22 வருஷமா இந்த காருக்காக தான் தவம் கிடந்தோம்! இப்ப டீசர் வேற வந்துடுச்சு!

டாடா நிறுவனத்தின் சியாரா கார் வரும் 25ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகவுள்ள நிலையில் இந்த கார் குறித்த டீசரை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த கார் மிட் சைஸ் எஸ்யூவி செக்மெண்டில் மிகப்பெரிய புரட்சி செய்யும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2003 வரை விற்பனையில் இருந்த காரை இந்நிறுவனம் மீண்டும் கொண்டு வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டாடா நிறுவனம் கடந்த 1991ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை சியாரா என்ற காரை விற்பனை செய்து வந்தது. பின்னர் இந்த காரின் விற்பனை நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் இதே பெயரில் புதிய காரை விற்பனைக்கு கொண்டுவருகிறது. இந்த கார் டாடா கர்வ் மற்றும் ஹாரியர் இவி ஆகிய கார்களுக்கு இடையே பொசிஷன் செய்யப்படுகிறது.

Tata Sierra launch Date

டாடா நிறுவனம் இந்த காரில் பல்வேறு இன்ஜின் ஆப்ஷன்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தை வைத்துள்ளது. அதன்படி இந்த கார் 1.5 லிட்டர் இன்ஜின் பொரத்தப்படுகிறது. இது போக டர்போ சார்ஜ்டு டிஜிடிஐ மற்றும் மற்றொரு டீசல் இன்ஜின் ஆகிய 3 விதமான இன்ஜின் ஆப்ஷன்களில் வரவுள்ளது. இதில் டர்போ பெட்ரோல் இன்ஜின் 168 பிஎஸ் பவரையும் 280 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஒரு இன்ஜினாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது.

இந்த கார் டாடா ஹாரியர் இவி கார் தயாரிக்கப்படும் அதே பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படுகிறது. இந்த கார் பெட்ரோல், டீசல் இன்ஜின் மட்டுமல்லாமல் எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் வெளியாக வாய்ப்புள்ளது. இந்த காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ வரை ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஃபாஸ்ட் சார்ஜிங் தொழிற்நுட்பமும் உட்பகுத்தப்பட்டுள்ளது.

Tata Sierra launch Date

இந்த கார் பார்ப்பதற்கு பழைய சியாரா கார் போல இருக்க வேண்டும் என்பதால் பின்பக்கம் கிளாஸ் பேனல் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் ஸ்லீக்கான மற்றும் அதிக ஏரோடைமிக் அம்சம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது போக எல்இடி லைட் பார், ஸ்பிளிட் ஹெட்லைட், ஆகிய அம்சங்கள் உள்ளன.

இந்த காரின் உட்புறம் 3 டிஸ்பிளேகள் இடம் பெறவுள்ளது. ஒன்று டிரைவருக்கான இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டராகவும், மற்றொன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும், 3வது டிசைன் முன்பக்க பயணிக்கான சிஸ்டமாகவும் வழ்கப்பட்டள்ளது. இ்நத காரின் உட்புறம் பிரிமியமான மெட்டிரியல் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. டுயல் டோன் உட்புற கட்டமைப்பு, ஆம்பியன்ஸ் லைட்டிங், பானரோமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர், வென்டிலேட் செய்யப்பட்ட பின்பக்க சீட்டுகள், ஹார்மன் ஆடியோ செட்டப் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது.

இதுபோக இந்த காருக்கு பாதுகாப்பாக லெவல் 2 அடாஸ், 360 டிகிரி கேமரா, எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், 6 ஏர்பேக்குகள், எலெகட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், மல்டிபிள் டிரைவ்மோடுகள் உள்ளிட்ட அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன. சியாரா கம்பஷன் இன்ஜின் வெர்ஷன் மார்கெட்டில் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஹோண்டா எலவேட், ஆகிய கார்களுக்கு போட்டியாகவும், இதன் எலெக்ட்ரிக் வெர்ஷவன் ஹூண்டாய் கிரெட்டா எலெக்ட்ரிக், மஹிந்திரா எக்ஸ்இவி 9இ மற்றும் விரைவில் வரவுள்ள இவிட்டாரா மற்றம் அர்பன் க்ரூஸர் பிஇவி ஆகிய கார்களுக்கு போட்டியாகவும் களம் இறங்குகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நிறுவனத்தின் சியாரா காருக்கு மார்கெட்டில் நல்ல பெயர் இருக்கிறது. இந்தகாரை வாங்க மக்கள் பலர் காத்திருக்கும் நிலையில் இந்த காரின் டீசரில் இந்த காரின் லுக் பலரை ஈர்த்துள்ளது. இதனால் இந்தகார் விற்பனைக்கு வந்தால் மார்கெட்டில் மிகப்பெரிய போட்டி ஏற்படும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Sunday, November 2, 2025, 15:05 [IST]
English summary
Tata sierra launch date officially teased in india nov 25
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+