சிதம்பர ரகசியத்தை வெளியிட போகும் டாடா! வெடவெடத்து போன மாருதி, ஹூண்டாய்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த கார்களில் ஒன்று புதிய தலைமுறை டாடா சியரா (Tata Sierra). எஸ்யூவி ரகத்தை சேர்ந்த இந்த காரை, டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

கடந்த 1991ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டாடா சியரா, கடந்த 2003ம் ஆண்டு விற்பனையில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டது. இதன்பின் சுமார் 22 ஆண்டுகள் கழித்து, புதிய தலைமுறை டாடா சியரா கார், தற்போது மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

New Tata Sierra

புதிய தலைமுறை டாடா சியரா காரில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்பட்டுள்ளன. அவை 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின், 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகியவை ஆகும்.

அதே நேரத்தில் வசதிகளை பொறுத்தவரையில், பனரோமிக் சன்ரூஃப், முன் பக்க டேஷ்போர்டில் 3 திரைகள், டால்பி அட்மாஸ், ஐரா கனெக்டட் கார் தொழில்நுட்பம், புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப், ரியர் ஏசி வெண்ட்கள் மற்றும் ரியர் விண்டோ சன்ஷேட் போன்ற வசதிகள் (Features) எல்லாம், புதிய தலைமுறை டாடா சியரா காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

Tata Sierra SUV

மறுபக்கம் பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், 6 ஏர்பேக்குகள், லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு மற்றும் நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் போன்றவை எல்லாம், புதிய தலைமுறை டாடா சியரா காரின் மிகவும் முக்கியமான அம்சங்களாக உள்ளன.

ஆனால் தற்போதைய நிலையில் டாடா சியரா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வமான அறிவிப்பின்படி பார்த்தால், புதிய தலைமுறை டாடா சியரா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 11.49 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை டாடா சியரா காரின் எஞ்சிய வேரியண்ட்களுக்கான விலைகள் எவ்வளவு? என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. அது கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. கார்வாலே தளம் வெளியிட்டுள்ள செய்தியின்படி பார்த்தால், நடப்பு டிசம்பர் மாதத்தின் 2 அல்லது 3வது வாரத்தில் புதிய தலைமுறை டாடா சியரா காரின் அனைத்து வேரியண்ட்களுக்கான முழுமையான விலை பட்டியலும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா நிறுவனம் ரகசியமாக வைத்துள்ள இந்த தகவலை தெரிந்து கொள்ள வாடிக்கையாளர்கள் பலரும் ஆர்வமுடன் காத்து கொண்டுள்ளனர். டாடா சியரா கார் மொத்தம் 7 வேரியண்ட்களில் (Variants) கிடைக்கும். அவை ஸ்மார்ட் ப்ளஸ், ப்யூர், ப்யூர் ப்ளஸ், அட்வென்ஜர், அட்வென்ஜர் ப்ளஸ், அக்காம்ப்ளீஸ்டு மற்றும் அக்காம்ப்ளீஸ்டு ப்ளஸ் ஆகியவை ஆகும்.

அதே நேரத்தில் ப்யூர் க்ரே, ப்ரிஸ்டன் ஒயிட், அந்தமான் அட்வென்ஜர், மூணார் மிஸ்ட், கூர்க் க்ளவுட்ஸ் மற்றும் பெங்கால் ரூஜ் என 6 கலர் ஆப்ஷன்களில் (Colour Options) புதிய தலைமுறை டாடா சியரா கார் கிடைக்கும். புதிய தலைமுறை டாடா சியரா காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் வரும் டிசம்பர் 16ம் தேதி தொடங்குகின்றன. டெலிவரி (Delivery) பணிகள் வருகின்றன ஜனவரி 15ம் தேதியில் இருந்து தொடங்குகின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மற்றும் கியா செல்டோஸ் (Kia Seltos) ஆகிய கார்களுக்கு எல்லாம், புதிய தலைமுறை டாடா சியரா விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 3, 2025, 19:27 [IST]
English summary
Tata sierra full price list to be revealed soon check all details here
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+