வெறும் 6 லட்சத்துக்கு 5 ஸ்டார் ரேட்டிங் காரா! அடிமாட்டு விலையில் வித்தும் ஷோரூம்லாம் காத்து வாங்கீட்டு இருக்கு
இந்திய சந்தையில் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் டாடா பன்ச் (Tata Punch) காருக்கு சரியாக அமையவில்லை. மிகவும் பிரபலமான மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரக காரான டாடா பன்ச், மிக கடுமையான சரிவை விற்பனையில் சந்தித்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள டாடா பன்ச் காரின் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலம் இது தெரிய வந்துள்ளது. நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 12,496 பன்ச் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.
ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம், 19,158 ஆக இருந்தது. இது விற்பனையில் ஏற்பட்டுள்ள 35 சதவீத வீழ்ச்சி ஆகும். இதன் காரணமாக நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 எஸ்யூவி கார்களின் பட்டியலில் (Top 10 SUV Cars) டாடா பன்ச் காருக்கு 6வது இடம் மட்டுமே கிடைத்துள்ளது.

முதல் 5 இடங்களில் முறையே ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio), டாடா நெக்ஸான் (Tata Nexon) மற்றும் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) ஆகிய கார்கள் உள்ளன.
கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிட்டால்தான் விற்பனையில் வீழ்ச்சி என்றால், நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிட்டாலும் டாடா பன்ச் விற்பனையில் சரிவையே சந்தித்துள்ளது. அதாவது நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதம் 17,714 டாடா பன்ச் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

ஆனால் அதன் பின் வந்த ஏப்ரல் மாதம் இந்த எண்ணிக்கை நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், வெறும் 12,496 ஆக சரிந்துள்ளது. இது 29.46 சதவீத வீழ்ச்சி ஆகும். ஆனால் வரும் மாதங்களில் இந்த சரிவில் இருந்து டாடா பன்ச் கார் மீண்டு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா பன்ச் காரின் வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு வரவிருப்பதுதான் இதற்கு காரணம்.
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள 2025 டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் (2025 Tata Punch Facelift) கார், நடப்பு 2025ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய மாடலின் வருகைக்கு பின், டாடா பன்ச் காரின் விற்பனை எண்ணிக்கை உயர்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா பன்ச் கார் ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் என 2 வெர்ஷன்களில் கிடைக்கிறது. இதில், ஐசி இன்ஜின் வெர்ஷன் 6.20-10.32 லட்ச ரூபாய் என்ற விலையிலும், எலெக்ட்ரிக் வெர்ஷன் 9.99-14.44 லட்ச ரூபாய் என்ற விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: விலை ஓரளவிற்கு குறைவு மற்றும் பராமரிப்பு செலவுகள் குறைவு ஆகிய காரணங்களால், இந்தியாவின் மிடில்-க்ளாஸ் குடும்பங்களுக்கு ஏற்ற காராக டாடா பன்ச் கருதப்படுகிறது. அத்துடன் இது குளோபல் என்சிஏபி (Global NCAP) மோதல் சோதனைகளில், 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளதால், அதிக பாதுகாப்பை எதிர்பார்ப்பவர்களுக்கும் நல்ல ஆப்ஷனாக உள்ளது.


Click it and Unblock the Notifications








