இந்த கொடுமைய எல்லாம் ரத்தன் டாடா பாத்திருந்தா கண்ணீர் விட்றுப்பாரு! நடக்க கூடாத விஷயம்லாம் நடந்துட்டு இருக்கு!
இந்தியாவில் முன்பெல்லாம் ஒவ்வொரு மாதமும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் (Top 10 Cars) பட்டியல் வெளியாகும்போது, அதில் டாடா பன்ச் (Tata Punch) முதன்மையான இடத்தில் இருக்கும். ஒரு சில மாதங்களில் டாடா பன்ச் முதல் இடத்தை எல்லாம் கூட பிடித்துள்ளது. அவ்வளவு ஏன் கடந்த 2024ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக (12 மாதங்களுக்கும் சேர்த்து), இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட கார் என்ற பெருமையை கூட டாடா பன்ச் கார்தான் பெற்றிருந்தது.
வழக்கமாக ஒரு காலண்டர் ஆண்டில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட கார் என்ற பெருமையை மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் ஏதாவது ஒரு கார்தான் பெறும். மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த ஆதிக்கத்திற்கு முடிவு கட்டி, 2024ம் ஆண்டில் மிகவும் அதிகமாக விற்பனையான கார் என்ற பெருமையை டாடா பன்ச் சொந்தமாக்கியது.

கடந்த 2024ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 2,02,031 டாடா பன்ச் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் சமீப காலமாக இந்திய சந்தையில் டாடா பன்ச் காருக்கு நேரம் சரியில்லை என்பது போல் தெரிகிறது. ஆம், டாடா பன்ச் கார் விற்பனையில் நாளுக்கு நாள் பின் தங்கி கொண்டே வருகிறது.
இந்திய சந்தையில் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் டாடா பன்ச் 3வது இடத்தை பிடித்திருந்தது. அதற்கு பின் வந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இந்த பட்டியலில் டாடா பன்ச் 5வது இடத்திற்கு பின் தங்கியது.

இந்த சூழலில் தற்போது வெளியாகியுள்ள 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான டாப் 10 கார்களின் பட்டியலில் டாடா பன்ச் 10வது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெறும் 14,559 டாடா பன்ச் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம், 18,438 ஆக இருந்தது. இதன் மூலம் டாடா பன்ச் கார் விற்பனையில் 21 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அத்துடன் இந்த வீழ்ச்சியின் காரணமாக டாப் 10 கார்களின் பட்டியலில், 10வது இடத்திற்கும் பின் தள்ளப்பட்டுள்ளது.
நிலைமை இப்படியே போனால், டாடா பன்ச் கார், டாப் 10 பட்டியலில் இருந்தே வெளியேறி விடும் சூழல் உள்ளது. எனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உரிய நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே பன்ச் கார் தொடர்ந்து, டாப் 10 பட்டியலில் தனக்கான ஒரு இடத்தை தக்க வைத்து கொள்ள முடியும் என நாங்கள் கருதுகிறோம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பன்ச் காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலை நடப்பு 2025ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த புதிய மாடலின் வருகைக்கு பின், டாடா பன்ச் கார் மீண்டும் தனது ஆதிக்கத்தை தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








