விஜய்யை பாக்க வர்ற கூட்டத்தை விட இந்த காரை வாங்க டாடா ஷோரூமுக்கு வர்ற கூட்டம் பயங்கரமா இருக்கு! விலை இவ்ளோதானா
இந்திய சந்தையில், நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம், மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியல் (Top 10 Cars November 2025), தற்போது வெளியாகியுள்ளது. காடிவாடி தளத்தில் வெளியாகியுள்ள இந்த பட்டியலில் டாடா நெக்ஸான் (Tata Nexon) முதல் இடத்தை பிடித்துள்ளது.
நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் 22,434 டாடா நெக்ஸான் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் வெறும் 15,329 டாடா நெக்ஸான் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், 7,105 டாடா நெக்ஸான் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் டாடா நெக்ஸான் கார் விற்பனையில் 46 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அத்துடன் இந்த பிரம்மாண்டமான வளர்ச்சியின் மூலமாக, நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம், இந்தியாவிலேயே மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட கார் என்ற பெருமையையும் டாடா நெக்ஸான் தன்வசப்படுத்தியுள்ளது.
குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் (5 Star Safety Rating) பெற்ற முதல் இந்திய கார் என்ற பெருமை டாடா நெக்ஸான் காருக்கு உண்டு. தற்போதைய நிலையில் ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் என 2 வெர்ஷன்களில் டாடா நெக்ஸான் கார் கிடைத்து வருகிறது.

இதில், ஐசி இன்ஜின் வெர்ஷனின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 7.32 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 12.49 லட்ச ரூபாயாக உள்ளது. இவை அனைத்துமே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
இந்திய சந்தையில், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), கியா சொனெட் (Kia Sonet), மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3X0), ஸ்கோடா கைலக் (Skoda Kylaq), ரெனால்ட் கைகர் (Renault Kiger) மற்றும் நிஸான் மேக்னைட் (Nissan Magnite) போன்ற கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக டாடா நெக்ஸான் கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மிகவும் பாதுகாப்பானது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், டாடா நெக்ஸான் கார் ஏற்கனவே மிகவும் பிரபலமாகதான் இருந்து வருகிறது. ஆனால் அதன் தற்போதைய மிக பிரம்மாண்டமான எழுச்சிக்கு பண்டிகை காலம் மற்றும் ஜிஎஸ்டி வரி குறைப்பு போன்றவை மிகவும் முக்கியமான காரணங்களாக இருக்கலாம்.
ஓரளவிற்கு குறைவான விலையில் மிகவும் பாதுகாப்பான ஒரு சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு டாடா நெக்ஸான் மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. டாடா நெக்ஸான் கார் இந்திய சந்தையில் கடந்த 2017ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த சூழலில் ஒட்டுமொத்தமாக 9 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை டாடா நெக்ஸான் கார் வெகு சமீபத்தில் கடந்தது. தற்போதைய வேகத்தில் சென்றால் கூடிய விரைவிலேயே 1 மில்லியன் (10 லட்சம்) யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை டாடா நெக்ஸான் கார் கடந்து விடும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications








