மார்க்கெட்டை புரட்டி போட போகும் காருக்கு புக்கிங் ஆரம்பம்! மாருதிக்கு இந்த குளிர்லயும் வேத்து கொட்டிருக்கும்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த டாடா சியரா (Tata Sierra) கார், சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. டாடா சியரா கார் சுமார் 22 வருடங்களுக்கு பின்னர் முற்றிலும் புதிய அவதாரத்தில் இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

புதிய டாடா சியரா காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் (Bookings), டிசம்பர் 16ம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி புதிய டாடா சியரா காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கின. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 21 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, டாடா சியரா காரை புக்கிங் செய்து கொள்ளலாம்.

Tata Sierra SUV

அதே நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு டாடா சியரா காரை டெலிவரி (Delivery) செய்யும் பணிகள் வரும் ஜனவரி 15ம் தேதியில் இருந்து தொடங்கப்படவுள்ளன. டாடா சியரா காரில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்பட்டுள்ளன. அவை 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகியவை ஆகும்.

வசதிகளை (Features) பொறுத்தவரையில், லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), முன் பக்க டேஷ்போர்டில் 3 திரைகள் (டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் + டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் + முன் பக்க பயணியின் இருக்கைக்கு முன்பாக ஒரு திரை) போன்றவை எல்லாம், டாடா சியரா காரின் மிகவும் முக்கியமான அம்சங்களாக உள்ளன.

New Tata Sierra

அத்துடன் கனெக்டட் கார் தொழில்நுட்பம், பனரோமிக் சன்ரூஃப், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், 360 டிகிரி சர்ரவுண்ட் வியூ கேமரா மற்றும் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் போன்ற வசதிகளையும் டாடா சியரா கார் கொண்டுள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா சியரா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 11.49 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 21.49 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) மற்றும் மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), ஹோண்டா எலவேட் (Honda Elevate) மற்றும் எம்ஜி அஸ்டர் (MG Astor) போன்ற கார்களுக்கு எல்லாம், மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக டாடா சியரா திகழ்கிறது.

அத்துடன் கியா செல்டோஸ் (Kia Seltos), டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio) போன்ற கார்களுக்கும், டாடா சியரா காரின் வருகை, விற்பனையில் நெருக்கடிகளை ஏற்படுத்தலாம் என நாங்கள் கருதுகிறோம்.

இந்திய வாடிக்கையாளர்கள் பலரும் ஓட்டுவதற்கு ஆவலுடன் காத்து கொண்டுள்ள டாடா சியரா காரை நாங்கள் ஏற்கனவே டெஸ்ட் டிரைவ் செய்து விட்டோம். நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்தபோது, டாடா சியரா கார், பல விதங்களிலும் எங்களை கவர்ந்தது. எனவே டாடா சியரா கார் விற்பனையில் சாதனைகளை படைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 16, 2025, 14:21 [IST]
English summary
Tata sierra official bookings open check all details here
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+