இவ்வளவு தரமட்ட ரேட்டா? மறு அவதாரம் எடுக்கப்போகும் பஞ்ச் கார்!
டாடா நிறுவனம் தனது பஞ்ச் காரை மிட் சைக்கிள் அப்டேட் செய்ய திட்டமிட்டுள்ளுது. இதில் ஸ்டைலிங் அப்டேட், சொகுசு அம்சங்கள் அப்டேட், பாதுகாப்பு அதிகரிப்பு உள்ளிட்ட விஷயங்களை செய்ய திட்டமிட்டுள்ளது, இப்படிய வரப்போகும் இந்த அப்டேட் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டாடா நிறுவனம் தனது பஞ்ச் காரை அப்டேட் செய்து இந்தாண்டு வெளியிட திட்டமிட்டிருந்தது. ஆனால் இந்த காரை இந்தாண்டு வெளியிட முடியவில்லை. இதனால் அடுத்தாண்டு வெளியாகும் என பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த காரை பல இடங்களில் சோதனை செய்து வருகிறது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன. இந்த புகைப்படங்களை வைத்து பார்க்கும்போது டாடா நிறுவனம் இந்த பஞ்ச் காரை பஞ்ச்.இவி கார் போல மாற்றியமைத்துள்ளதாக தெரிகிறது.

இந்த காரின் முன்பக்கம் கவனிக்கத்தக்க மாற்றங்கள் வருகின்றனர். ஆனால் முன்பு இருந்த லுக் போன்ற தோற்றமும் ஆங்காங்கே உள்ளது. இதில் ஸ்பிளிட் ஹெட்லைட் செட்டப் வழங்கப்பட்டுள்ளுது. இது போக டிஎல்ஆர் அதே வடிவமைப்பில் உள்ளது. எல்இடி ஹெட்லைட் மட்டும் இன்னும் அதிக வெளிச்சத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன் பக்கம் உள்ள ரேடியேட்டர் கிரில் நீள வாக்கில் வழங்கப்ப்டடள்ளுது.
இந்த கார் எலெகென்டான ஸ்டைலிங்கில் உள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் பம்பர்கள் புதிதாக அமைக்கப்படும் என அதிர்பார்க்கலாம். மேலும் இந்த காரில் 16 இன்ச் அலாய் வீல்கள், டெயில் லைட் உடன் வழங்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் கிளஸ்டரை தாண்டி விஷவல் அம்சங்கள் அதிகம் வர வைக்க சில அப்டேட்கள் இருக்கும் என தெரிகிறது. உட்புறம் ஏகப்பட்ட மாற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளது.

வெளிப்புறத்திலும் சில காஸ்மெட்டிக்ஸ் மாற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளது. ஸ்பை புகைப்படங்களின் படி இதில் 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல் உள்ளது. இந்த காரின் லுக் கிளாஸியாக இருக்கவும் வாய்ப்புள்ளது. இந்த காரில் இலுமினேட் செய்யக்கூடிய பிராண்ட் லோகோ, இளம் வாடிக்கையாளர்கள கவர டெக் அம்சங்கள் எல்லாம் இடம் பெற வாய்ப்புள்ளுது.
மேலும் இந்த காரில் 10.2 இன்ச் முழு இஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இடம்பெறும். இது பஞ்ச்.இவி காரில் ஏற்கனவே உள்ளது. அதே அம்சம் இவி பெட்ரோல் இன்ஜின் காரிலும் இடம் பெறும். இந்த காரில் வென்டிலேட்டட் சீட்டுகள், 360 டிகிரி கேமரா, பிளைன்ட் ஸ்பாட் மானிட்டர், 6 ஏர்பேக்குகள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது.

புதிய அப்டேட்டடில் இன்ஜினில் மாற்றங்கள் எதுவும் வராது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதே இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் இடம்பெறும். அதன்படி 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 87 எச்பி பவர் மற்றும் 115 என்எம் டார்க் திறனை வெளிபடுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 1.2 லிட்டர் ரெட்ரோன் பை ஃப்யூயல் சிஎன்ஜின் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் உள்ளது இது 72 எச் பிரவையும் 115 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நிறுவனம் இந்த காரை வரும் 2026ம் ஆண்டு ஆரம்பத்திலேயே விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் ரூ5.60 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









