இந்தியாவையே மிரள விட போகும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்! டாடா வெறித்தனமா வேலை செஞ்சுகிட்டு இருக்கு!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எலெக்ட்ரிக் கார்களில் (Electric Cars) ஒன்று டாடா பன்ச் இவி (Tata Punch EV). இது டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் விற்பனை செய்யும் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாகும்.
டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரில், எலெக்ட்ரிக் சன்ரூஃப், மூட் லைட்கள், சுறா துடுப்பு ஆன்டெனா, டைமண்ட் கட் அலாய் வீல்கள், கூல்டு க்ளவ் பாக்ஸ், 360 டிகிரி சர்ரவுண்ட் வியூ கேமரா, பிளைண்ட் ஸ்பாட் வியூ மானிட்டர், 6 ஏர்பேக்குகள் மற்றும் ஹில் ஹோல்டு கண்ட்ரோல் போன்ற வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்படுகின்றன.

அத்துடன் ஏக்யூஐ டிஸ்ப்ளே உடன் ஏர் ப்யூரிஃபையர், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், செல்போன்களை சார்ஜ் செய்வதற்காக யூஎஸ்பி டைப் சி ஃபாஸ்ட் சார்ஜிங் போர்ட், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஏறுவது மற்றும் இறங்குவதை எளிதாக்க 90 டிகிரி கோணத்தில் திறக்கும் டோர்கள் போன்ற வசதிகளும் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் க்ரூஸ் கண்ட்ரோல், மழை வந்தால் தானாகவே இயங்க கூடிய வைப்பர்கள், 26.03 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 26.03 செமீ டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே போன்ற வசதிகளையும் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் கொண்டுள்ளது.

இது பாரத் என்சிஏபி (Bharat NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் (5 Star Safety Rating) பெற்ற கார்களில் ஒன்றாகும். செயல்திறனை பொறுத்தவரையில், டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரில், 25 kWh மற்றும் 35 kWh என 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்பட்டுள்ளன.
இவற்றின் டிரைவிங் ரேஞ்ச் முறையே 265 கிலோ மீட்டர்கள் மற்றும் 365 கிலோ மீட்டர்கள் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழலில் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாராகி வருகிறது.
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வரும் 2026ம் ஆண்டில் (அடுத்த ஆண்டு) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கார்வாலே தளம் தற்போது செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலில், ஏராளமான டிசைன் (Design) மாற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம்.
அதேபோல் தற்போது இருப்பதை காட்டிலும் பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற பல்வேறு புதிய வசதிகளையும், டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலில், நாம் எதிர்பார்க்க முடியும். ஆனால் ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் மட்டுமே என்பதால், பேட்டரி ஆப்ஷன்களில் மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 9.99 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 14.44 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
ஆனால் டிசைன் மாற்றங்கள் செய்யப்படுவதாலும், புதிய வசதிகள் வழங்கப்படுவதாலும், ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை சற்று உயர்த்தப்படலாம். இருப்பினும் இது சிறிய அளவிலான விலை உயர்வாக மட்டும்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்தியாவின் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று என்ற பெருமையை டாடா பன்ச் இவி தொடர்ந்து தக்கவைத்து கொள்ளும் என நாம் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








