இந்த காரை வாங்குனா ரூ3 லட்சம் மிச்சம் பண்ணலாம்! 5 ஸ்டார் ரேட்டிங் கூட இருக்குது!
இந்தியாவில் டாடா என்பது நம்பகமான பெயர் பெற்றதாக இருக்கிறது. அதிகபட்ச பாதுகாப்பு ரேட்டிங்களுடன் குறைந்த விலையில் கார்களை தயாரிப்பதால் இந்நிறுவனத்திற்கு இந்த பெயர் கிடைத்துள்ளது. டாடா நெக்ஸான் கார் வாடிக்கையாளர்களிடையே பிரபலமாக தேர்வாகும் காராக உள்ளது. இருப்பினும், பட்ஜெட் பிரச்சனை இருப்பவர்களுக்கு, டாடா பஞ்ச் மிகவும் குறைந்த விலை மாற்று வழி காராக இருக்கிறது. இது குறித்த விரிவான விபரங்கள் அனைத்தையும் இங்கே காணலாம் வாருங்கள்.
பஞ்ச்-ஐ தேர்ந்தெடுப்பதன் மூலம், நீங்கள் 2 முதல் 3 லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடியும். டாடா பஞ்ச் காரின் தொடக்க விலை ரூ 6.82 லட்சம் ரூபாய் எக்ஸ்-ஷோரூம் ஆகும், நெக்ஸான் கார் ரூ8 லட்சம் ரூபாய் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனையாகிறது.

டாடா பஞ்ச் என்பது ஒரு மைக்ரோ எஸ்யூவி கார் ஆகும், இது எஸ்யூவி-களில் இருந்து ஈர்க்கப்பட்ட வடிவமைப்பு, விசாலமான கேபின் மற்றும் ஏராளமான அம்சங்களை கொண்டுள்ளது. இது பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எடிசன்களில் கிடைக்கிறது மற்றும் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது. இது பாதுகாப்பில் சமரசம் செய்யாமல் பிரக்கடிக்கல் அம்சம் கொண்ட காரை தேடுபவர்களுக்கு ஒரு கவர்ச்சிகரமான விருப்பமாகும்.
பஞ்ச் காரின் சிறப்பாக விற்பனையாகும் மாடலான அட்வெஞ்சர் ரிதம்-ஐ தேர்வு செய்தால், அது 7.52 லட்சம் ரூபாய் எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கும். மாறாக, முழு அம்சங்களுடன் கூடிய நெக்ஸான் பியூர் பிளஸ் எஸ் மாடல் சுமார் 10 லட்சம் ரூபாய் எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இரண்டு வாகனங்களும் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளன. இது பாதுகாப்பை முன்னுரிமைப்படுத்தும் ஓட்டுநர்களுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது

டாடா பஞ்ச் 38 வெவ்வேறு எடிசன்களில் வருகிறது. அதன் அடிப்படை மாடல் பியூர் என்று அழைக்கப்படுகிறது. அதே சமயம் டாப் எடிசன் டாடா பஞ்ச் கிரியேட்டிவ் பிளஸ் எஸ் கேமோ ஏஎம்டி ஆகும். அதன் விலை குறைவாக இருந்தபோதிலும், இது 6 ஏர்பேக்குகளை கொண்டிருக்கவில்லை, ஆனால் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புக்காக டுயல் ஏர்பேக்குகள் மற்றும் பல எலெக்ட்ரானிக் அசிஸ்ட்களை வழங்குகிறது.
பஞ்ச் டுயல் ஏர்பேக்குகள், பின்புற வைப்பர் மற்றும் வாஷர், பின்புற பார்க்கிங் கேமரா, பின்புற டிஃபாகர், மழை-உணர்வு வைப்பர்கள் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற அத்தியாவசிய பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது. இந்த அம்சங்கள் அதன் குறைந்த விலையிலும் பாதுகாப்பான வாகனமாக இருப்பதற்காக புகழை பெற்றுள்ளது.

ஹேட்ச்பேக் விலையில் எஸ்யூவி வசதி மற்றும் இடத்தை விரும்புபவர்களுக்கு, டாடா பஞ்ச் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இது அதிக பணம் செலவில்லாமல் எஸ்யூவி போன்ற அனுபவத்தை வழங்குகிறது. இந்த கார் சிறப்பாக விற்பனையாவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மொத்தத்தில், நீங்கள் நெக்ஸானை தேர்வுசெய்தாலும் அல்லது மிகவும் பட்ஜெட் குறைவான டாடா பஞ்ச் காரை தேர்வுசெய்தாலும், இரண்டு வாகனங்களும் டாடா மோட்டார்ஸிலிருந்து சிறப்பான பாதுகாப்பு தரங்களுடன் நம்பகமான விருப்பங்களை வழங்குகின்றன. இதனால் நீங்கள் உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்பட இந்த கார்களில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். இது நிச்சயம் உங்களுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









