விற்பனை ஒருபக்கம் குறைஞ்சிக்கிட்டு இருக்கு! டாடா நிறுவனம் திடீர்னு இப்படி செய்யும்னு யாரும் எதிர்பார்க்கல

டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம். குறிப்பாக, எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தியில் கடந்த சில வருடங்களாகவே தீவிரமாக உள்ளது. குறிப்பாக, நெக்ஸான் இவி (Nexon EV)-ஐ டாடா மோட்டார்ஸின் தரமான தயாரிப்புகளுள் ஒன்றாக சொல்லலாம். ஏனெனில், டாடா நெக்ஸான் காருக்கு ஏற்கனவே சிறப்பான வரவேற்பு கிடைத்து வந்ததால், அதன் எலக்ட்ரிக் வெர்சனாக நெக்ஸான் இவி அறிமுகம் செய்யப்பட்டதும் கஸ்டமர்கள் குவிய துவங்கினர். இந்த நிலையில், நெக்ஸான் இவி காரின் வேரியண்ட்களுள் ஒன்றின் விற்பனையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சைலண்டாக நிறுத்திக் கொண்டுள்ளது.

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கு மெல்ல மெல்ல வரவேற்பு அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் கார்களுக்கு பதிலாக எலக்ட்ரிக் கார்களை வாங்கும் கஸ்டமர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மக்களிடையே கடந்த சில வருடங்களில் ஏற்பட்ட இந்த மாற்றத்திற்கு டாடா மோட்டார்ஸின் நெக்ஸான் இவி எலக்ட்ரிக் கார் மிக முக்கியமான காரணம் என்றுதான் சொல்ல வேண்டும்.

tata nexon ev long-range variant

இருப்பினும், நெக்ஸான் இவி எலக்ட்ரிக் காரின் வேரியண்ட்களுள் ஒன்றை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எந்தவொரு அறிவிப்பும் இன்றி சைலைண்டாக நிறுத்திக் கொண்டுள்ளது. 2020ஆம் ஆண்டின் துவக்கத்தில், கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் ஏற்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நெக்ஸான் இவி எலக்ட்ரிக் காரை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது.

ஆரம்பத்தில் வேறு விதமான பெயர்களில் நெக்ஸான் இவி எலக்ட்ரிக் காரின் வேரியண்ட்கள் அழைக்கப்பட்டன. அதன்பின், மீடியம்-ரேஞ்ச், 45 மற்றும் லாங்-ரேஞ்ச் என வேரியண்ட்களின் பெயர்கள் மாற்றப்பட்டன. மீடியம்-ரேஞ்ச் என்பது விலை குறைவான எண்ட்ரீ-லெவல் வேரியண்ட் ஆகும். 45 மற்றும் லாங்-ரேஞ்ச் என்பன அதற்கு அடுத்தடுத்த நிலையில் உள்ள வேரியண்ட்கள் ஆகும்.

tata nexon ev long-range variant

பெயருக்கேற்ப, மீடியம்-ரேஞ்ச் வேரியண்ட்டை காட்டிலும் லாங்-ரேஞ்ச் வேரியண்ட்டில் கொஞ்சம் அதிக ரேஞ்ச் கிடைத்து வந்தது. இதில், லாங்-ரேஞ்ச் வேரியண்ட்டின் விற்பனை தான் தற்போது சைலண்ட்டாக நிறுத்திக் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, டாடா மோட்டார்ஸின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் நெக்ஸான் இவி காருக்கான பக்கத்தில் லாங்-ரேஞ்ச் வேரியண்ட்டின் பெயர் நீக்கப்பட்டு, மீடியம்-ரேஞ்ச் மற்றும் 45 வேரியண்ட்களின் பெயர்கள் மட்டும் இடம்பெற்றுள்ளதை காணலாம்.

மீடியம்-ரேஞ்ச் வேரியண்ட்டின் பெயர் சுருக்கமாக 'MR' என அழைக்கப்படுகிறது. லாங்-ரேஞ்ச் வேரியண்ட்டின் விற்பனை நிறுத்தப்பட்டு இருப்பது தவிர்த்து, நெக்ஸான் இவி எலக்ட்ரிக் காரில் வேறெந்த மாற்றமும் இல்லை. காரின் விலைகளில் கூட எந்த மாற்றமும் இல்லை. டாடா நெக்ஸான் இவி மீடியம்-ரேஞ்ச் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.12.49 லட்சத்தில் இருந்தும், 45 வேரியண்ட்டின் விலைகள் ரூ.13.99 லட்சத்தில் இருந்தும் துவங்குகின்றன.

tata nexon ev long-range variant

நெக்ஸான் இவி மீடியம்-ரேஞ்ச் வேரியண்ட்டில் பொருத்தப்படும் 30kWh பேட்டரி அதிகப்பட்சமாக 275கிமீ வரையிலான ரேஞ்சையும், 45 வேரியண்ட்டில் பொருத்தப்படும் 45kWh பேட்டரி ஆனது 489கிமீ வரையிலான ரேஞ்சையும் வழங்கக்கூடியதாக உள்ளது. விற்பனையில் டாடா நெக்ஸான் இவி காருக்கு போட்டியாக மஹிந்திரா எக்ஸ்யூவி400 மற்றும் எம்ஜி விண்ட்சர் இவி எலக்ட்ரிக் கார்கள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: முன்னதாக, டாடா நெக்ஸான் இவி காரின் மீடியம்-ரேஞ்ச் மற்றும் லாங்-ரேஞ்ச் என இரு வேரியண்ட்களின் விற்பனையும் நிறுத்தப்படும் என தகவல்கள் வெளியாகின. ஆனால், லாங்-ரேஞ்ச் வேரியண்ட்டின் விற்பனையை மட்டுமே தற்போதைக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நிறுத்தியுள்ளது. இந்த விலைமிக்க வேரியண்ட்டின் விற்பனை நிறுத்தப்பட்டு இருப்பினும், இன்னும் சில வாரங்களுக்கு ஸ்டாக்கில் உள்ள ஷோரூம்களில் கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 18, 2025, 23:36 [IST]
English summary
Tata nexon ev long range variant removed from website
மேலும்... #tata motors #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X