மாருதிக்கு இப்பவே ஒடம்பெல்லாம் வெடவெடத்து போயிருக்கும்! 22 வருஷத்துக்கு பின் அந்த கார் மறுபடியும் வருது!

இந்திய சந்தையில் ஒரு சமயத்தில் மிகவும் பிரபலமாக இருந்த கார்களில் ஒன்று டாடா சியரா (Tata Sierra). கடந்த 1991ம் ஆண்டில் இருந்து 2003ம் ஆண்டு வரை டாடா சியரா கார் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த சூழலில், சுமார் 22 வருடங்களுக்கு பிறகு, டாடா சியரா 'கம்பேக்' கொடுக்கவுள்ளது.

ஆம், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள புதிய டாடா சியரா கார், வரும் நவம்பர் 25ம் தேதி, அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது குறித்து கார்வாலே தளம் செய்தி வெளியிட்டுள்ளது. டாடா சியரா கார், ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் என 2 வெர்ஷன்களிலும் விற்பனை செய்யப்படவுள்ளது.

Tata Sierra EV

ஆரம்பத்தில் டாடா சியரா காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன்தான் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகி வரும் தகவல்கள், டாடா சியரா காரின் ஐசி இன்ஜின் வெர்ஷன்தான் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கின்றன. இதற்கு பிறகுதான் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வரவுள்ளது.

டாடா சியரா காரின் ஐசி இன்ஜின் வெர்ஷனை பொறுத்தவரையில், பெட்ரோல் மற்றும் டீசல் என 2 இன்ஜின்களுமே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மற்ற 2 பெரிய எஸ்யூவி ரக கார்களான டாடா ஹாரியர் (Tata Harrier) மற்றும் டாடா சஃபாரி (Tata Safari) ஆகிய கார்களில், டீசல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Tata Sierra EV Front Design

இந்த 2 கார்களிலும் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் கிடையாது. ஆனால் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களையும் கவரும் வகையில், டாடா சியரா காரில், பெட்ரோல் மற்றும் டீசல் என 2 இன்ஜின் ஆப்ஷன்களுமே வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டாடா சியரா காரின் வசதிகளை (Features) பொறுத்தவரையில், முன் பகுதியில் வழங்கப்படவுள்ள 3 திரைகள் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

தற்போதைய நிலையில் மஹிந்திரா எக்ஸ்இவி 9இ (Mahindra XEV 9e) காரில், இப்படி 3 திரைகள் வழங்கப்படுகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதுதவிர அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பையும், புதிய டாடா சியரா கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவை எல்லாம் தவிர, பனரோமிக் க்ளாஸ் ரூஃப், 360 டிகிரி கேமரா, முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் போன்ற வசதிகளையும், புதிய டாடா சஃபாரி கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்தத்தில் இது அதிநவீன வசதிகள் நிரம்பிய ஒரு காராக இருக்க போகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா சியரா காரின் ஐசி இன்ஜின் வெர்ஷனின் ஆரம்ப விலை அனேகமாக 11 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா, மாருதி சுஸுகி விக்டோரிஸ், கியா செல்டோஸ் போன்ற கார்களுக்கு எல்லாம், மிக கடுமையான நெருக்கடியை டாடா சியரா ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 28, 2025, 22:40 [IST]
English summary
Tata sierra debut date november 25 expected price features rivals
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+