1 மாசத்துல 1 லட்சம் பேர் இந்த கம்பெனி காரை வாங்கிட்டாங்க! இதுல அப்படி என்ன இருக்குது?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் கடந்த பண்டிகை காலத்தில் மட்டும் மொத்தம் 1 லட்சம் கார்களைவிற்பனை படைத்து சாதனை படைத்துள்ளது. பொதுவாக பண்டிகை காலங்களில் அதிக அளவிலான வாகனங்கள் விற்பனையாகும். இதன்படி இந்தாண்டு பண்டிகை கால விற்பனையில் கடந்தாண்டைவிட அதிக விற்பவனையை இந்நிறுவனம் பெற்றுள்ளது.

இந்தியாவில் பொதுவாக நவராத்திரி முதல் தீபாவளி வரையிலான காலகட்டம் சிறப்பான விற்பனையை பெறும் காலமாக இருக்கிறது.இந்தாண்டை பொருத்தவரை கடந்த செப்டம்பர் மாதம் 22ம்தேதி முதல் கடந்த தீபாவளி வரை பண்டிகை காலமாக கருதப்படுகிறது. இந்நிலையில் இந்த 30 நாள் கால இடைவெளியில் இந்நிறுவனம் 1 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த விற்பனையில் எஸ்யூவி கார்களே முன்னிலை வகித்துள்ளன. டாடா பஞ்ச் மற்றும் நெக்ஸ் கார்கள் விற்பனவையாகியுள்ளுது. கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் டாடா நெக்ஸான் கார் 38,000 கார்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை விட 73 சதவீதம் அதிகம் ஆகும். அதே நேரம் பஞ்ச் கார் 29 சதவீதம் விற்பனையாகியுள்ளது. கடந்தாண்டை விட 29 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது.

Tata Sales 1 lakhs in Festive Season

அதே நேரம் டாடா நிறுவனத்தின் இவி கார்களும் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இந்த பண்டிகை காலகட்டத்தில் மட்டும் மொத்தம் 10,000 இவிகள் விற்பனையாகியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது ஒட்டுமொத்த விற்பனையில் 10 சதவீதம் இவி வாகனங்கள் தான் விற்பனையாகியுள்ளது. கடந்தாண்டுஇதே காலகட்டத்தில் நடந்த விற்பனையை ஒப்பிடும் போது 37 சதவீதம் விற்பனை அதிகமாகியுள்ளது. இதில் டியாகோ இவி, நெக்ஸான் இவி, பஞ்ச் இவி ஆகிய கார்கள் விற்பனையாகி வருகிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு இது ஒரு பாசிடிவ் விற்பனையை பெற்றுள்ளது. இதை இந்த நிதியாண்டு முழுவஐதும் தொடர வாய்ப்புள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் ஒரு நல்ல எண்ணத்தை வளர்த்துள்ளது. இதனால் சமீபத்தில் விற்பனை வீழ்ச்சியை சந்தித்த டாடா நிறுவனம் தற்போது மீண்டும் விற்பவனையில் வளர்ச்சியை பெற்றுள்ளது நமக்கு தெளிவாக தெரிகிறது.

Tata Sales 1 lakhs in Festive Season

இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் வாகன தயாரிப்பு நிறுவனமாக மாறி வருகிறது. இந்த நிறுவனம் நிச்சயம் எதிர்காலத்தில் மாருதி நிறுவனத்திற்கு போட்டியாக வாகனங்களை விற்பனை செய்ய தயாராகி வருகிறது. இதற்கு இந்த தீபாவளி மாதிரி பண்டிகை கால விற்பனை பெரும் உதவியாக இருந்துள்ளுது. இந்த அக்டோபர் மாதம் டாடா நிறுவனம் சிறப்பான விற்பனையை பெறும் என எதிர்பார்க்கலாம்.

இந்த பண்டிகைகாலத்தில் கார்கள் விற்பனை அதிகமாவதற்கு மற்றொரு முக்கியமான காரணம் கடந்த செப்டம்பர் மாதம் அமலுக்கு வந்த ஜிஎஸ்டி வரிமாற்றம் என சொல்லலாம். இதனால் வாகனங்களின் விலைகணிசமாக குறைந்தது. வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் இதன் மூலம் அதிக வாகனங்களை விற்க முயற்சி செய்தனர். இதனால் தயாரிப்புகளையும் அதிகரிப்படுத்தியது.இதன் காரணமாக ஆர்டர்கள் அதிகமாக வரும்போதும் போதுமான அளவு ஸ்டாக் இருந்தது. இதனால் சுலபமாக டெலிவரிகளையும் இந்நிறுவனம் செய்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டாடா நிறுவனம் மிகமுக்கியமான நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் தற்போது விற்பனையில் பண்டிகை காலத்தில் மட்டும் 1 லட்சம் வாகனங்களை விற்பனை செய்தது இது நிச்சயம் மிகப்பெரிய அளவில் அந்நிறுவனத்திற்கு ஊக்கத்தை வழங்கியிருக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 21, 2025, 21:25 [IST]
English summary
Tata sales 1 lakh in festive season nexon punch lead growth
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+