27 கிமீ மைலேஜ் குடுக்கற காரை தர மட்ட ரேட்ல வித்துட்டு இருக்காங்க! சண்முகம் வண்டிய ஷோரூமுக்கு விடு!
இந்திய சந்தையில் மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரக கார் என்றால், அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது கண்டிப்பாக டாடா பன்ச் (Tata Punch) காராகதான் இருக்கும். இந்த காருடைய நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதம் 17,714 பன்ச் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை 17,547 ஆக மட்டுமே இருந்தது.
இது 1 சதவீத வளர்ச்சி ஆகும். இதன் மூலம் நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் (Top 10 Cars) பட்டியலில், டாடா பன்ச் 3வது இடத்தை பிடித்துள்ளது. முதல் 2 இடங்களில் முறையே ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மற்றும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) ஆகியவை உள்ளன.

ஆனால் டாடா பன்ச் கார் நூலிழையில் மட்டுமே முதல் 2 இடங்களையும் பறிகொடுத்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். அதாவது நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதம் ஹூண்டாய் நிறுவனம் 18,059 க்ரெட்டா கார்களை விற்பனை செய்துள்ளது. மறுபக்கம் மாருதி சுஸுகி நிறுவனம் 17,746 ஸ்விஃப்ட் கார்களை விற்பனை செய்துள்ளது.
இதன்படி பார்த்தால் ஹூண்டாய் க்ரெட்டாவை விட 345 டாடா பன்ச் கார்கள் மட்டுமே குறைவாக செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரை விட வெறும் 32 டாடா பன்ச் கார்கள் மட்டுமே குறைவாக செய்யப்பட்டுள்ளன. எனவே நூலிழையில் மட்டுமே டாடா பன்ச் கார் முதல் 2 இடங்களை பறிகொடுத்துள்ளது.

ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் என 2 வெர்ஷன்களில் கிடைப்பதுதான், டாடா பன்ச் காரின் மிகப்பெரிய பலமாக கருதப்படுகிறது. இதன் ஐசி இன்ஜின் வெர்ஷனை பொறுத்தவரையில், ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 6.20 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டின் விலையோ 10.32 லட்ச ரூபாயாக இருக்கிறது.
ஐசி இன்ஜின் வெர்ஷனில், சிஎன்ஜி வேரியண்ட்கள் அதிகபட்சமாக ஒரு கிலோவிற்கு 26.99 கிலோ மீட்டர் மைலேஜை (Mileage) வாரி வழங்குகின்றன. மறுபக்கம் டாடா பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை பொறுத்தவரையில், ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 9.99 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.
அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டின் விலை 14.29 லட்ச ரூபாயாக இருக்கிறது. இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் வெர்ஷனில், 35 kWh பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்ட்கள் அதிகபட்சமாக 421 கிலோ மீட்டர் ரேஞ்ச் (Range) வழங்குகின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஓரளவிற்கு குறைவான விலையில் அதிக மைலேஜ்/ரேஞ்ச் வழங்க கூடிய ஐசி இன்ஜின்/எலெக்ட்ரிக் காரை வாங்க வேண்டும் என நினைத்து கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு டாடா பன்ச் நல்ல ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








