மொத்த உலகையும் அண்ணாந்து பார்க்க வைத்த டாடா கார்! இவ்ளோ மைலேஜ் குடுக்குதா! மாருதி சோலி முடின்ச்!
இந்தியாவில் சுமார் 22 ஆண்டு கால இடைவெளிக்கு பின்னர், டாடா சியரா (Tata Sierra) கார், தற்போது மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டாடா சியரா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு ஒரு சில நாட்கள் மட்டுமே கடந்துள்ள சூழலில், தற்போது பிரம்மாண்டமான சாதனை ஒன்றை, டாடா சியரா படைத்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள நாட்ராக்ஸ் (NATRAX) வாகன சோதனை தளத்தில், டாடா சியரா கார், சமீபத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. கடந்த நவம்பர் 30ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு 7 மணிக்கு முடிவடைந்தது. இடைப்பட்ட இந்த 12 மணி நேரமும் டாடா சியரா கார் தொடர்ந்து இயக்கப்பட்டது.

இடையில் டிரைவர்களை மாற்றுவதற்காக மட்டும் அவ்வப்போது டாடா சியரா கார் நிறுத்தப்பட்டது. இந்த சோதனையில் டாடா சியரா கார் ஒரு லிட்டருக்கு 29.9 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த சாதனை தற்போது இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் (India Book Of Records) இடம்பெற்றுள்ளது.
மைலேஜ் சோதனை மட்டுமல்லாது, டாடா சியரா காரின் அதிகபட்ச வேகம் தொடர்பான சோதனையும், நாட்ராக்ஸ் வாகன சோதனை தளத்திலேயே மேற்கொள்ளப்பட்டது. அப்போது டாடா சியரா கார் மணிக்கு 222 கிலோ மீட்டர் என்ற அதிகபட்ச வேகத்தை எட்டி அனைவரையும் பிரம்மிக்க வைத்தது.

நாட்ராக்ஸ் வாகன சோதனை தளத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட டாடா சியரா காரில், 1.5 லிட்டர் Hyperion டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதுதவிர 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களும், டாடா சியரா காரில் கொடுக்கப்பட்டுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
இங்கே மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். சோதனை தளத்தில் டாடா சியரா கார் மணிக்கு 222 கிலோ மீட்டர் என்ற வேகத்தை எட்டியிருக்கலாம். ஆனால் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படும் காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 190 கிலோ மீட்டர் என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் டாடா சியரா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 11.49 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுவதால், பழைய மாடலை போலவே, புதிய டாடா சியராவிற்கும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா சியரா காரின் வருகை மூலம் இந்திய சந்தையில் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) மற்றும் மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris) ஆகிய கார்களுக்கு எல்லாம் விற்பனையில் மிக கடுமையான நெருக்கடி ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) போன்ற கார்களும் விற்பனையில் நெருக்கடிகளை சந்திப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








