எத்தனை முறை சோதனை பண்ணாலும் இதுதான் ரிசல்ட்! 5-ஸ்டார் ரேட்டிங்கை சும்மா ஒண்ணும் தூக்கி கொடுத்திடல!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து பல்வேறு எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவற்றுள் முக்கியமானது, நெக்ஸான் இவி (Nexon EV) ஆகும். ஏன் இது முக்கியமானது என கூறுகிறோம் என்றால், எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு மிக பெரும் தைரியத்தை கொடுத்த எலக்ட்ரிக் கார், நெக்ஸான் இவி எனலாம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவிலேயே எலக்ட்ரிக் கார்களுக்கு ஆரம்பத்தில் கஸ்டமர்களை கொண்டுவந்து எலக்ட்ரிக் கார் சந்தையை விரிவுப்படுத்திய பெருமை டாடா நெக்ஸான் இவி எலக்ட்ரிக் காரையே சேரும். நெக்ஸான் இவி இந்த அளவிற்கு பிரபலமானதற்கு முக்கிய காரணம், அதன் பாதுகாப்பு தரத்துக்கு வழங்கப்பட்ட மதிப்பீடு ஆகும்.

tata nexon ev gets 5-star

இந்தியாவில் நடத்தப்படும் பாரத் என்சிஏபி என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் (Bharat NCAP Crash Test) நெக்ஸான் இவி எலக்ட்ரிக் காருக்கு முழு 5 நட்சத்திரங்கள் வழங்கப்பட்டன. குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் எலக்ட்ரிக்-அல்லாத டாடா நெக்ஸான் காருக்கு 5-ஸ்டார் ரேட்டிங் கொடுக்கப்பட்டதால், பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் நெக்ஸான் இவி எலக்ட்ரிக் கார் நிச்சயமாக 5-ஸ்டார் ரேட்டிங்கை தான் பெறும் என முன்னரே கணித்திருந்தோம்.

மார்க்கெட்டில் 30kWh மற்றும் 45kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் டாடா நெக்ஸான் இவி எலக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 45kWh பேட்டரி ஆப்ஷனை சமீபத்தில்தான் நெக்ஸான் இவி காரில் டாடா மோட்டார்ஸ் வழங்கி இருந்தது. கடந்த 2024ஆம் ஆண்டில் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் உட்படுத்தப்பட்டது 30kWh பேட்டரியை கொண்ட நெக்ஸான் இவி எலக்ட்ரிக் காரை ஆகும்.

tata nexon ev gets 5-star

இந்த நிலையில், தற்போது 45kWh திறன் கொண்ட பேட்டரியை கொண்ட நெக்ஸான் இவி எலக்ட்ரிக் காரும் இந்த கிராஷ் டெஸ்ட்டுக்கு உட்படுத்தப்பட்டு, சோதனை முடிவுகள் வெளியாகி உள்ளன. விலை குறைவான நெக்ஸான் இவி 30kWh கார் 5-ஸ்டார் ரேட்டிங்கை பெறும்போது, நெக்ஸான் இவி 45kWh கார் 5-ஸ்டார் ரேட்டிங்கை பெற்றிருப்பது நாம் எதிர்பார்த்த ஒன்றே ஆகும்.

பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் பெரியவர்களுக்கான பாதுகாப்பு சோதனையில் 32 மதிப்பெண்களுக்கு 29.86 மதிப்பெண்களை 45kWh பேட்டரியை கொண்ட நெக்ஸான் இவி பெற்றுள்ளது. இந்த 29.86 மதிப்பெண் ஆனது இரு விதமான சோதனைகளின் மூலம் பெறப்பட்டவை ஆகும். காரின் முன்பக்கத்தை வளையாத இரும்பு கம்பத்தின் மீது மோதவிட்டு சோதித்து பார்த்ததில் 16க்கு 14.26 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதேபோல், காரின் பக்கவாட்டில் மோதலை ஏற்படுத்தி பார்த்ததில் 16க்கு 15.60 மதிப்பெண்களை 45kWh பேட்டரி கொண்ட நெக்ஸான் இவி எலக்ட்ரிக் கார் பெற்றுள்ளது. இவை இரண்டையும் சேர்த்ததுதான், பெரியவர்களுக்கான பாதுகாப்பு மதிப்பெண்ணான 29.86 மதிப்பெண் ஆகும். குழந்தை பயணிகளின் பாதுகாப்பில் இந்த டாடா எலக்ட்ரிக் கார் 49க்கு 44.95 மதிப்பெண்களை பெற்றுள்ளது.

நெக்ஸான் இவி எலக்ட்ரிக் காரில் பயணிகளின் பாதுகாப்புக்கு 6 ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், விபத்து நேரத்தில் தானாக இறுக்கிக் கொள்ளும் சீட் பெல்ட், சீட் பெல்ட் அணியாததை எச்சரிக்கும் ரிமைண்டர், டிராக்‌ஷன் கண்ட்ரோல், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஏறுமுகமான சாலையில் பார்க் செய்வதற்கான உதவி, ரிவர்ஸில் காரை பார்க் செய்வதற்கு உதவியாக சென்சார்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நெக்ஸான் இவி எலக்ட்ரிக் கார் பாதுகாப்பானது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது. குறிப்பாக, குழந்தைகள் பாதுகாப்பில் 44.95 மதிப்பெண்கள் என்பது அதிகப்படியான மதிப்பெண்கள் ஆகும். இதன் மூலமாக, இந்தியாவின் மிகவும் பாதுகாப்பான கார்களுள் முதன்மையானதாக டாடா நெக்ஸான் தொடர்ந்து தனது இருப்பை நிலைநிறுத்தி வருகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 24, 2025, 11:17 [IST]
English summary
Tata nexon ev 45kwh variant gets 5 star ratings in bharat ncap crash test
மேலும்... #tata motors #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+