கார் வாங்க ஆள் இல்ல... காத்து வாங்க ஆரம்பித்த டாடா ஷோரூம்கள்... ஒரே நேரத்துல எல்லா பக்கமும் அடி விழுகுது...

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா நெக்ஸான் (Tata Nexon). சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த இந்த காரின் நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 15,397 நெக்ஸான் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 17,182 ஆக இருந்தது.

இதன் காரணமாக டாடா நெக்ஸான் கார் விற்பனையில் 10 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. பொதுவாக இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் (Top 10 Cars) பட்டியலில், டாடா நெக்ஸான் முன்னணி இடம் வகிக்கும்.

Tata Punch

ஆனால் சமீப காலமாக இந்த பட்டியலில் டாடா நெக்ஸான் கார் கொஞ்சம் கொஞ்சமாக பின்னடைவை சந்தித்து வருகிறது. நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் டாடா நெக்ஸான் காருக்கு இந்த பட்டியலில் 8வது இடம் மட்டுமே கிடைத்துள்ளது. பொதுவாக இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு 2 கார்கள்தான் மிகவும் அதிக விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தருகின்றன.

அதில் ஒன்று டாடா நெக்ஸான். இந்த கார் நடப்பு 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் விற்பனையில் 10 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மற்றொரு கார் டாடா பன்ச் (Tata Punch). இந்த காரும் நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் விற்பனையில் சொல்லி வைத்தாற்போல் 10 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

Tata Nexon EV

இந்த 2 கார்களும் வளர்ச்சி பாதைக்கு திரும்பினால் மட்டுமே, வரும் மாதங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்ய முடியும். இதற்கு தேவையான உறுதியான நடவடிக்கைகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எடுக்கும் என நாம் நம்பலாம். சரி, டாடா நெக்ஸான் காருக்கு வருவோம்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா நெக்ஸான் கார், 8-15.60 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபக்கம் டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் கார், 12.49-17.19 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூடிய விரைவில் நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரின் புதிய தலைமுறை மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அனேகமாக நடப்பு 2025ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரின் புதிய தலைமுறை மாடல் விற்பனைக்கு களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நடப்பு 2025ம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு இனிமையாக தொடங்கவில்லை. கார் விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்திருப்பதால், பங்கு சந்தையில் அதன் பங்குகளும் (Shares) சரிவை சந்திக்க தொடங்கியுள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வளர்ச்சி பாதைக்கு திரும்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரமிது.

More from DriveSpark

Article Published On: Saturday, February 8, 2025, 23:44 [IST]
English summary
Tata nexon sales report january 2025 10 per cent down
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+