கால் நூற்றாண்டுக்கு பின் மறுபடியும் வருது! வெடவெடத்து போன போட்டி நிறுவனங்கள்! நாளைக்குதான் உண்மையான தீபாவளி!
இந்திய சந்தையில் ஒரு சமயத்தில் மிகவும் பிரபலமாக இருந்த கார் டாடா சியரா (Tata Sierra). கடந்த 1991ம் ஆண்டு தொடங்கப்பட்ட டாடா சியரா காரின் விற்பனை 2003ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இருப்பினும் சுமார் 22 ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு, புதிய தலைமுறை டாடா சியரா கார், இந்திய சந்தையில் நாளை (நவம்பர் 25) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
டாடா சியரா கார் முதலில் ஐசி இன்ஜின் வெர்ஷனில் மட்டும் (பெட்ரோல் மற்றும் டீசல்) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதன் பிறகு இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். இதன்படி பார்த்தால், நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவிருப்பது, டாடா சியரா காரின் ஐசி இன்ஜின் வெர்ஷன் ஆகும்.

இதில், லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), 360 டிகிரி கேமரா மற்றும் 6 ஏர்பேக்குகள் போன்ற பாதுகாப்பு வசதிகள் (Safety Features) எல்லாம் வழங்கப்படவுள்ளன. இவை எல்லாம் தவிர, டேஷ்போர்டில் 3 திரைகளையும், புதிய தலைமுறை டாடா சியரா கார் கொண்டிருக்கும்.
பொதுவாக பெரும்பாலான கார்களில் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் என 2 திரைகள் மட்டுமே வழங்கப்பட்டிருக்கும். ஆனால் புதிய தலைமுறை டாடா சியரா காரின் டேஷ்போர்டில் கூடுதலாக முன் பகுதி பயணியின் இருக்கை முன்பாகவும் ஒரு திரை வழங்கப்பட்டிருக்கும்.

இந்த வசதி புதிய தலைமுறை டாடா சியரா காரின் டாப் வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் இந்த காரின் விலை குறைவான ஆரம்ப நிலை வேரியண்ட்களில் வழக்கமாக மற்ற கார்களில் வழங்கப்படுவதை போன்று 2 திரைகள் மட்டுமே இடம்பெற்றிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதவிர பனரோமிக் சன்ரூஃப், கனெக்டட் கார் தொழில்நுட்பம், ட்யூயல் டோன் அப்ஹோல்ஸ்ட்ரி போன்ற வசதிகளையும், புதிய தலைமுறை டாடா சியரா கொண்டிருக்கும். இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய டாடா சியரா ஐசி இன்ஜின் வெர்ஷனின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 10 அல்லது 11 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போதுதான், அதிகாரப்பூர்வமான விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்படும். புதிய தலைமுறை டாடா சியரா காரின் வருகை, இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில், போட்டியை இன்னும் கடுமையாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris), மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) போன்ற கார்களுக்கு எல்லாம், புதிய தலைமுறை டாடா சியரா காரின் வருகை விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








