22 வருடங்களுக்கு பின் அதே பெயரில் வரும் டாடா கார்! அப்போ வாங்க முடியாம விட்டவங்களுக்கு நல்ல சான்ஸ்!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 'சியர்ரா' (Sierra) கார் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், டாடா சியர்ரா கார் ஒன்று அறிமுகத்திற்கு முன்னதாக பொது சாலையில் ஓட்டி பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை பற்றி இனி இந்த தொகுப்பில் காணலாம்.

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமாக விளங்கும் டாடா மோட்டார்ஸ், இந்த 2025ஆம் ஆண்டு துவங்கியதில் இருந்தே விற்பனையில் பெரிதும் சரிவை சந்தித்து வருகிறது. இதனை தவிர்க்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளில் டாடா நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே டாடா சியர்ரா கார் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

tata sierra ev electric car spotted

கடந்த ஜனவரி மாதத்தில் டெல்லியில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ (Bharat Mobility Global Expo) கண்காட்சியில் காட்சிக்கு நிறுத்தப்பட்டு இருந்த டாடா சியர்ரா கார் மற்ற டாடா கார்களை போன்று பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களிலும், எலக்ட்ரிக் வெர்சனிலும் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, முதலில் சியர்ரா இவி எலக்ட்ரிக் கார் தான் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. அதன்பிறகே பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் இந்த புதிய டாடா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது பொது சாலையில் ஓட்டி பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு இருப்பது, சியர்ரா இவி எலக்ட்ரிக் கார் ஆகும்.

tata sierra ev electric car spotted

இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், கார் முழுவதுமாக மறைப்புகளால் மூடப்பட்டு இருப்பினும் காரின் முகப்பு பகுதியில் கிரில் பகுதி முழுவதுமாக மூடப்பட்டு இருப்பதில் இருந்து இது சியர்ரா இவி எலக்ட்ரிக் கார் என்பதை அறிய முடிகிறது. இந்த சோதனை ஓட்டம் ஆனது புனேவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு அருகே நடத்தப்பட்டுள்ளது.

காரின் முன்பக்கத்தில் ஹெட்லைட்கள் இரண்டும் எல்இடி ஸ்ட்ரிப் (LED Strip) மூலமாக ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. இதற்கு கீழே ஸ்போர்டியான டிசைனில் முன்பக்க பம்பர் உள்ளது. சியர்ரா இவி காரின் முன்பகுதி ஆனது சமீப கால மாடர்ன் டாடா கார்களை ஒத்து காணப்படுகிறது. ஒட்டுமொத்தத்தில் புதிய டாடா சியர்ரா கார் பருத்த உடலமைப்பில் பெட்டகம் வடிவிலான தோற்றத்தை கொண்டுள்ளது.

இதற்கேற்ப அலாய் சக்கரங்கள் மற்றும் அவற்றிற்கு மேலே வீல் ஆர்ச்சுகள் நன்கு பெரியதாக வழங்கப்பட்டுள்ளன. சியர்ரா இவி எலட்ரிக் கார் தான் முதலில் அறிமுகம் செய்யப்படும் என்பதை டாடா நிறுவனம் இதுவரையில் உறுதிப்படுத்தவில்லை. இதனை தொடர்ந்து, அறிமுகம் செய்யப்பட உள்ள சியர்ரா பெட்ரோல்/ டீசல் காரில் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல், டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆட்டோ எக்ஸ்போவில் எத்தகைய தோற்றத்தை கொண்டிருந்ததோ கிட்டத்தட்ட அதேபோன்றதான தோற்றத்தை தான் தற்போது சோதனை ஓட்டத்திலும் சியர்ரா இவி கார் கொண்டுள்ளது. இதில் இருந்து ஆட்டோ எக்ஸ்போவுக்கு பிறகு சியர்ராவின் தோற்றத்தில் பெரியதாக எந்த மாற்றத்தையும் டாடா நிறுவனம் கொண்டுவரவில்லை என்பதை அறிய முடிகிறது. டாடா சியர்ரா இவி எலக்ட்ரிக் காரின் அறிமுகத்தை இந்த 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் எதிர்பார்க்கிறோம்.

Source: CarBlogIndia (https://www.carblogindia.com/)

More from DriveSpark

Article Published On: Monday, July 14, 2025, 22:20 [IST]
English summary
Tata sierra ev electric car spotted ahead of launch in pune maharashtra
மேலும்... #tata motors #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+