குடும்பத்துல எல்லாரும் ஒரே கார்ல போகலாம்! இந்த காரை இப்ப அப்டேட் பண்ண போறாங்க!
பிரபலமான சப்-காம்பேக்ட் எஸ்யூவியான டாடா நெக்ஸான், அதன் அடுத்த தலைமுறை மாடலில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் சந்திக்க உள்ளது. 'கருட்' என்று அழைக்கப்படும் இந்த புதிய எடிசன். 2027ம் ஆண்டளவில் இந்தியாவில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நெக்ஸான், டாடா மாடல் வரிசையில், பஞ்ச் மாடலுக்கு அடுத்தபடியாக நன்கு விற்பனையாகும் மாடலாக இருந்து வருகிறது. 2017 இல் அறிமுகமானதிலிருந்து, இது இரண்டு முக்கிய அப்டேட்களை பெற்றுள்ளது.
வரும் புதிய நெக்ஸான் கார், X1 பிளாட்ஃபார்மை தொடர்ந்து பயன்படுத்தும், இது 1990 களின் இண்டிகாவின் கட்டமைப்பிலிருந்து அதன் மூலத்தைத் கொண்டுள்ளது. குறிப்பாக 2023 ஃபேஸ்லிஃப்டின் மூலம், இந்த பிளாட்ஃபார்ம் காலப்போக்கில் குறிப்பிடத்தக்க அப்டேட்களைப் பெற்றுள்ளது. புதிய தலைமுறை காரில், இது விரிவான கட்டமைப்பு மாற்றங்களை அடையும். 4 மீட்டருக்கு குறைவான இந்த எஸ்யூவியின் வெளிப்புற வடிவமைப்பு டாடாவின் சமீபத்திய வடிவமைப்பு மொழியுடன் இணைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளே, அடுத்த தலைமுறை நெக்ஸான் கார் புதிய அம்சங்களுடன் முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட உட்புறத்தை கொண்டிருக்கும். இந்த மாற்றங்கள் நவீன டிரெண்ட் உடன் ஒத்துப்போகவும் பயனர் அனுபவத்தை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அப்டேட்களைப் பற்றிய குறிப்பிட்ட விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்றாலும், அவை வாகனத்திற்கு புதிய தோற்றத்தையும் உணர்வையும் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஜின் ஆப்ஷன்களை பொறுத்தவரை, தற்போதைய பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் டீசல் இன்ஜின்கள் தொடர்ந்து இருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், வரும் BS7 மாசு கட்டுப்பாடு தரநிலைகள் மற்றும் இந்த பிரிவில் டீசலுக்கான குறைந்த தேவை காரணமாக டாடா மோட்டார்ஸ் 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜினை நிறுத்தலாம். விலையுயர்ந்த எஸ்சிஆர் அமைப்பை இணைக்காமல் BS7 விதிமுறைகளை பூர்த்தி செய்ய இந்த இன்ஜினை மேம்படுத்துவது விலை உயர்ந்ததாக இருக்கலாம்.

கம்பஷன் இன்ஜின் (ஐசிஇ) மாடலுடன், நெக்ஸான் ஈவியும் குறிப்பிடத்தக்க அப்டேட்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றங்களைப் பற்றிய விவரங்கள் தற்போது குறைவாக இருந்தாலும், அவை எலெக்ட்ரிக் வாகன சந்தையில் அதன் ஈர்ப்பை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் எலெக்ட்ரிக் வாகன விற்பனையும் அதிகமாக வாய்ப்புள்ளது
இரண்டாம் தலைமுறை நெக்ஸான் கார், மாருதி சுஸூகி பிரெஸ்ஸா, மஹிந்திரா XUV 3எக்ஸ்ஓ, கியா சோனெட், ஹூண்டாய் வென்யூ போன்ற மாடல்களுடன் தொடர்ந்து போட்டியிடும். டாடா மோட்டார்ஸ் 2027ம் ஆண்டளவில் நெக்ஸானின் கம்பஷன் மற்றும் இவி வேரியன்ட்களில் இந்த அப்டேட்டிற்குகளுக்குத் தயாராகும்போது; ஆர்வலர்கள் இந்த காருடன் வரக்கூடிய வசதிகள் அல்லது அம்சங்களைப் பற்றி மேலும் அறிவிப்புகளை எதிர்பார்க்கிறார்கள்.

இந்தியாவின் மோட்டார் வாகனத் துறையில் நிலைத்தன்மையை நோக்கி டாடா மோட்டார்ஸின் அர்ப்பணிப்பை காட்டுகிறது. மாசு கட்டுப்பாடு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி அதன் வாகனங்களை மேம்படுத்துவதற்கான அவர்களின் உறுதிப்பாடு காட்டுகிறது. இதனால் நெக்ஸான் கார் விரைவில் அப்டேட் செய்யப்பட்டால் அது மிகப்பெரிய அளவில் வரவேற்ப்பை பெறும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நிறுவனம் இந்த அப்டேட் செய்யப்பட்ட நெக்ஸான் காரை 2027ம் ஆண்டு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை மார்கெட்டில் என்ன விதமான மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை ஆய்வு செய்து அதற்கு ஏற்றார் போல அடுத்த தலைமுறை நெக்ஸான் காரின் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









