டாஸ்மாக்கை விட அதிக வசூல்! பஞ்ச் கார் மூலமே 30 நாளில் இவ்வளவு வருமானமா?
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு கடந்த தீபாவளி ஒரு ஜாக்பாட் என்றே சொல்ல வேண்டும். நவராத்திரி முதல் தீபாவளிக்குள் இந்நிறுவனம் 1 லட்சம் கார்களைவிற்பனை செய்துள்ளது.இதில் அந்நிறுவனத்தின் பஞ்ச் கார் சிறப்பான விற்பனையை பெற்றுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம்வாருங்கள்.
டாடா நிறுவத்தின்பஞ்ச் கார் இந்தியாவில் பிரபலமான எஸ்யூவி காராக இருக்கிறது. இந்த கார் இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகிவரும் கார்களி்ல ஒன்றாககும் இருக்கிறது. இந்நிலையில் இந்தபண்டிகை காலத்தில் ஜிஎஸ்டிவரி குறைப்பால் வாகனங்களின் விலை கணிசமாக குறைந்தது. இதனால் வாகன விற்பனை அதிகரித்தது.

இந்நிலையில் இந்த காலகட்டத்தில் டாட நிறுவனத்தின் பஞ்ச் கார் மட்டும் 32,000 கார்கள் விற்பனையாகியள்ளது. இது நவராத்திரி மற்றும் தீபாவளிக்கு இடையிலான 30 நாட்கள் இடைவெளியில் விற்பவனையாகியுள்ளது. இது கடந்து ஆண்டுவிற்பனையைவிட 29 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த செப்டம்பர் மாதம் ம்டடும் டாடா நிறுவனத்தின் பஞ்ச் கார் 15,891 கார்கள் விற்பனையாகியுள்ளன. ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு இந்த காரின் விலை ரூ5.49 லட்சமாக குறைந்துள்ளது.
இந்த பஞ்ச் கார் மார்கெட்டில் உள்ள ஃபிராங்க்ஸ், நிஸான் மேக்னைட், ரெனால்ட் கைகர் ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனையாகி வருகிறது. டாடா பஞ்ச் காரை பொருத்தவரை 1.2 லிட்டர் ரெவோட்ரான் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 86 பிஎஸ் பவரையும் 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் உடன்இணைக்கப்பட்டுள்ளது.

டாடா நிறுவனத்தின் பஞ்ச் காரை பொருத்தவரை 18.97 கி.மீ மைலேஜை மேனுவல் கியர் வேரியன்டிலும், 18.82 கி.மீ மைலேஜை ஆட்டோமெட்டிக் கியர் வேரியன்டிலும் வழங்குகிறது. இந்த கார் தற்போதுஎலெக்ட்ரிக் வெர்ஷனும் கிடைக்கிறது. பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் ஆகிய வகைகளில் இந்த கார் தற்போது மார்கெட்டில் விற்பனையாகி வருகிறது.
டாடா பஞ்ச் காரை பொருத்தவரை 7 இன்ச் டச் ஸ்கிரீன்இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆட்டோமெட்டிக் ஏசி, ஆட்டோமெட்டிக் ஹெட்லைட்டுகள், கனெக்டெட் கார் தொழிற்நுட்பம் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இதில் க்ரூஸ் கண்ட்ரோல் ஆப்ஷனும் இருக்கிறது. இந்த கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 4 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.
கடந்த செப்டம்பர் மாத வரி குறைப்பில் இந்தகாரின்விலைகணிசமாக குறைந்தது. இதனால் இந்த காரின் விற்பனை தற்போது அதிகமாகியுள்ளது. கடந்த செப்டம்பர் மாத துவக்கத்திலேயே ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியானதால் அப்பொழுது யாரும் கார் வாங்காமல் ஜிஎஸ்டி வரிகுறைப்பிற்கு பிறகே கார்களை வாங்கினர். மேலும் பண்டிகை காலம், தீபாவளி எல்லாம் வரிசையாக வந்ததால் இவ்வளவு அதிகமான விற்பனை பதிவாகியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகனதயாரிப்பு நிறுவனங்கள் இந்த பண்டிகை காலத்தில் நல்ல விற்பனையை பெற முயற்சித்தன.டாடா நிறுவனம் இதில் மிகப்பெரிய அளவில்விற்பனையை பெற்றுள்ளது. குறிப்பாக பஞ்ச் கார் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக்கில் ரூ750 கோடிக்கு மதுவிற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் 32,000 பஞ்ச் கார்களுக்க குறைந்தபட்சமாக கணக்கிட்டால் கூட ரூ1.6 ஆயிரம் கோடிக்கு அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது.


Click it and Unblock the Notifications









