10ல 6 பேர் இந்த ரெண்டு மாடல் காரை தான் வாங்குறாங்க! ஏன் தெரியுமா?
டாடா நிறுவனம் தனது ஜூன் மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த விற்பனையில் 60 சதவீதம் வரை இரண்டு கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்
டாடா நிறுவனம் இந்தியாவில் சிறப்பாக வாகனங்களை விற்பனை செய்து வரும் நிறுவனமாக இருக்கிறது. இந்நிலயைி்ல் கடந்த ஜூன் மாதம் மொத்தம் 37,083 கார்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாத விற்பனையான 43257 என்ற எண்ணிக்கையை ஒப்பிடும் போது 15 சதவீம் குறைவாக விற்பனவையாகியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் நடந்த விற்பனையில் டாடா நிறுவனத்தின் நெக்ஸான் கார் மட்டும் மொத்தம் 11,602 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் மட்டும் 12,066 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது இந்த இரண்டு கார்களின் விற்பனை 4 சதவீதம் சரிவடைந்துள்ளது.
டாடா பஞ்ச் காரை பொருத்தவரை கடந்த மாதம் மொத்தம் 10,446 கார்கள் விற்பனையாகியுள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாத விற்பனையை ஒப்பிடும் போது விற்பனை மிகப்பெரிய சரீவை சந்தித்துள்ளுது. கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் மொத்தம் 18238 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 43 சதவீதம் அளவிற்கு விற்பனை சரிவடைந்துள்ளது.

டாடா நெக்ஸான் மற்றும் டாடா பஞ்ச் ஆகிய இரண்டு கார்களும் சேர்த்து மொத்தம் 22,048 கார்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த ஜூன் மாதம் நடந்த ஒட்டு மொத்த விற்பனையில் இந்த கார்கள் மட்டும் 59 சதவீத விற்பனையை பெற்றுள்ளது. இந்த நிறுவனம் மொத்தம் 8 மாடல்களில் கார்களை விற்பனை செய்தாலும் இந்த இரண்டு மாடல்கள் மட்டுமே அதிகமாக விற்பனையாகியுள்ளது. மற்ற 6 மாடல்கள் விற்பனை எண்கள் இதன் அருகில் கூட இல்லாமல் இருக்கிறது.
இந்த நிறுவனம் விற்பனை செய்யும் 3வது அதிக மாடல் கார் என்றால் அது அது டியாகோ கார் தான். இந்த கார் கடந்த ஜூன் மாதம் 6,032 கார்கள் விற்பனை செய்துள்ளது. இந்த மாடலின் விற்பனை கடந்த 2024 ஜூன் மாத விற்பனையை ஒப்பிடும் போது 17 சதவீதம் அதிகமாகியுள்ளது. டாடா அல்ட்ராஸ் கார் சமீபத்தில் தான் அதன் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அப்டேட் செய்தது. இந்நிலையில் இந்த காரின் விற்பனை 1 சதவீதம் அதிகமாகியுள்ளது.

டாடா நிறுவனத்தின் கர்வ் கார் நெக்ஸான் காரின் பாடி ஸ்டைலில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் கடந்த ஜூன் மாதம் வெறும் 2060 கார் தான் விற்பனையாகியுள்ளது. இந்த கார் நெக்ஸான் காரின் விற்பனையிலிருந்து 18 சதவீதம் அளவிற்கு விற்பனையாகியுள்ளது. டாடா ஹாரியர் கார் 1259 கார்களும், டாடா சஃபாரி கார் 922 கார்களும் விற்பனையாகியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டாடா நிறுவனம் வாகன விற்பனையில் மிகப்பெரிய அளவு வளர்ந்திருந்தாலும் கடந்த ஜூன் மாதம் எதிர்பார்த்த அளுவறி்கு விற்பனை நடைபெறவில்லை. இந்த நிறுவனத்தின் விற்பனையில் பாதிக்கு மேல் வெறும் 2 மாடல்களை மட்டுமே நம்பி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









