மாருதியை ஒழிச்சே தீரணும்னு கங்கணம் கட்டிய டாடா! போட்டி நிறுவனங்களுக்கு இப்பவே நடுக்கம் எடுத்திருக்கும்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த புதிய தலைமுறை டாடா சியரா (Tata Sierra), நேற்று முன் தினம் (நவம்பர் 25) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதைய நிலையில் புதிய தலைமுறை டாடா சியரா காரில், 2 பெட்ரோல் மற்றும் 1 டீசல் என மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine options) வழங்கப்பட்டுள்ளன.

அவை 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகியவை ஆகும். ஆனால் எதிர்காலத்தில் புதிய தலைமுறை டாடா சியரா காரில், அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடிய சிஎன்ஜி மற்றும் ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன்களும் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Tata Sierra SUV

புதிய தலைமுறை டாடா சியரா காரானது, அர்கோஸ் (ARGOS) பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது பெட்ரோல், டீசல் இன்ஜின்கள் மட்டுமல்லாது, சிஎன்ஜி மற்றும் ஹைப்ரிட் இன்ஜின்களுக்கும் சப்போர்ட் ஆகும். எனவே புதிய தலைமுறை டாடா சியரா காரில், கூடுதலாக சிஎன்ஜி மற்றும் ஹைப்ரிட் ஆப்ஷன்களை வழங்குவது என்பது எளிமையான ஒரு விஷயம்தான்.

இங்கே மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். புதிய தலைமுறை டாடா சியரா காரானது, தற்போதைய நிலையில் 5 சீட்டர் ஆப்ஷனில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள மாடல், 2 வரிசைகளை மட்டுமே கொண்டதாக இருக்கும்.

New Tata Sierra

ஆனால் எதிர்காலத்தில் புதிய தலைமுறை டாடா சியரா காரில், 3 வரிசைகளை கொண்ட 7 சீட்டர் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்வது குறித்தும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆராய தொடங்கியுள்ளது. இவற்றுடன் கூடுதலாக புதிய தலைமுறை டாடா சியரா காரில், ஆல் வீல் டிரைவ் (AWD - All Wheel Drive) ஆப்ஷனை வழங்கவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

டாடா சியரா காரின் ஐசி இன்ஜின் வெர்ஷனில் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் 2027ம் ஆண்டு தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரியான விவேக் ஸ்ரீவஸ்தா உறுதி செய்துள்ளார். இது குறித்து ஆட்டோ கார் இந்தியா தளம் தற்போது செய்தி வெளியிட்டுள்ளது.

இவை எல்லாம் தவிர டாடா சியரா காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் அடுத்த வருடம் (2026) விற்பனைக்கு வருவதும் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே கடந்த 1991-2003ம் ஆண்டு வரை விற்பனையில் இருந்து பழைய டாடா சியராவை போலவே, புதிய தலைமுறை மாடலும், விற்பனையில் சாதனைகளை படைக்கும் என கருதப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: புதிய தலைமுறை டாடா சியரா காரின் ஐசி இன்ஜின் வெர்ஷனின் ஆரம்ப விலை வெறும் 11.49 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த விலைக்கு புதிய தலைமுறை டாடா சியரா மிகவும் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுகிறது.

எனவே புதிய தலைமுறை டாடா சியரா ஒவ்வொரு மாதமும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். இப்படிப்பட்ட ஒரு சூழலில், சிஎன்ஜி, ஹைப்ரிட், 7 சீட்டர், ஆல் வீல் டிரைவ் மற்றும் எலெக்ட்ரிக் என புதிய தலைமுறை டாடா சியரா காரின் ஏராளமான புதிய வெர்ஷன்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன.

இது அதன் நேரடி போட்டி மாடல்களான மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மற்றும் கியா செல்டோஸ் (Kia Seltos) போன்ற கார்களுக்கு எல்லாம் விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, November 27, 2025, 18:15 [IST]
English summary
Tata sierra cng hybrid 7 seater awd in the works check all details here
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+