22 வருஷம் கழித்து சியராவை டாடா கொண்டுவந்ததே இதுக்காக தான்! 2027இல் பெரிய சம்பவம் காத்துக்கிட்டு இருக்கு!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சமீபத்தில் புதிய சியராவை அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது அதன் AWD (All-Wheel Drive) பதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 2027ஆம் ஆண்டின் துவக்கத்தில், சியரா காரில் AWD புதிய தேர்வாக வழங்கப்படும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி விவேக் ஸ்ரீவத்சா உறுதிப்படுத்தியுள்ளார்.

புதிய சியரா, அர்கோஸ் (ARGOS - All-terrain Ready Omni-Energy and Geometry Scalable Architecture) எனப்படும் தளத்தை அடிப்படையாகக் கொண்டது ஆகும். இந்த தளம் பெட்ரோல், டீசல், சிஎன்ஜி (CNG), ஹைப்ரிட் மற்றும் எலக்ட்ரிக் போன்ற பல்வேறு பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

tata sierra awd car

மேலும், ARGOS கட்டமைப்பு ஆனது முன்-சக்கர டிரைவ் மற்றும் அனைத்து-சக்கர டிரைவ் சிஸ்டத்துடன் காரை உருவாக்குவதற்கு ஏற்றது ஆகும். தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சியரா கார் முன் சக்கரங்களின் மூலமாக இயங்கும் நிலையில், 2027இல் அனைத்து-சக்கர டிரைவ் ஆப்ஷனையும் வழங்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து விவேக் ஸ்ரீவத்சா கூறுகையில், "சியராவை AWD திறன் கொண்ட காராக விற்பனை செய்யவே இந்த காரை வடிவமைக்க ARGOS தளத்தைத் தேர்ந்தெடுத்தோம். கடந்த சில ஆண்டுகளாக இந்திய மக்கள் இடையே AWD கார் தேவை அதிகரித்து வருவதை நாங்கள் கவனித்தோம். முன்பு நாங்கள் ஒரு எஸ்யூவி உற்பத்தியாளராக இருந்தோம். ஆனால் 4WD வாகனங்களில் இருந்து விலகிச் சென்றபோது பல விமர்சனங்கள் எழுந்தன.

tata sierra awd car

இதை மீண்டும் கொண்டு வர சியரா சரியான வாகனம் என்று நாங்கள் கருதினோம்," என்று தெரிவித்தார். தற்போது, சியரா மூன்று என்ஜின் ஆப்ஷன்களுடன் முன்-சக்கர டிரைவ் உள்ளமைவில் கிடைக்கிறது. இதில், 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் 104 பிஎச்பி சக்தியையும், 145 என்.எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்கிறது.

இதனை 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் பெறலாம். 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 116 பிஎச்பி ஆற்றலையும், 260 என்.எம் (மேனுவல்)/ 280 என்.எம் (ஆட்டோமேட்டிக்) டார்க் திறனையும் வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. மூன்றாவது என்ஜின் ஆப்ஷனான, 1.5 லிட்டர் டைரக்ட்-இன்ஜெக்ஷன் டர்போ-பெட்ரோல் என்ஜின் 158 பிஎச்பி சக்தியையும் 255 என்.எம் டார்க் திறனையும் வழங்குகிறது.

tata sierra awd car

இந்த இரண்டு என்ஜின்களையும் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் உடன் பெறலாம். டாடா சியரா ரியர்-வீல்-டிரைவ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.11.49 லட்சத்தில் இருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளன. சியரா AWD காரின் விலை நிச்சயமாக இதனை காட்டிலும் அதிகமாக நிர்ணயிக்கப்படும். இந்த கார் 2026 இல்லாமல், 2027இல் அறிமுகம் செய்யப்பட உள்ளதால், நிச்சயமாக இதன் விலை ரூ.20 லட்சம் அளவில் நிர்ணயிக்கப்படவே வாய்ப்புள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எந்தவொரு கரடுமுரடான சாலையிலும் இயங்குவதற்கு வாகனத்தில் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் அவசியமாகிறது. பொதுவாக, இந்த சிஸ்டத்துடனான கார்களின் விலைகள் சற்று அதிகமாக உள்ளதால், இந்தியாவில் இத்தகைய கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை சற்று குறைவாகவே உள்ளது. இருப்பினும், இந்த எண்ணிக்கை சமீப ஆண்டுகளில் மெல்ல மெல்ல அதிகரித்து வருவதால், இதனை பயன்படுத்தி கொள்ள டாடா நிறுவனம் தயாராகி வருகிறது.

இந்த நிறுவனத்தின் விவேக் ஸ்ரீவத்சா கூற்றுப்படி, சியரா காரை அறிமுகம் செய்ததே AWD கார்களை மீண்டும் கொண்டுவருவது ஆகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சியரா.இவி எலெக்ட்ரிக் காரையும் விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனால், சியரா பெட்ரோல்/ டீசல் காரை போன்று, எதிர்காலத்தில் சியரா.இவி எலெக்ட்ரிக் காரும் இரட்டை-மோட்டார் உடன் ஆல்-வீல் டிரைவ் உள்ளமைவுடன் கிடைக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 26, 2025, 22:15 [IST]
English summary
Tata sierra all wheel drive car will be launch on early 2027 said by tata chief officer
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X