22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விற்பனைக்கு வந்தது டாடா சியரா! விலை இவ்ளோதானா! மாருதி சோலி முடின்ச்!
இந்திய சந்தையில் கடந்த 1991ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஒரு கார் டாடா சியரா (Tata Sierra). எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த இந்த காரின் விற்பனை கடந்த 2003ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இந்த சூழலில், 22 வருடங்களுக்கு பின்னர், டாடா சியரா இந்திய சந்தையில் இன்று (நவம்பர் 25) மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என டாடா மோட்டார்ஸ் (Tata Motors) அறிவித்திருந்தது.
இதன்படி சற்று நேரத்திற்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், டாடா சியரா கார், இந்திய சந்தையில் மீண்டும் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புத்தம் புதிய கார் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், டாடா சியரா காரின் அனைத்து வேரியண்ட்களிலும், ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் அனைத்து பயணிகளுக்கும் 3 பாயிண்ட் இஎல்ஆர் சீட் பெல்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் 360 டிகிரி சர்ரவுண்ட் வியூ கேமரா, நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம் போன்ற பாதுகாப்பு வசதிகளையும் டாடா சியரா கொண்டுள்ளது.
அத்துடன் ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம், முன் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள் போன்ற பாதுகாப்பு வசதிகளையும், டாடா சியரா கொண்டுள்ளது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பையும், டாடா சியரா பெற்றுள்ளது. இதில், செக்மெண்ட்டிலேயே முதல் முறையாக இன்டலிஜென்ட் ஸ்பீடு அஸிஸ்ட், லேன் கீப் அஸிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் உள்பட 20க்கும் மேற்பட்ட வசதிகள் அடங்கியுள்ளன.

செயல்திறனை பொறுத்தவரையில், டாடா சியரா காரில், மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine options) வழங்கப்பட்டுள்ளன. அவை 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டைரக்ட் இன்ஜக்ஸன் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகியவை ஆகும்.
அதே சமயம் டாடா சியரா காரின் மற்ற வசதிகளை பொறுத்தவரையில், பனரோமிக் சன்ரூஃப் (இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களிலேயே இதுதான் பெரியது என டாடா மோட்டார்ஸ் கூறியுள்ளது), முன் பக்க டேஷ்போர்டில் 3 திரைகள் (டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் + டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் + முன் பக்க பயணியின் இருக்கைக்கு முன்பாக ஒரு திரை) ஆகியவை எல்லாம் இந்த காரின் முக்கியமான அம்சங்களாக உள்ளன.
இவை எல்லாம் தவிர, சப் வூஃபர் உடன் ஜேபிஎல் பிளாக் 12 ஸ்பீக்கர் சிஸ்டம், டால்பி அட்மாஸ், 70க்கும் மேற்பட்ட வசதிகள் உடன் ஐரா கனெக்டட் கார் தொழில்நுட்பம், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், ரியர் விண்டோ சன்ஷேட், ரியர் ஏசி வெண்ட்கள், டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் ஸ்டியரிங் போன்ற வசதிகளும், டாடா சியரா காரில் கொடுக்கப்பட்டுள்ளன.
இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய டாடா சியரா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 11.49 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) என்பதுடன், அறிமுக சலுகை விலை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த காரின் மற்ற வேரியண்ட்களுக்கான விலைகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
புதிய சியரா காருக்கு அதிகாரப்பூர்வமாக முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் வரும் டிசம்பர் 16ம் தேதியில் இருந்து தொடங்குகின்றன. அதே நேரத்தில் சியரா காரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி (Delivery) செய்யும் பணிகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வரும் ஜனவரி 15ம் தேதியில் இருந்து தொடங்கவுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா சியரா காரின் வருகை, இந்திய சந்தையில், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) மற்றும் மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris) ஆகிய கார்ளுக்கு விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அத்துடன் மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun), ஹோண்டா எலவேட் (Honda Elevate) மற்றும் எம்ஜி அஸ்டர் (MG Astor) போன்ற கார்களுக்கும் இது விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








