ஷோரூமுக்கு வர்றவங்க இந்த கலர் தான் வேணும்னு அடம்பிடிச்சு வாங்க போறாங்க! சார்ஜிங் நேரமும் குறைஞ்சிடுச்சு!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் விற்பனை செய்யப்படும் எலக்ட்ரிக் கார்களுள் (Electric Cars) ஒன்று, பஞ்ச் இவி (Punch EV) ஆகும். இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரம் யூனிட்களுக்கும் மேல் விற்பனை செய்யப்படும் பஞ்ச் காரின் எலக்ட்ரிக் வெர்சனாக பஞ்ச் இவி விளங்குகிறது. இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கும் எலக்ட்ரிக் கார்களுள் பஞ்ச் இவி ஒன்றாகும்.

அந்த அளவிற்கு அளவில் சிறியதான தோற்றத்தை கொண்டதாக பஞ்ச் இவி விளங்குகிறது. அளவில் சிறியதான எலக்ட்ரிக் காராக இருப்பினும், வாடிக்கையாளர்களை கவர அவ்வப்போது புது, புது அப்டேட்களை பஞ்ச் இவி காரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொடர்ச்சியாக கொண்டுவந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது புதியதாக இரு கலர் ஆப்ஷன்கள் பஞ்ச் இவி காரில் வழங்கப்பட்டு உள்ளன.

tata punch ev new colour options

பியூர் கிரே (Pure Grey) மற்றும் சூப்பர்நோவா காப்பர் (Supernova Copper) என்பன அந்த இரு புதிய கலர் ஆப்ஷன்கள் ஆகும். இதில், பியூர் கிரே நிறத்தில் கருமை கலந்த வெண்மை நிறத்தில் பஞ்ச் இவி கிடைக்கும். அதுவே, சூப்பர்நோவா காப்பர் கலர் ஆப்ஷனில் செம்பு நிறத்தில் கார் கிடைக்கும்.

ஆனால், இந்த இரு புதிய கலர் ஆப்ஷன்களிலும் பஞ்ச் இவி காரின் மேற்கூரை கருப்பு நிறத்தில்தான் கிடைக்கும். இந்த புதிய கலர் ஆப்ஷன்களுடன் சேர்த்து, எம்பவர்டு ஆக்ஸைடு, சீவீட், ஃபயர்லெஸ் ரெட், டேடோனா கிரே மற்றும் பிரிஸ்டைன் வெள்ளை என்கிற வழக்கமான கலர் ஆப்ஷன்களிலும் பஞ்ச் இவி எலக்ட்ரிக் கார் தொடர்ந்து கிடைக்கும்.

tata punch ev new colour options

புதிய கலர் ஆப்ஷன் உடன் சேர்த்து, பஞ்ச் இவி எலக்ட்ரிக் காரின் லாங் ரேஞ்ச் வெர்சனுக்கு ஃபாஸ்ட்-சார்ஜிங் (Fast-charging) வசதியில் புதிய அப்டேட்டை டாடா மோட்டார்ஸ் கொண்டுவந்துள்ளது. இந்த டாடா எலக்ட்ரிக் கார் ஷார்ட் ரேஞ்ச் மற்றும் லாங் ரேஞ்ச் என இரு விதமான வெர்சன்களில் விற்பனை செய்யப்படும் நிலையில், அவற்றுள் லாங் ரேஞ்ச் வெர்சனை இனி டிசி ஃபாஸ்ட்-சார்ஜிங்கில் முன்பை விட விரைவாக சார்ஜ் நிரப்பலாம்.

பஞ்ச் இவி காரின் லாங் ரேஞ்ச் வெர்சனின் பேட்டரியை டிசி ஃபாஸ்ட்-சார்ஜரில் 10%-இல் இருந்து 80% சார்ஜ் நிரப்ப முன்பு 56 நிமிடங்கள் தேவைப்பட்டது. ஆனால், இனி 40 நிமிடங்களிலேயே 10%- 80% சார்ஜை நிரப்பி விடலாம். இவை தவிர்த்து, பஞ்ச் இவி காரில் வேறெந்த அப்கிரேட்களையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கொண்டுவரவில்லை.

எஸ்யூவி (SUV) ரக கார் என்பதால், நிமிர்ந்த தோற்றத்தை கொண்ட பஞ்ச் இவி எலக்ட்ரிக் காரின் முன்பக்கத்தில் காரின் முழு அகலத்திற்கும் எல்இடி டி.ஆர்.எல்-கள் வழங்கப்படுகிறது. இதன் காரணமாகவே, மாடார்னான தோற்றத்தில் பஞ்ச் இவி காட்சியளிக்கிறது. எலக்ட்ரிக் காராக இருப்பினும், பஞ்ச் இவி காரின் முன்பக்கத்தில் இரு சிறு சிறு துளைகள் வழங்கப்படுகின்றன.

அளவில் சிறியதான கார் என்பதால், சக்கரங்களுக்கு மேலே வழங்கப்படும் பேனல்களை காரில் இருந்து வெளியே தெரியும் வகையில் வழங்குகின்றனர். மேற்கூரையில் கம்பிகளில் உலோகம் வெளியே தெரியாத வகையில் கிளாடிங் செய்யப்படுகிறது. இவை எல்லாம் சேர்ந்து, பஞ்ச் இவி எலக்ட்ரிக் காருக்கு முரட்டுத்தனமான ரக்டு தோற்றத்தை வழங்குகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்சமயம் அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துவரும் நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் விளங்கினாலும், எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் இந்த நிறுவனம் கடந்த 1 வருடமாக பெரியதாக முன்னேற்றம் காணாமல் உள்ளது. இதற்கு, எம்ஜி மோட்டார் (MG Motor), மஹிந்திரா (Mahindra) போன்ற நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் இறங்கியது காரணமாக விளங்கும் நிலையில், பஞ்ச் இவி எலக்ட்ரிக் காரின் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியாக அதில் இரு புதிய கலர் ஆப்ஷன்கள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

More from DriveSpark

Article Published On: Friday, August 15, 2025, 5:00 [IST]
English summary
Tata punch ev electric car gets two new colour options check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+