எப்ப விற்பனைக்கு வருமோனு நீங்க காத்திருக்கும் கார்.. முதல்முறை கேமிரால சிக்கியிருக்கு! முழுசா மறச்சுட்டாங்க!

முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் கார் ஒன்று இந்திய சாலையில் வலம் வரும் காட்சிகள் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. அது வேறு ஏதோ ஓர் கார் மாடல் இல்லைங்க, இந்தியாவே பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் சியாரா (Sierra) கார் மாடலே அது ஆகும். ஒரு காலத்தில் இந்தியாவில் விற்பனையில் இருந்த புகழ் பெற்ற கார் மாடல்களில் ஒன்றே சியாரா. இந்த காரையே புதிய அவதாரத்தில் விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் களமிறங்கி இருக்கின்றது, டாடா மோட்டார்ஸ் (Tata Motors).

இந்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடைய சஃபாரி கார் மாடலை புதிய அவதாரத்தில் விற்பனைக்குக் கொண்டு வந்தது. இதே பாணியிலேயே இந்த சியாரா கார் மாடலையும் அது அட்வான்ஸ்டு அம்சங்கள் மற்றும் நவீன யுகத்திற்கு ஏற்ற டிசைனில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

Tata sierra spied for the first time

இப்படி தயார் செய்யப்பட்ட சியாரா காரே இப்போது இந்தியா சாலைகளில் வலம் வர தொடங்கி இருக்கின்றது. அவ்வாறு சோதனையோட்டம் செய்யும்போது எடுக்கப்பட்ட படங்களே இணையத்தில் தற்போது வைரலாகிக் கொண்டிருக்கின்றன. இந்திய சாலையில் இந்த கார் வலம் வருவதும், அது கேமிராவின் கண்களில் சிக்குவதும் இதுவே முதல் முறையாகும்.

ஆகையால், கார் ஆர்வலர்கள் பலரின் கவனத்தை இந்த கார் மாடல் வெகுவாகக் கவர்ந்திருக்கின்றது. அதேவேளையில், இந்த காரை முழுமையாக மறைத்த நிலையில் டாடா மோட்டார்ஸ் சோதனையோட்டத்திற்கு உட்படுத்தியதால், அந்த சோதனையோட்ட சியாரா-வின் சிறப்புகள் பற்றிய விபரங்களை எங்களால் முழுமையாக இங்கே தெரியப்படுத்த முடியவில்லை.

Tata sierra spy pic shows front light look

அதேவேளையில், இது விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது என்பதை மட்டும் எங்களால் நிச்சயம் கூற முடியும். இந்த ஆண்டின் இறுதி அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த காரின் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகின்றது. இதை முன்னிட்டே நிறுவனம் தற்போது சியாராவின் சோதனையோட்ட பணிகளை தொடங்கி இருக்கின்றது. இந்த சோதனையோட்ட சியாரா கார் மாடலில் ஸ்டீல் வீல்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

ஆகையால், விற்பனைக்கு வர இருக்கும் சியாராவிலும் இதே மாதிரியான ஸ்டீல் வீலே எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், இதன் உயர்நிலை தேர்வில் 19 அங்குல அலாய் வீல்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தொடர்ந்து, டாடா மோட்டார்ஸ் இந்த காரை பெட்டி போன்ற அமைப்பைக் கொண்டதாகவே தயார் செய்திருக்கின்றது.

Tata sierra spy pic shows front view

Source: Autocar India தொடர்ந்து, தனித்துவமான எல்இடி லைட்டுகள் ஆகியவற்றையும் இந்த காருக்கு அதிக அழகைச் சேர்க்கும் விதமாக வழங்கி இருக்கின்றனர். இது இப்போது விற்பனையில் மற்ற டாடா கார்களைக் காட்டிலும் தனித்துவமானதாகவும், கவர்ச்சியானதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அடாஸ் போன்ற அட்வான்ஸ்டு அம்சங்களும் இந்த காரில் இடம் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டாடா மோட்டார்ஸ் சியாரா காரை ஐசிஇ மற்றும் எலெக்ட்ரிக் என இரண்டு விதமான வெர்ஷன்களிலும் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இதன் ஐசிஇ வெர்ஷனில் 170 பிஎஸ் திறன் கொண்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டாரே எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல், இதன் மின்சார வெர்ஷன் அதிக ரேஞ்சை தரக் கூடியதாகவே இருக்கும். ஓர் முழு சார்ஜில் 550 கிமீ ரேஞ்சையே வழங்கக் கூடியதாகவே அது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மின்சார கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே மார்க்கெட்டில் தன்னுடைய ஆதிக்கத்தை தொடர்ச்சியாக செலுத்தும் விதமாக அது அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் கார்களைக் களமிறக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. இதன் வெளிப்பாடாகவே சியாராவை ஐசிஇ மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷனில் உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த காரின் வருகை பெரிய பெரிய உருவம் கொண்ட ஃபார்ச்சூனர் மாதிரியான கார்களுக்கு மிகப் பெரிய போட்டியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 20, 2025, 23:25 [IST]
English summary
Tata sierra ice testing in india launch expected later this year
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X