சம்பவம் லோடிங்! வேட்டியை மடித்து கட்டிய டாடா! போட்டி நிறுவனங்களை தலை தெறிச்சு ஓட விட போறாங்க!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எலெக்ட்ரிக் கார்களில் (Electric Cars) ஒன்று டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV). ஆனால் எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV) வடிவில், டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரில், புதிய வேரியண்ட் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அந்த வேரியண்ட்டின் பெயர் எம்பவர்டு+ ஏ (Empowered+ A) என்று இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், A என்பது அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) என்பதை குறிக்கிறது. ஆம், டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரில், அடாஸ் வசதி வழங்கப்படவுள்ளது.

டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரில் தற்போதைய நிலையில் அடாஸ் பாதுகாப்பு தொகுப்பின் எந்தவொரு வசதியும் வழங்கப்படுவதில்லை. ஆனால் கூடிய விரைவில், லெவல் 2 (Level 2) அடாஸ் பாதுகாப்பு தொகுப்பை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரில் வழங்கவுள்ளது.
இதன் மூலம் லெவல் 2 அடாஸ் பாதுகாப்பு தொகுப்பை பெறும் முதல் சப்-4 மீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார் என்ற பெருமையை டாடா நெக்ஸான் இவி பெறவுள்ளது. டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படவுள்ள லெவல் 2 அடாஸ் பாதுகாப்பு தொகுப்பில் ஏராளமான வசதிகள் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்ஸி பிரேக்கிங், ஃபார்வார்டு கொலிஸன் வார்னிங், ரியர் கொலிஸன் வார்னிங், லேன் டிபார்ச்சர் வார்னிங், லேன் கீப் அஸிஸ்ட் போன்ற வசதிகள் எல்லாம் மிகவும் முக்கியமானவையாக இருக்கலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து கார்வாலே தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதே நேரத்தில் லெவல் 2 அடாஸ் வசதியுடன் கூடிய டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரின் புதிய எம்பவர்டு+ ஏ வேரியண்ட்டில், 45 kWh பேட்டரி ஆப்ஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 489 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும்.
இது தொலை தூர பயணங்களையும் சௌகரியமாக மேற்கொள்வதற்கு ஏற்ற டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) என்பதில் துளியும் சந்தேகமில்லை. லெவல் 2 அடாஸ் தவிர, டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரின் புதிய எம்பவர்டு+ ஏ வேரியண்ட் ஏராளமான அதிநவீன வசதிகளையும் (Features) கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில், பனரோமிக் சன்ரூஃப், 31.24 செமீ சினிமாட்டிக் டச்ஸ்க்ரீன், ஏர் ப்யூரிஃபையர், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள் மற்றும் மழை வந்தால் தானாக இயங்க கூடிய வைப்பர்கள் போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமான வசதிகளாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், வி2வி சார்ஜிங் மற்றும் வி2எல் தொழில்நுட்பம் ஆகிய இந்த புதிய வேரியண்ட் கொண்டிருக்கும் என நம்பலாம். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரின் இந்த புதிய வேரியண்ட், இன்னும் ஒரு சில வாரங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில் இதன் விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்படும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: லெவல் 2 அடாஸ் தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களில் பிரபலமடைந்து வரும் ஒரு வசதி ஆகும். அத்தகைய வசதி வழங்கப்படுவதன் மூலமாக டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரின் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கும். இது டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரின் விற்பனை எண்ணிக்கை உயர்த்த உதவி செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








