27 கிமீ மைலேஜ் தர்ற காரை இவ்ளோ கம்மி விலையில் வித்தா மத்தவங்கலாம் எப்படி பொழப்பு நடத்தறுது! அடித்து ஆடும் டாடா
மைக்ரோ எஸ்யூவி ரகத்தை சேர்ந்த டாடா பன்ச் (Tata Punch) கார், இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட 2021ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்தே, தொடர்ந்து சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து கொண்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதமும் இது தொடர்ந்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13,787 பன்ச் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை, கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம், 15,073 ஆக உயர்ந்துள்ளது. இது 9 சதவீத வளர்ச்சி ஆகும்.
இதன் மூலம் இந்திய சந்தையில் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 எஸ்யூவி கார்களின் (Top-10 SUV Cars) பட்டியலில், டாடா பன்ச் 2வது இடத்தை பிடித்துள்ளது. முதல் இடத்தை பிடித்திருப்பது, மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) ஆகும்.

ஐசி இன்ஜின் வெர்ஷன் மட்டுமல்லாது, எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் கிடைப்பது டாடா பன்ச் காரின் மிக முக்கியமான பலமாக உள்ளது. அத்துடன் விலை ஓரளவிற்கு குறைவு என்பது கூடுதல் பலம். தற்போதைய நிலையில் டாடா பன்ச் காரின் ஐசி இன்ஜின் வெர்ஷனின் ஆரம்ப விலை 6.13 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது.
அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட 10.15 லட்ச ரூபாய்தான். மறுபக்கம் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 9.99 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 14.29 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

ஐசி இன்ஜின் வெர்ஷனை பொறுத்தவரையில், சிஎன்ஜி வேரியண்ட்கள் அதிகபட்சமாக ஒரு கிலோவிற்கு 26.99 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. மறுபக்கம் எலெக்ட்ரிக் வெர்ஷனை பொறுத்தவரையில், லாங் ரேஞ்ச் வேரியண்ட்கள் 365 கிலோ மீட்டர் ரேஞ்ச் வழங்க கூடியவையாக இருக்கின்றன.
இவை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தால் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்படும் அதிகாரப்பூர்வமான மைலேஜ் மற்றும் ரேஞ்ச் ஆகும். எனவே நடைமுறை பயன்பாட்டில் மாறுதல்கள் இருக்கலாம். இந்திய சந்தையில் ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) காருக்கு மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக டாடா பன்ச் கார் கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா பன்ச் காரின் 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன் மூலமாகவே மேற்கண்ட விற்பனை எண்கள் நமக்கு தெரியவந்துள்ளன. ஓரளவிற்கு குறைவான விலை, நல்ல மைலேஜ் மற்றும் ரேஞ்ச் ஆகியவற்றுடன், டாடா பன்ச் காரில் வழங்கப்படும் வசதிகளும், அதன் பிரபலத்திற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று என்பது எங்கள் கருத்து.
டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்டெண்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகியவற்றுக்காக வழங்கப்படும் 10.25 இன்ச் ட்யூயல் ஸ்க்ரீன், டாடா பன்ச் காரின் மிக முக்கியமான வசதிகளில் ஒன்று. மேலும் சன்ரூஃப், முன் பகுதியில் வென்டிலேஷன் அம்சத்துடன் கூடிய இருக்கைகள், ஆம்பியண்ட் லைட்டிங், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் போன்றவையும் இந்த காரின் முக்கியமான வசதிகள்தான்.
ஆனால் டாடா பன்ச் காரின் ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகியவற்றை பொறுத்தும் மற்றும் வேரியண்ட்களை பொறுத்தும் வழங்கப்படும் வசதிகளின் பட்டியல் மாறுபடலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ஒரு மைக்ரோ எஸ்யூவி ரக காரை வாங்க வேண்டும் என எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு டாடா பன்ச் மிகச்சிறந்த ஆப்ஷன்.


Click it and Unblock the Notifications








