டாடாவின் புதிய கார் குறைந்த விலையில் வாங்கினால் இப்படித்தான் இருக்கும்! அறிமுகமாகி இன்னும் 1 மாசம் கூட ஆகல

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் தனது சியரா (Sierra) எஸ்யூவி காரை பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த நவம்பர் 25ஆம் தேதி ஆரம்ப விலையை அறிவித்து, விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அதன்பின், இந்த காரின் விலைகள் பல்வேறு கட்டங்களாக ஒன்றன் ஒன்றாக வெளியிடப்பட்டன. நடுத்தர அளவிலான இந்த எஸ்யூவி, ரூ. 11.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் கிடைக்கிறது.

டாடா நிறுவனம் சியரா காரின் அனைத்து வேரியண்ட்களின் வெளி மற்றும் உட்புறத் தோற்றத்தை படங்களாக தனது இணையத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வகையில், ரூ.11.49 லட்சம் என்கிற இருப்பதிலேயே குறைவான விலையில் சியராவின் எண்ட்ரி-லெவல் 'ஸ்மார்ட்+' வேரியண்டின் படங்களையும் நம்மால் பார்க்க முடிகிறது.

tata sierra entry-level smart variant

எளிமையான தோற்றத்தில் இருக்கும் இந்த சியாரா ஸ்மார்ட்+ வேரியண்ட்டில் என்னென்ன மாதிரியான சிறப்பம்சங்களை பெறலாம் என்பதை பற்றி தான் இந்த தொகுப்பில் விரிவாகப் பார்க்கப் போகிறோம். சியாராவின் ஆரம்ப-நிலை வேரியண்ட்டாக இருப்பினும், ஸ்மார்ட்+ வேரியண்ட் ஆனது பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான என்ஜின் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது.

ரெவோட்ரான் டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் விலை ரூ.11.49 லட்சம் எனவும், க்ரையோஜெட் டீசல் என்ஜின் உடன் விலை ரூ.12.99 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது (அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள்). ஆனால், எந்த என்ஜின் உடன் வாங்கினாலும் சரி இந்த வேரியண்ட் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே வழங்கப்படுகிறது.

tata sierra entry-level smart variant

புதிய சியரா ஸ்மார்ட்+ வேரியண்டில் பை-எல்இடி புரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எலெக்ட்ரிக் மூலம் சரிசெய்யக்கூடிய ORVM-கள், பவர்டு டெயில்கேட், பின் ஜன்னல் கண்ணாடிகளுக்கான சன்ஷேட்கள், ஆட்டோ-ஹோல்ட் வசதியுடன் கூடிய எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் (EPB) போன்ற முக்கிய அம்சங்கள் கிடைக்கின்றன. மேலும், ஆட்டோ-டிம்மிங் IRVM, பின் இருக்கைகளுக்கும் ஏசி வென்ட்கள், டூயல்-டோன் பெயிண்ட், ஃப்ளஷ் ஃபிட்டிங் கதவு கைப்பிடிகளையும் இந்த வேரியண்ட்டில் பெறலாம்.

இவை மட்டுமின்றி, 45W டைப்-சி சார்ஜிங் போர்ட், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், எல்இடி டிஆர்எல்-கள், டெயில் லைட்கள் மற்றும் நான்கு பவர் விண்டோக்கள் ஆகியவையும் இந்த வேரியண்ட்டின் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, விலை குறைவான வேரியண்ட்டாக இருப்பினும், சியரா ஸ்மார்ட்+ வேரியண்ட்டில் ஆறு ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனுடன், EBD உடன் ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல் (HAC), ஹைட்ராலிக் பிரேக் அசிஸ்ட் (HBA), டிராக்‌ஷன் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (TSC), ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், பஞ்சர் ரிப்பேர் கிட் மற்றும் உயரத்தை சரிசெய்யக்கூடிய சீட் பெல்ட்கள் போன்ற பாதுகாப்பு வசதிகளும் கிடைக்கின்றன.

tata sierra entry-level smart variant

சியாராவின் இந்த எண்ட்ரி-லெவல் வேரியண்ட் மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. அவையாவன பிரிஸ்டைன் ஒயிட், பியூர் கிரே மற்றும் கூர்க் க்ளவுட்ஸ் ஆகும். இந்த வேரியண்ட்டில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் இருந்தாலும், தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் அல்லது ஆடியோ சிஸ்டம் இடம்பெறவில்லை.

ஏற்கனவே கூறியதுபோல், இந்த வேரியண்ட்டை அதிகப்பட்சமாக 106 எச்பி பவர் மற்றும் 145 என்.எம் டார்க் கொண்ட 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் அல்லது 118 எச்பி பவர் மற்றும் 260 என்.எம் டார்க் திறனை வழங்கக்கூடிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன் உடன் வாங்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடாவின் மாடர்ன் எஸ்யூவி காரான சியராவை குறைந்த விலையில் வாங்க விரும்புபவர்களுக்கு இந்த வேரியண்ட் ஏற்றதாக இருக்கும். மாருதி விக்டோரிஸ், ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் ஸ்கோடா குஷாக் போன்ற பல முன்னணி கார் மாடல்களுடன் டாடா சியரா நேரடியாக போட்டியிடுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, December 19, 2025, 19:58 [IST]
English summary
Tata sierra entry level smart plus variant look and specifications
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X