புலி பதுங்கறது பாயறதுக்குதான்! ஹூண்டாய் கதையை முடிக்க ரெடியாகும் டாடா! அப்ப பெரிய சம்பவம் இருக்கு!

இந்திய சந்தையில் சமீப காலமாக டாடா பன்ச் (Tata Punch) காருக்கு நேரம் சரியில்லை. விற்பனை மந்தமாக இருந்து வருகிறது. இந்த வரிசையில் நடப்பு 2025ம் ஆண்டு மே மாதமும் டாடா பன்ச் கார் விற்பனையில் மிக கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இது தெரிய வந்துள்ளது.

நடப்பு 2025ம் ஆண்டு டாடா நிறுவனம் 13,133 பன்ச் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் இந்த எண்ணிக்கை 18,949 ஆக இருந்தது. இது 31 சதவீத வீழ்ச்சி ஆகும். இதனால் அதிகம் விற்பனையான டாப் 10 எஸ்யூவிக்களின் பட்டியலில் (Top 10 SUVs) டாடா பன்ச் சறுக்கியுள்ளது.

Tata Punch Side Design

இந்த பட்டியலில் டாடா பன்ச் காருக்கு 5வது இடம் மட்டுமே கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் முதல் 4 இடங்களில் முறையே மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, ஹூண்டாய் க்ரெட்டா, மஹிந்திரா ஸ்கார்பியோ மற்றும் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் ஆகிய எஸ்யூவி ரக கார்கள் உள்ளன.

டாடா பன்ச் காரின் விற்பனை தற்போது பெரிய அளவில் சரிந்திருந்தாலும் கூட, கூடிய விரைவில் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பி விடும் என நாங்கள் கருதுகிறோம். வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட டாடா பன்ச் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு வரவிருப்பதுதான் இதற்கு காரணம்.

Tata Punch

பொதுவாக ஒரு காரின் புதிய மாடல் விற்பனைக்கு வருகிறது என்றால், அதன் விற்பனை சரிவடையும். பழைய மாடலை வாங்குவதை காட்டிலும், புதிய மாடலை வாங்குவதற்குதான் வாடிக்கையாளர்கள் முன்னுரிமை வழங்குவார்கள். டாடா பன்ச் காரின் விற்பனை சரிவிற்கு இது மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருக்கும் என கருதப்படுகிறது.

புதிய மாடல் வந்தபின் அதன் விற்பனை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்புவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள 2025 டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் இன்னும் ஒரு சில மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா பன்ச் ஐசி இன்ஜின் வெர்ஷனின் ஆரம்ப விலை 6.20 லட்ச ரூபாய் ஆகவும், எலெக்ட்ரிக் வெர்ஷனின் ஆரம்ப விலை 9.99 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) காருக்கு, டாடா பன்ச் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக திகழ்கிறது. இந்த சூழலில், 2025 டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை, ஹூண்டாய் எக்ஸ்டர் காருக்கு இன்னும் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தலாம் என நாங்கள் கருதுகிறோம்.

2025 டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் சோதனை ஓட்டம் இந்திய சாலைகளில் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனவே அடுத்த சில மாதங்களில் இந்த புதிய காரை ஷோரூம்களில் நாம் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். அனேகமாக தீபாவளி பண்டிகை காலத்திற்கு முன்னதாக இந்த புதிய மாடல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, June 6, 2025, 23:41 [IST]
English summary
Tata punch sales report may 2025 31 per cent down
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+