விலை ரொம்ப கம்மி தான்! டாடா சியாரா முழு விலை பட்டியல் வந்துடுச்சு!
இந்தியாவில் டாடா நிறுவனம் சியாரா காரின் பேஸ் வேரியன்ட் விலை மட்டும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்து வேரியன்ட்களுக்கான விலை விபரங்கள் வெளியாகியுள்ளது. இந்த கார் ரூ11.49 லட்சம் முதல் ரூ14.49 லட்சம் வரையிலான விலை நிர்ணயம் செய்யப்பட்டடுள்ளது. இது குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய சியாரா காரை அறிமுகப்படுத்தியிருந்தது. இந்தகார் அறிமுகமாகும் போது பேஸ் வேரயின் விலை மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது முழு வேரியன்டிற்கான விலை விபரங்கை வெளியிட்டுள்ளுது. இதன்படி ரூ11.49 லட்சம் முதல் ரூ17.99 லட்சம் வரை பெட்ரோல் வேரியன்ட்கள் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளுது. இது வே டீசல் வேரியன்டில் ரூ12.99 லட்சம் முதல் ரூ18.49 லட்சம் வரையிலான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

டாடா நிறுவனம் சியாரா காரில் 5 வேரயின்ட்களை வெளியிட்டுவருகிறது. அதன்படி ஸ்மார்ட் +, ப்யூர், ப்யூர்+, அட்வெஞ்சர், அட்வெஞ்சர் + ஆகிய வேரயின்ட்கள் உள்ளது. இந்த சியாரா கார் 20 ஆண்டுகள் பின்பு வருவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த காருக்கான புக்கிங் வரும் 16ம் தேதி துவங்குகிறது. அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் மூலம் முன்பதிவு செய்யலாம். அல்லது கம்பெனியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புக்கிங் செய்யலாம்.
டாடா சியாரா 1.5லி எம்டி ஸ்மார்ட் + வேரயின்ட் - ரூ11.49 லட்சம் என்ற விலையிலும், ப்யூர் வேரியன்ட் ரூ12.99 லட்சம் என்ற விலையிலும், ஆட்டோமெட்டிக் ப்யூர் வேரியன்ட் ரூ14.49 லட்சம் என்ற விலையிலும், எம்டி ப்யூர் + வேரியன்ட் ரூ14.49 லட்சம் என்ற விலையிலும், ஆட்டோமெட்டிக் ஃப்யூர்+ வேரியன்ட் ரூ15.99 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது. எம்டி அட்வெஞ்சர் வேரயின்ட் ரூ15.29 லட்சம் என்ற விலையிலும், ஆட்டோமெட்டிக் அட்வெஞ்சர் வேரயின்ட் ரூ16.79 லட்சம் என்ற விலையிலும், எம்டி அட்வெஞ்சர் + வேரியன்ட் ரூ15.99 லட்சம் என்ற விலையிலும், அட்டோமெட்டிக் அட்வெஞ்சர்+ வேரியன்டை பொருத்தவரை ரூ17.99 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது. இது எல்லாம் பெட்ரோல்இன்ஜின் வேரியன்ட் விலைகள் தான்.

இதுவே டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை பொருத்தவரை எம்டி ஸ்மார்ட் வேரயின்ட் ரூ12.99 லட்சம் வகையிலான வகையில் விற்பனைக்கு வருகிறது. எம்டி ப்யூர் வேரியன்டை பொருத்தவரை ரூ14.49 லட்சம் வரையிலான விலையிலும், ஆட்டோமெட்டிக் ப்யூர் வேரியன்டை பொருத்தவரை ரூ15.99 லட்சம் என்ற விலையிலும்,எம்டி ஃப்யூர் + வேரியன்டை பொருத்தவரை ரூ15.99 லட்சம் என்ற விலையிலும், ஆட்டோமெட்டிக் ப்யூர்+ வேரியன்டை பொருத்தவரை ரூ17.49 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. எம்டி அட்வெஞ்சர் வேரயின்டை பொருத்தவரை ரூ16.49 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. எம்டி அட்வெஞ்சர் + வேரியன்டை பொருத்தவரை ரூ17.19 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. ஆட்டோமெட்டிக் அட்வெஞ்சர் வேரயின்டை பொருத்தவரை ரூ18.49 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
இந்த காரின் பெட்ரோல் வேரியன்டை பொருத்தவரை 1.5 லிட்டர் ரிவோட்ரான் இன்ஜின் பொருத்தப்ப்டடுள்ளது. இது 104.5 பிஎச்பி பவரையும், 145 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த கார் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டிசிஏ ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. டீசல் இன்ஜினை பொருத்தவரை 1.5 லிட்டர் கைரோ ஜெட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 116 பிஎச்பி பவர் மற்றும் 260 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இது 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸை கொண்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டாடா நிறுவனம் சிறப்பான வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்த விலை விபரங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








