27 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை 1.40 லட்சம் பேர் வாங்கிட்டாங்க! அதுவும் வெறும் 10 மாசத்துல!
டாடா நிறுவனத்தின் பஞ்ச் கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமான காராக இருக்கிறது. இந்த 2025ம் ஆண்டு சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி முதல் அக்டோர்பர் மாதம் வரையிலான விற்பனை விபரங்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டாடா நிறுவனத்தின் பஞ்ச் கார் இந்தியாவில் மிக குறுகிய காலத்தில் பிரபலமான காராக இருக்கிறது. இந்த காரை மக்கள் அதிகமாக வாங்கி குவிக்கின்றனர். குறைவான விலை, எஸ்யூவி போன்ற லுக், குடும்பத்துடன் செல்ல வசதியான இடம், பாதுகாப்பு ரேட்டிங்கில் சிறப்பான கார். இதற்கு மேல் இந்த காரை யார் வேண்டாம் என சொல்லுவார்கள்?

இப்படியாக இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் கார்களில் ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் அக்டோர் மாதம் வரை சுமார் 1.40 லட்சம் பேர் இந்த காரை வாங்கியுள்ளார்கள். டாடா பஞ்ச் கார் இ்நத நேரத்தில் விற்பனையில் ஒரு சாதனையே படைத்துள்ளது என சொல்லலாம். இதில் கடந்த மார்ச் மாதம் தான் அதிகபட்சமாக 17,714 பேர் இந்த காரை வாங்கியுள்ளனர். கடந்த 10 மாதத்தில் மொத்தம் சரியாக சொன்னால் 1,38,769 கார்கள் விற்பனையாகியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 16,231 கார்களும்,. பிப்ரவரி மாதம் 14,559 கார்களும், மார்ச் மாதம் 17,714 கார்களும், ஏப்ரல் மாதம் 12,496 கார்களும், மே மாதம் 13,133 கார்களம், ஜூன் மாதம் 10,446 கார்களும், ஜூலை மாதம் 10,785 கார்களும், ஆக்ஸ்ட் மாதம் 10,704 கார்களும், செப்டம்பர் மாதம் 15,891 கார்களும், அக்டோபர் மாதம் 16,810 கார்களும் விற்பனையாகியுள்ளன.

டாடா நிறுவனம் பஞ்ச் காரில் 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, வயர்லெஸ் போன் சார்ஜர், பின்பக்கம் தனி ஏசி வென்ட்கள், டைப் சி யூஎஸ்டி ஃபாஸ்ட் சார்ஜர், ஆகிய வசதிகள். மேலே உள்ள பட்டியலை பார்த்தால் செப்டம்பர் மாதம் மதல் விற்பனை கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகமாகியுள்ளதை கவனிக்க முடியும். இதற்கு முக்கியமான காரணம் ஜிஎறா்டி வரி குறைப்பு தான்.
தற்போது இந்த கார் ரூ5.50 லட்சம் முதல் ரூ9.30 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கிய கார் ஆகும். இந்த காரில் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் நேச்சுரலி அஸ்பயர்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 86 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

ந்த காரில் சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் ஆப்ஷன்களும் உள்ளது. இந்த கார் பெட்ரோல் வேரியன்டில் 21 கி.மீ மைலேஜூம், சிஎன்ஜியில் 27 கி.மீ மைலேஜூம் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் இந்தியாவில் அறிமுகமானது முதல் மிடில் கிளாஸ் மக்கள், முதல் தலைமுறையாக கார் வாங்குபவர்களின் முக்கிய தேர்வாக இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிக மைலேஜ், குறைவான விலை, சிறப்பான பாதுகாப்பு இது எல்லாம் இந்தியர்களின் தேவை என்பதைஉணர்ந்து டாடா நிறுவனம் பஞ்ச் காரை உருவாக்கியதால் இந்த கார் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இதனால் வெகு சிறப்பாக விற்பனையாகி வருகிறது. 10 மாதங்களில் 1.40 லட்சம் பேர் வாங்கியது மிகப்பெரிய சாதனை தான்.


Click it and Unblock the Notifications









