உலகையே இந்தியாவை அண்ணாந்து பார்க்க வைத்த டாடா கார்! தலைவன் செஞ்சு விட்ட சம்பவம் அப்படி!

குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் (Safety Rating) வாங்கிய முதல் 'மேட் இன் இந்தியா' கார் என்ற பெருமை, டாடா நெக்ஸான் (Tata Nexon) வசம் உள்ளது. டாடா நெக்ஸான் கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாக, இந்த சாதனை மிக முக்கியமான காரணங்களில் ஒன்று.

டாடா நெக்ஸானுக்கு பிறகுதான், மற்ற இந்திய கார்கள் எல்லாம், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற தொடங்கின. எனவே இவ்விஷயத்தில், டாடா நெக்ஸான்தான் மற்ற கார்களுக்கு எல்லாம் தலைவன்! இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த டாடா நெக்ஸானின் நடப்பு 2025ம் ஆண்டு மே மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) வெளியாகியுள்ளது.

Tata Nexon Interior Design

இதன்படி பார்த்தால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம், நடப்பு 2025ம் ஆண்டு மே மாதம், 13,096 நெக்ஸான் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2024ம் ஆண்டு மே மாதம், 11,457 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 14 சதவீத வளர்ச்சியை டாடா நெக்ஸான் பதிவு செய்துள்ளது.

டாடா நெக்ஸான் கார், ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் என 2 வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் ஐசி இன்ஜின் வெர்ஷனின் ஆரம்ப விலை 8 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 15.60 லட்ச ரூபாயாக இருக்கிறது.

Tata Nexon

மறுபக்கம் டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 12.49 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 17.19 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

கியா சொனெட் (Kia Sonet), மாருதி பிரெஸ்ஸா (Maruti Brezza), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) போன்ற கார்கள் உடன், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் ஐசி இன்ஜின் வெர்ஷன் போட்டியிட்டு வருகிறது.

மறுபக்கம் டாடா நெக்ஸான் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆனது, இந்திய சந்தையில் மஹிந்திரா எக்ஸ்யூவி 400 இவி (Mahindra XUV 400 EV) மற்றும் எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV) போன்ற கார்கள் உடன் விற்பனையில் போட்டியிட்டு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் ஒரு புதிய காரை வாங்க வேண்டும் என நினைக்க கூடிய வாடிக்கையாளர்கள், டாடா நெக்ஸான் காரை பரிசீலனை செய்யலாம். இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, June 22, 2025, 23:46 [IST]
English summary
Tata nexon sales report may 2025 14 per cent growth
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+