27 கிமீ மைலேஜ்! விலை இவ்ளோதானா! இந்திய கார் மார்க்கெட்டை தலைகீழா புரட்டி போட்ட டாடா தயாரிப்பு!

இந்திய சாலைகளை ஆட்சி செய்து கொண்டிருக்கும் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்று டாடா பன்ச் (Tata Punch). மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரகத்தை சேர்ந்த இந்த கார், தற்போது மிகவும் பிரம்மாண்டமான உற்பத்தி மைல்கல் (Production Milestone) ஒன்றை கடந்துள்ளது. 6 லட்சம் யூனிட்கள் உற்பத்தி என்பதுதான் அந்த மைல்கல் ஆகும்.

டாடா பன்ச் கார், கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மிகவும் விலை குறைவானது மற்றும் மிகவும் பாதுகாப்பானது என்பதால், எடுத்த எடுப்பிலேயே டாடா பன்ச் காரின் விற்பனை டாப் கியரில் சென்றது. இதன் காரணமாக 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே 1 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை டாடா பன்ச் கடந்து விட்டது.

Tata Punch Side View

இதை தொடர்ந்து 2 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை 2023ம் ஆண்டு மே மாதத்தில் டாடா பன்ச் எட்டியது. அதே 2023ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், 3 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை டாடா பன்ச் கடந்தது. இதை தொடர்ந்து 2024ம் ஆண்டு ஜூலை மாதம், 4 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை டாடா பன்ச் கடந்து சென்றது.

இந்த வரிசையில் 5 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல், டாடா பன்ச் காரால், 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் கடக்கப்பட்டது. இந்த வரிசையில் 2025ம் ஆண்டு ஜூலை மாதமான தற்போது 6 லட்சம் யூனிட்கள் உற்பத்தி என்ற மைல்கல்லை கடந்து டாடா பன்ச் அசத்தியுள்ளது.

Tata Punch 6 Lakh Units Production Milestone

டாடா பன்ச் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இன்னும் முழுமையாக 4 ஆண்டுகள் கூட முடியவில்லை. ஆனால் அதற்குள்ளாகவே 6 லட்சம் டாடா பன்ச் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு விட்டன. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமான பத்திரிக்கை செய்தியில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா பன்ச் கார் தற்போது ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் என 2 வெர்ஷன்களில் கிடைத்து வருகிறது. இதில், ஐசி இன்ஜின் வெர்ஷனின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 6.20 லட்ச ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 10.32 லட்ச ரூபாயாக இருக்கிறது.

ஐசி இன்ஜின் வெர்ஷனை பொறுத்தவரையில், அதிகபட்சமாக சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 26.99 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்க கூடியதாக உள்ளன. மறுபக்கம் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 9.99 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 14.44 லட்ச ரூபாயாக உள்ளது.

இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரை பொறுத்தவரையில், அதன் 35 kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்ட வேரியண்ட்கள் அதிகபட்சமாக 421 கிலோ மீட்டர் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) வழங்குகின்றன.

டாடா பன்ச் கார் விலை குறைவானது மற்றும் அதிக மைலேஜ்/டிரைவிங் ரேஞ்ச் வழங்க கூடியது என்பதுடன் மட்டுமல்லாது, பாதுகாப்பானதும் கூட. இந்த கார் குளோபல் என்சிஏபி (Global NCAP) மற்றும் பாரத் என்சிஏபி (Bharat NCAP) அமைப்புகளின் மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (5 Star Safety Rating) பெற்று அசத்தியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: விலை, மைலேஜ்/டிரைவிங் ரேஞ்ச் மற்றும் பாதுகாப்பு என பல்வேறு அம்சங்களிலும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் காரணத்தால்தான், இந்திய சந்தையில் டாடா பன்ச் மிகவும் வெற்றிகரமான ஒரு தயாரிப்பாக உள்ளது என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 17, 2025, 18:21 [IST]
English summary
Tata punch 6 lakh units production milestone price mileage driving range safety
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+