இஎம்ஐ ரொம்ப கம்மியா இருக்குது! டாடா சியாரா பேஸ் மாடலுக்கு இஎம்ஐ இவ்வளவு தானா?

டாடா நிறுவனம் தனது சியாரா காரை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த கார் ரூ11.49 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த காரை வாங்க நினைப்பவர்கள் இந்த காருக்கு எவ்வளவு இஎம்ஐ செலுத்த வேண்டும்? எவ்வளவு முன்பணம் செலுத்த வேண்டும்? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டாடா நிறுவனம் 22 ஆண்டுகளுக்கு பிறகு தனது சியாரா என்ற காரை நவீனப்படுத்தி மீண்டும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த காரின் அறிமுகம் இன்று நடந்தது. இன்று இந்த காரின் பேஸ் மாடலுக்கான ஆரம்ப விலை மட்டுமே அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த கார் ரூ11.49 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த காருக்கான புக்கிங் டிசம்பர் 16ம் தேதி துவங்குகிறது. வரும் 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த காருக்கான டெலிவரி துவங்குகிறது.

Tata Sierra EMI Details

இந்த காருக்கான விலை அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த காரை வாங்க நினைப்பவர்கள் இந்த காருக்கு எவ்வளவு முன்பணம் செலுத்த வேண்டும்? எவ்வளவு இஎம்ஐ வரும் என கணக்கிட துவங்கிவிட்டனர். இந்த காரின் பேஸ் மாடலுக்கான இஎம்ஐ மற்றும் வட்டி விபரங்களை நாம் இங்கே விளக்கமாக வழங்கியுள்ளோம்.

இந்த காருக்காக அறிவிக்கப்பட்ட ஆரம்ப விலையான ரூ11.49 லட்சம் என்பது எக்ஸ் ஷோரூம் விலை தான் இது போக ஆர்டிஓ, இன்சூரன்ஸ் கட்டணம் எல்லாம் தனியாக வரும். நாம் ரூ10 லட்சம் கடனாக பெற்று பாக்கியுள்ள ரூ1.49 லட்சத்தை முன்பணமாக வைத்து இனி கணக்கிடப்போகிறோம். இந்த முன்பணத்துடன் சேர்த்து ஆர்டிஓ மற்றும் இன்சூரன்ஸ் ஆகியவற்றை நீங்கள் செலுத்த வேண்டும் என்பதை மனதில் வைத்து அடுத்து தொடருங்கள்.

Tata Sierra EMI Details

இந்த காருக்காக நீங்கள் வாங்கும் ரூ10 லட்சத்திற்கு ரூ8.5 சதவீதம் வட்டி என்றால் நீங்கள் 3 ஆண்டுகளில் திரும்ப செலுத்தும் வகையில் கடன் வாங்கும் போது ரூ31.568 இஎம்ஐ, 4 ஆண்டுகளில் திரும்ப செலுத்தும் வகையில் வாங்கும்போது 24,648 இஎம்ஐ, 5 ஆண்டுகளில் திரும்ப செலுத்தும் வகையில் வாங்கும் போது ரூ20,517 இஎம்ஐ, 6 ஆண்டுகளில் திரும்ப செலுத்தும் வகையில் வாங்கும் போது ரூ17,778 இஎம்ஐ, 7 ஆண்டுகளில் திரும்ப செலுத்தும் வகையில் வாங்கும் போது ரூ15,836 இஎம்ஐயாக செலுத்த வேண்டும்.

நீங்கள் 9 சதவீத வட்டி வகிதத்தில் வாங்கினால் 3 ஆண்டுகளுக்கு ரூ31,800, 4 ஆண்டுகளுக்கு ரூ24,885, 5 ஆண்டுகளுக்கு ரூ20,758, 6 ஆண்டுகளுக்கு ரூ18,026, 7 ஆண்டுகளுக்க ரூ16,089 இஎம்ஐயாக செலுத்த வேண்டும்.

நீங்கள் 9.5 சதவீத வட்டி வகிதத்தில் வாங்கினால் 3 ஆண்டுகளுக்கு ரூ32,033, 4 ஆண்டுகளுக்கு ரூ25,123, 5 ஆண்டுகளுக்கு ரூ21,002, 6 ஆண்டுகளுக்கு ரூ18,275, 7 ஆண்டுகளுக்க ரூ16,344 இஎம்ஐயாக செலுத்த வேண்டும்.

நீங்கள் 10 சதவீத வட்டி வகிதத்தில் வாங்கினால் 3 ஆண்டுகளுக்கு ரூ32,267, 4 ஆண்டுகளுக்கு ரூ25,363, 5 ஆண்டுகளுக்கு ரூ21,247, 6 ஆண்டுகளுக்கு ரூ18,526, 7 ஆண்டுகளுக்க ரூ16,601 இஎம்ஐயாக செலுத்த வேண்டும்.

நீங்கள் 10.5சதவீத வட்டி வகிதத்தில் வாங்கினால் 3 ஆண்டுகளுக்கு ரூ32,502, 4 ஆண்டுகளுக்கு ரூ25,603, 5 ஆண்டுகளுக்கு ரூ21,494, 6 ஆண்டுகளுக்கு ரூ18,779, 7 ஆண்டுகளுக்க ரூ16,861 இஎம்ஐயாக செலுத்த வேண்டும்.

நீங்கள் 11 சதவீத வட்டி வகிதத்தில் வாங்கினால் 3 ஆண்டுகளுக்கு ரூ32,739, 4 ஆண்டுகளுக்கு ரூ25,846, 5 ஆண்டுகளுக்கு ரூ21,742, 6 ஆண்டுகளுக்கு ரூ19,034, 7 ஆண்டுகளுக்க ரூ17,122 இஎம்ஐயாக செலுத்த வேண்டும்.

இதில் உங்களுக்கு எந்த வட்டி வகிதம் பொருந்தும் என்பது நீங்கள் கடன் பெறும் நிறுவனம் மற்றும் உங்களது முந்தைய கடன் திரும்ப செலுத்தும் முறையை பொருத்து மாறுபடும். இது மட்டுமல்ல ஒவ்வொரு நகரங்களுக்கும் எக்ஸ் ஷோரூம் விலையிலும் மாற்றங்கள் வரும். இதை கணக்கிட்டு நீங்கள் கார் வாங்கும் போது இறுதியான இஎம்ஐ விபரங்களை கடன் பெறும் நிறுவனங்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகனங்களுக்கு கடன் வாங்கும் போது பலர் வட்டி வகிதங்கள் மற்றும் இஎம்ஐ விபரங்களை சரியாக தெரிந்து கொள்ளாமல் வாங்கி பின்னர் சிரமப்படுகின்றனர். இதனால் நீங்கள் இதை செய்யும் போது சரியாக திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 25, 2025, 20:30 [IST]
English summary
Tata sierra emi details price and emi options
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+