Tata Curvv EV), டாடா ஹாரியர் இவி (Tata Harrier EV), டாடா எக்ஸ்பிரஸ்-டி இவி (Tata XPRES-T EV) உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது.

இதில், அதிகமாக விற்பனையாகி கொண்டுள்ள எலெக்ட்ரிக் கார் என்றால், அது டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் கார்தான். இந்த எலெக்ட்ரிக் காரில், 31.24 செமீ சினிமாட்டிக் டச் ஸ்க்ரீன், 26.03 செமீ டிஜிட்டல் காக்பிட், 360 டிகிரி கேமரா, ஆட்டோ ஹோல்டு, மழை வந்தால் தானாக இயங்க கூடிய வைப்பர்கள், 4 சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் V2V சார்ஜிங்/V2L தொழில்நுட்பம் என ஏராளமான வசதிகள் (Features) வாரி வழங்கப்பட்டுள்ளன.

Tata Nexon EV

அத்துடன் பனரோமிக் சன்ரூஃப், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் மற்றும் அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு போன்ற வசதிகளையும் டாடா நெக்ஸான் இவி கொண்டுள்ளது. இதில், அடாஸ் வசதி, கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்புதான், டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரில், 45 kWh மற்றும் 30 kWh என 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்பட்டுள்ளன. இவற்றின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) முறையே 489 கிலோ மீட்டர்கள் மற்றும் 275 கிலோ மீட்டர்கள் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 12.49 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட 17.49 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இவை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பு என டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரை நாங்கள் கூறுவோம். இந்திய சந்தையில் எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV) போன்ற எலெக்ட்ரிக் கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக டாடா நெக்ஸான் இவி திகழ்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 24, 2025, 18:36 [IST]
English summary
Tata nexon ev 1 lakh unit sales milestone check all details here
மேலும்... #tata motors #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+