28% ஜிஎஸ்டி கிடையாது! வெறும் 14 % ஜிஎஸ்டி கட்டி இந்த காரை வாங்குனா ரூ1.75 லட்சம் மிச்சம் பண்ணலாம்! எப்படி?

டாடா மோட்டார்ஸின் பஞ்ச் எஸ்யூவி இந்திய வாடிக்கையாளர்களிடையே அதிகம் பிரபலமாகி வருகிறது, அந்நிறுவனத்திற்கும் நாடு முழுவதும் மிகவும் விற்பனையாகும் காராகவும் இருக்கிறது. இப்போது, பஞ்ச் எஸ்யூவி ராணுவ கேண்டீன் ஸ்டோர்ஸ் டிபார்ட்மென்ட் (சி.எஸ்.டி) மூலம் விற்பனையில் கிடைக்கிறது. வரி சேமிப்பில் ஆர்வமுள்ள இராணுவப் பணியாளர்களுக்கு இது ஒரு பெரிய பலனை தரும் எந்த காரை எப்படி குறைந்த விலையில் வாங்குவது? முழுமையான விபரங்களை இங்கே காணுங்கள்.

ராணுவ கேண்டீன்களில் இருந்து காரை வாங்கும் போது,அதற்கான ஜிஎஸ்டி வரி 28% ஐ விட 14% மட்டுமே ஜி.எஸ்.டி விதிக்கப்படுகிறது. இதனால் ராணுவ வீரர்கள் நாம் செலுத்தும் வரியில் பாதியை செலுத்தினால் போதும் , இதனால் கணிசமான சேமிப்பு ஏற்படுகிறது. உதாரணமாக, பஞ்ச் பியூர் வேரியன்ட் ரூ 5.6 லட்சத்தில் விற்பனையாகிறது, அதேசமயம் ஷோரூம்களில் ரூ 6 லட்சம் என்ற வகையில் விற்பனையாகிறது, தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்டை பொறுத்து Rs 1.72 லட்சம் வரை சேமிக்க முடியும்

பாதுகாப்பு அமைச்சகத்தால் கண்காணிக்கப்படும் ராணுவ கேண்டீன்கள்டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களில் பரவியுள்ள 34 விற்பனை நிலையங்களை கொண்ட ஒரு அரசுக்கு சொந்தமான நிறுவனம். இந்திய ஆயுதப் படைகளால் நடத்தப்படும் இந்த நிறுவனம் உணவு மற்றும் மருத்துவப் பொருட்கள் முதல் வீட்டுப் உபயோக பொருட்கள் மற்றும் வாகனங்கள் வரை பல்வேறு வகையான பொருட்களை குறைந்த விலையில், ராணுவ வீரர்களுக்கு மட்டுமே வழங்குகிறது.

தகுதி வாய்ந்த வாடிக்கையாளர்களில் பணிபுரியும் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ பணியாளர்கள், இராணுவப் பணியாளர்களின் விதவை மனைவிகள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பாதுகாப்பு சிவில் பணியாளர்கள் ஆகியோர்கள் மட்டுமே இங்க பொருட்களை வாங்க முடியும். இந்த முயற்சி தகுதி வாய்ந்த நபர்களுக்கு நிதி ரீதியாக மட்டுமல்லாமல், நாட்டிற்கான அவர்களின் சேவைக்கு சப்போர்ட் செய்யும் வகையில் வழங்கப்படுகிறது

Tata Punch CSD Price Comparison

சி.எஸ்.டி மற்றும் சிவில் ஷோரூம்களுக்கு இடையிலான விலை வேறுபாடு பல்வேறு பஞ்ச் வேரியன்ட்களுக்கு தகுந்தார் போல் மாறுபடும். குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, அட்வெஞ்சர் வேரியன்ட் ராணுவ கேண்டீன் மூலம் Rs 6.3 லட்சத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் ஷோரூம்களில் Rs 7.17 லட்சம் என்ற விலையில் கிடைக்கிறது. இந்த காரை ராணுவ கேண்டீனில் வாங்கினால் Rs 87 ஆயிரம் சேமிப்பு கிடைக்கிறது.

அதேபோல், கிரியேட்டிவ் ஏ.எம்.டி போன்ற டாப் வேரியன்ட் கார் ராணுவ மார்கெட்டில் Rs 8.6 லட்சத்திற்கு கிடைக்கின்றன. இதே காரில் ஷோரூம் விலை Rs 9.72 லட்சத்தில் கிடைக்கிறது. இந்த காரை ராணுவு கேண்டீன் மூலம் வாங்கினால் ரூ. 1.12 லட்சம் சேமிப்பாகும்.

Tata Punch CSD Price Comparison

இத்தகைய விலை நிர்ணய யுத்திகள் தகுதி வாய்ந்த நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அதே நேரம் குறிப்பிட்ட நபர்கள் எத்தனை கார்கள் வாங்கலாம். எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை ராணுவ கேண்டீன் மூலம் கார் வாங்கலாம் என்ற கட்டுப்பாடுகளும் உள்ளன, இதனால் பஞ்ச் எஸ்யூவி காரை வாங்க விரும்பும் ராணுவ வீரர்கள் இதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

டாடா பஞ்ச் கார் அதன் குறைந்த விலைக்காக மட்டுமல்லாமல், அதன் பிரபலமான அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகளுக்காகவும் தனித்து நிற்கிறது. இந்த காரில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது, இது 6000 ஆர்.பி.எம்.மில் அதிகபட்ச பவராக 86 பி.எஸ். பவரை வழங்குகிறது மற்றும் 3300 ஆர்.பி.எம்.மில் 113 என்.எம். டார்க் திறனை உருவாக்குகிறது.

இந்த கார் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸை கொண்டுள்ளது. இது மட்டுமல்லாமல் மற்றொரு ஆப்னுனாக 5-வேக ஏ.எம்.டி கியர் பாக்ஸ் ஆப்ஷனும் உள்ளது. எரிபொருள் சிக்கனத்தைப் பொறுத்தவரை, பஞ்ச் மேனுவல் கியர் பாக்ஸ் 18.97 மைலேஜையும் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் 18.82 மைலேஜையும் வழங்குகிறது. மாசு இல்லாத பயணத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு எலெக்ட்ரிக் மாடல் காரும் உள்ளது. .

இந்த எஸ்யூவி காரின் உள்ளே 7-இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆட்டோ ஏ.சி, ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்ஸ், கனெக்டெட் க கார் தொழில்நுட்பம் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட பல்வேறு நவீன அம்சங்களும் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு என்பது டாடா பஞ்ச் கார் சிறந்து விளங்கும் மற்றொரு துறை, இது உலகளாவிய என்.சி.ஏ.பி மூலம் பெரியவர்களின் பயணிகள் பாதுகாப்புக்காக 5 ஸ்டார் ரேட்டிங்கையும், குழந்தைகளின் பயணிகள் பாதுகாப்புக்காக 4 ஸ்டார் ரேட்டிங்கையும் பெற்றுள்ளது.

இது நெக்ஸான் மற்றும் ஆல்ட்ரோஸ் ஆகியவற்றிற்குப் பிறகு டாடா மோட்டார்ஸின் மூன்றாவது வாகனமாக, அத்தகைய உயர் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது, தங்கள் பயணிகளின் நலனில் சமரசம் செய்யாத வாகனங்களை உற்பத்தி செய்வதில் அந்நிறுவனத்தின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸின் பஞ்ச் எஸ்யூவி விற்பனை விவரங்களில் ஆதிக்கம் செலுத்துவதைத் தொடர்ந்து, ராணுவ கேண்டீன் மூலம் தகுதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு கணிசமான வரி சேமிப்பையும் வழங்குகிறது. அதன் குறைந்த விலை, செயல்திறன் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் இணைந்து, பரவலான வாடிக்கையாளர்களுக்கு ஈர்க்கக்கூடிய ஆப்ஷனாக அமைகிறது. இதன் பிரிவில் முன்னணி வாகனமாக அதன் நிலையை மேலும் வலுப்படுத்துகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, March 21, 2025, 19:00 [IST]
English summary
The Tata Punch SUV has emerged as India's best-selling vehicle, now available through the Canteen Stores Department, offering substantial tax savings for military personnel. With competitive pricing and impressive safety features, the Punch stands out as an attractive option for eligible buyers.
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X