27 கிமீ மைலேஜ்! ஆனா விலை வெறும் 6 லட்சம்தானா! பொறுத்தது போதும்னு பொங்கி எழுகிறது டாடா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் மைக்ரோ எஸ்யூவி ரக கார்களில் ஒன்று டாடா பன்ச் (Tata Punch). ஆனால் சமீப காலமாக டாடா பன்ச் காரின் விற்பனை மிகவும் மந்தமாக இருந்து வருகிறது. இந்த வரிசையில் நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதமும் டாடா பன்ச் காரின் விற்பனை மந்தமாகதான் இருந்துள்ளது.

காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இந்த தகவல் நமக்கு தெரிய வந்துள்ளது. இதன்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதம் ஒட்டுமொத்தமாக வெறும் 10,785 டாடா பன்ச் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Tata Punch Interior Design

ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் இந்த எண்ணிக்கை 16,121 ஆக இருந்தது. அதாவது கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு ஜூலையில் டாடா பன்ச் காரின் விற்பனை எண்ணிக்கை 33 சதவீதம் சரிவடைந்துள்ளது.

இதன் காரணமாக நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 எஸ்யூவி ரக கார்களின் பட்டியலில் (Top 10 SUVs July 2025), டாடா பன்ச் காருக்கு 6வது இடம் மட்டுமே கிடைத்துள்ளது. முதல் 5 இடங்களில் முறையே ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, மஹிந்திரா ஸ்கார்பியோ, மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய கார்கள் உள்ளன.

Tata Punch Side Design

ஆனால் கூடிய விரைவில் டாடா பன்ச் காரின் விற்பனை எண்ணிக்கை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடல் விற்பனைக்கு வரவிருப்பதுதான் இதற்கு காரணம். ஆம், 2025 டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் (2025 Tata Punch Facelift), இந்திய சாலைகளில் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது.

2025 டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், புதிய 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் எல்லாம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் தற்போதைய மாடலில் வழங்கப்படும் அதே இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள்தான் 2025 டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் தொடர்ந்து வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படியானால் இதன் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு சுமார் 27 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்க கூடியவையாக இருக்கலாம்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மிகவும் விலை குறைவான எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாக டாடா பன்ச் திகழ்கிறது. இதன் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப விலையும் கூட வெறும் 6.50 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகைக்கு பின், டாடா பன்ச் காரின் விற்பனை எண்ணிக்கை மீண்டும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வரும் தீபாவளி பண்டிகை சமயத்தில், 2025 டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே பண்டிகை காலத்தில், குறைவான விலையில் ஒரு புதிய காரை வாங்கலாம் என நினைத்து கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு, 2025 டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் நல்ல ஆப்ஷன்.

More from DriveSpark

Article Published On: Friday, August 8, 2025, 18:15 [IST]
English summary
Tata punch sales report july 2025 33 per cent down
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+