டாடா எலெக்ட்ரிக் கார் சேல்ஸ் எகிற போகுது! போட்டி நிறுவனங்களுக்கு இப்பவே தொடை நடுங்க ஆரம்பிச்சிருக்கும்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எலெக்ட்ரிக் கார்களில் (Electric Cars) ஒன்று டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV). இதில், தற்போது அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரின் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Empowered +A 45 என்ற வேரியண்ட்டில், அடாஸ் வசதியை வாடிக்கையாளர்கள் பெறலாம். லெவல் 2 அடாஸ் மட்டுமல்லாது, ரியர் விண்டோ சன்ஷேடு மற்றும் ஆம்பியண்ட் லைட்டிங் ஆகிய வசதிகளையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரின் இந்த வேரியண்ட்டில் வழங்கியுள்ளது.

Tata Nexon EV

இவை தவிர, டிசைன் (Design), வசதிகள் (Features) மற்றும் பேட்டரி ஆப்ஷன் (Battery Option) ஆகிய அம்சங்களில் வேறு எந்த மாற்றங்களும் இல்லை. எனவே பனரோமிக் சன்ரூஃப், 12.3 இன்ச் ஹார்மன் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகிய வசதிகளும், Empowered +A 45 வேரியண்ட்டில் கிடைக்கும்.

அத்துடன் வி2வி சார்ஜிங் மற்றும் வி2எல் தொழில்நுட்பம் ஆகிய வசதிகளையும் வாடிக்கையாளர்கள் பெறலாம். செயல்திறனை பொறுத்தவரையில், 45 kWh பேட்டரி ஆப்ஷனை, டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரின் Empowered +A 45 வேரியண்ட் கொண்டுள்ளது. இதன் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 489 கிலோ மீட்டர்கள் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Tata Nexon EV Launched With ADAS

எனினும் ரியல் வேர்ல்டு ரேஞ்ச் என்பது, அதாவது நடைமுறை பயன்பாட்டில், 350-375 கிலோ மீட்டர்கள் ரேஞ்ச் மட்டுமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதுவும் கூட நல்ல டிரைவிங் ரேஞ்ச்தான். இன்னும் புரியும்படி தெளிவாக சொல்வதென்றால், ஒரு முறை சார்ஜ் செய்தாலே, சென்னையில் இருந்து பெங்களூருக்கு மிகவும் எளிதாக வந்து விட முடியும்.

அதே நேரத்தில் 60 kW டிசி ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால், இதன் பேட்டரியை, வெறும் 40 நிமிடங்களிலேயே 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்பி விடலாம். எனவே பேட்டரி சார்ஜ் ஆவதற்கு எடுத்து கொள்ளும் நேரம் மற்றும் டிரைவிங் ரேஞ்ச் ஆகியவை எல்லாம் பெரிய தலைவலியாக இருக்காது.

அடாஸ் வசதியுடன் புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரின் Empowered +A 45 வேரியண்ட்டின் விலை 17.29 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த வேரியண்ட்டில் டார்க் மற்றும் ரெட் டார்க் ஆகிய வெர்ஷன்களையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

டார்க் மற்றும் ரெட் டார்க் வெர்ஷன்களின் விலை வெறும் 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே அதிகம். அதாவது அவற்றின் விலை 17.49 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தியில் நாங்கள் கூறியுள்ள அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் கார், ஏற்கனவே பாதுகாப்பான ஒன்றுதான். இந்த சூழலில் அடாஸ் வசதி அறிமுகம் செய்யப்பட்டிருப்பதால், அதன் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கும். எனவே வரும் மாதங்களில், டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரின் விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இது டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரின் நேரடி போட்டி மாடலான எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV) எலெக்ட்ரிக் காருக்கு விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்தலாம். அத்துடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையானது, சந்தைக்கு புதுவரவான வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 (VinFast VF 6) எலெக்ட்ரிக் காருக்கும் விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 10, 2025, 20:37 [IST]
English summary
Tata nexon ev launched with adas price driving range features all details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+