22 வருஷம் ஆச்சுயா உன்ன பாத்து! மாருதியை குழி தோண்டி புதைக்க போகும் புதிய கார்! விலை இவ்ளோதானா!
இந்திய சந்தையில் டாடா சியரா (Tata Sierra) கார், கடந்த 1991ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த டாடா சியரா கார், கடந்த 2003ம் ஆண்டு வரை உற்பத்தி செய்யப்பட்டது. இந்த சூழலில், 22 வருடங்களுக்கு பிறகு, டாடா சியரா கார், கூடிய விரைவில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள டாடா சியரா கார், வரும் நவம்பர் 25ம் தேதி (November 25), விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம், புதிய சியரா காரின் டீசர் வீடியோக்களை (Teaser Videos) தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.

இந்த வரிசையில் டாடா மோட்டார்ஸ் கார்ஸ் நிறுவனத்தின் யூடியூப் (YouTube) பக்கத்தில் டாடா சியரா காரின் புதிய டீசர் வீடியோ ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசர் வீடியோவில், டாடா சியரா காரின், உட்புறத்தை நம்மால் பார்க்க முடிகிறது. இதன் மூலம் டாடா சியரா காரில், பனரோமிக் சன்ரூஃப் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர டாடா சியரா காரில், லெவல் 2 அடாஸ், வயர்லெஸ் சார்ஜர், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் மற்றும் 6 ஏர்பேக்குகள் போன்ற வசதிகளும் (Features) வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

செயல்திறனை பொறுத்தவரையில், பெட்ரோல் மற்றும் டீசல் என 2 இன்ஜின் ஆப்ஷன்களையும் நாம் எதிர்பார்க்கலாம். இந்திய சந்தையில் முதலில் டாடா சியரா காரின் ஐசி இன்ஜின் வெர்ஷன்தான் (பெட்ரோல், டீசல்) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை அனேகமாக 11 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 20 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம். ஐசி இன்ஜின் வெர்ஷனை தொடர்ந்து, டாடா சியரா காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் ஆரம்ப விலை அனேகமாக 20 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 25 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம். இவை அனைத்துமே எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான், அதிகாரப்பூர்வமான விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்படும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா சியரா ஐசி இன்ஜின் வெர்ஷனின் வருகையானது, மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) மற்றும் போக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) போன்ற கார்களுக்கு எல்லாம் நெருக்கடியை ஏற்படுத்தலாம்.
அதே நேரத்தில் டாடா சியரா காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனின் வருகையானது, ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் (Hyundai Creta Electric), எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV) மற்றும் மஹிந்திரா பிஇ 6 (Mahindra BE 6) போன்ற எலெக்ட்ரிக் கார்களுக்கு எல்லாம் விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








