டாடா நிறுவனத்தை கை கழுவும் இந்திய மக்கள்? பாதுகாப்பான காரை குறைவான விலையில் குடுத்தும் வாங்க ஆள் இல்ல!

குறைவான விலையில் ஒரு எஸ்யூவி ரக காரை வாங்க வேண்டும் என நினைத்தால், பலரது மனதிலும் முதலில் நினைவிற்கு வருவது கண்டிப்பாக டாடா பன்ச் (Tata Punch) காராகதான் இருக்கும். ஆனால் டாடா பன்ச் காருக்கு தற்போது நேரம் சரியில்லை. ஆம், விற்பனையில் கடுமையான வீழ்ச்சியை டாடா பன்ச் சந்தித்துள்ளது. 2025ம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரியில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 எஸ்யூவி (Top-10 SUVs) ரக கார்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில், டாடா பன்ச் காருக்கு 2வது இடம் கிடைத்துள்ளது.

கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதமும் இந்த பட்டியலில் டாடா பன்ச் கார் 2வது இடத்தில்தான் இருந்தது. ஆனால் அம்முறை 9 சதவீத வளர்ச்சியை டாடா பன்ச் பதிவு செய்திருந்தது. ஆனால் இம்முறை 10 சதவீத வீழ்ச்சியை டாடா பன்ச் கண்டுள்ளது.

Tata Punch

அதாவது கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 17,978 டாடா பன்ச் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 16,231 ஆக குறைந்துள்ளது. இது 10 சதவீத வீழ்ச்சி ஆகும். எனவே 2025ம் ஆண்டை டாடா பன்ச் கார் வீழ்ச்சியுடன் தொடங்கியுள்ளது.

சரி, இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது எந்த கார்? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். அது ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) ஆகும். 40 சதவீத வளர்ச்சியுடன் ஹூண்டாய் க்ரெட்டா இந்த பட்டியலில் முதல் இடத்தை தட்டி சென்றுள்ளது. வரும் மாதங்களில் ஹூண்டாய் க்ரெட்டா காரின் ஆதிக்கம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tata Punch SUV

ஹூண்டாய் நிறுவனம் க்ரெட்டா காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்திருப்பதுதான் இதற்கு காரணம். சரி, டாடா பன்ச் பற்றிய விஷயத்திற்கு வருவோம். டாடா பன்ச் கார் ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் என 2 வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதன் ஐசி இன்ஜின் வெர்ஷன் 6.20-10.32 லட்ச ரூபாய் என்ற விலையிலும், எலெக்ட்ரிக் வெர்ஷன் 9.99-14.29 லட்ச ரூபாய் என்ற விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா பன்ச் காருக்கு ஏற்பட்டிருப்பது தற்காலிகமான சரிவாக மட்டுமே இருக்கும் என நாங்கள் கருதுகிறோம். ஏனெனில் மைலேஜ்/ரேஞ்ச், வாடிக்கையாளர்களுக்கு அவசியமான வசதிகள் மற்றும் பாதுகாப்பு (பாரத் என்சிஏபி, குளோபல் என்சிஏபி என 2 அமைப்புகளின் மோதல் சோதனைகளிலும் இந்த கார் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது) என பல்வேறு அம்சங்களிலும் டாடா பன்ச் கார் தலைசிறந்து விளங்குகிறது.

எனவே கூடிய விரைவில், ஏன் நடப்பு பிப்ரவரி மாதமே கூட டாடா பன்ச் கார் சரிவில் இருந்து மீண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. இந்திய சந்தையில் ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) காருக்கு மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக டாடா பன்ச் கார் கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, February 7, 2025, 21:07 [IST]
English summary
Tata punch sales report january 2025 10 per cent down
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+