டாடாக்கு விழுந்த மரண அடி! சேல்ஸ் இப்படி சறுக்கிடுச்சே! மீண்டு வருமா? கவிழ்ந்து விழுமா?

இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் மொத்தம் 39,521 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இது கடந்தாண்டு விற்பனையை விட குறைவாக இருந்தாலும் கடந்த ஜூன் மாத விற்பனையை விட விற்பனை அதிகரித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் துவங்கியுள்ள நிலையல் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வரிசையாக தங்கள் கடந்த ஜூலை மாத விற்பனை விபரங்கள் வெளியாகியுள்ளது. இதன்படி கடந்த ஜூலை மாதம் டாடா மொத்தம் 39521 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் 44,725 கார்கள் விற்பனையாகியிருந்தது.

tata sales july 2025

இதை ஒப்பிடும் போது கடந்த ஜூலை மாதம் 5204 கார்கள் குறைவாக விற்பனையாகியுள்ளது. இது 11.64 சதவீத விற்பனை வீழ்ச்சியாகும். இதுவே கடந்த ஜூன் மாதம் வெறும் 37,083 கார்கள் விற்பனையாகியிருந்தது. இது 2438 கார்கள் அதிகம் ஆகும். இது 6.57 சதவீதம் அதிகம் ஆகும்.

டாடா நிறுவனம் கடந்த ஜூலை மாதம் உள்நாட்டில் 39,521 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இந்நிறுவனம் கடந்தாண்டு ஜூலை மாதம் 44,725 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 5204 வாகனங்கள் குறைவாக விற்பனையாகியுள்ளது. 11.64 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது.

tata sales july 2025

ஏற்றுமதியை பொருத்தவரை கடந்த ஜூலை மாதம் வெறும் 654 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதுவே கடந்தாண்டு 229 கார்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது. தற்போது 425 கார்கள் கூடுதலாக ஏற்றுமதியாகியிருந்தது. இது 185.59 சதவீத வளர்ச்சியாகும்.

டாடா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகன செக்மெண்டை பொருத்தவரை கடந்த ஜூலை மாதம் 7,124 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் 5,027 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. இதை ஒப்பிடும் போது 2,097 வாகனங்கள் கூடுதலாக விற்பனையாகியுள்ளது. இது 41.71 சதவீத வளர்ச்சியாகும்.

tata sales july 2025

மொத்தமாக பார்த்தால் பயணிகள் வாகன செக்மெண்டில் மொத்தம் 40,175 வாகனங்கள் கடந்த ஜூலை மாதம் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் 44,854 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 4679 வாகனங்கள் குறைவு மொத்தம் 10.43 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

கமர்ஷியல் வாகனங்களை பொருத்தவரை கடந்த ஜூலை மாதம் 28,956 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் 27,042 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இது 7 சதவீத விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது. இது ஹெவி, லைட் , பயணிகள் கேரியிர், பிக்கப் உள்ளிட்ட வானங்களின் விற்பனை எண்ணிக்கையாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நிறுவனம் கடந்த ஜூலை மாத விற்பனை பார்க்கும் போது ஜூன் மாத விற்பனையை விட விற்பனை அதிகரித்துள்ளது. ஆனால் கடந்தாண்டு ஜூலை மாத விற்பனையை ஒப்பிடும் போது விற்பனை கணிசமாக சரிவடைந்துள்ளது. இதிலிருந்து மீண்டு வரும் நடவடிக்கையை டாடா எடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

Article Published On: Saturday, August 2, 2025, 9:40 [IST]
English summary
Tata sales july 2025 record highest monthly ev sales
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X