இவ்வளவு கம்மி விலையா? சியாராக்கு போட்டியா விக்கும் காரோட ரேட் என்ன தெரியுமா?

டாடா நிறுவனம் இன்று தனது சியாரா காரை மார்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் நீண்ட நாட்களாக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த கார் ரூ11.49 லட்சம் என்ற அறிமுக விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காரின் போட்டி தயாரிப்புகளின் விலையும் இந்த காரின் விலையும் எப்படி இருக்கிறது? விரிவான விபரங்களை காணலாம்.

இன்று மார்கெட்டில் எஸ்யூவி கார்களுக்கு என ஒரு மதிப்பு இருக்கிறது. அதிக அளவில் இந்த ரக வாகனங்கள் விற்பனையாகி வருகிறது. டாடா நிறுவனம் சியாரா காரை 2000வது ஆண்டுகளில் விற்பனை செய்து வந்தது. அந்த கார் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது நவீனப்படுத்தப்பட்டு இந்த கார் தற்போது மீண்டும் விற்பனைக்கு வருகிறது. இந்த முறை இந்த கார் ரூ11.49 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

Tata Sierra Price Comparison

இந்நிலையில் இந்த கார் மார்கெட்டில் ஏற்கனவே விற்பனையாகி வரும் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, ஹோண்டா எலவேட், ஆகிய கார்களுகு்கு போட்டியாக களம் இறங்குகிறது.இந்நிலையில் போட்டி கார்களின் விலை மற்றும்இந்த கார்களின் விலை குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா காரும் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார்களில் ஒன்று தான். இந்த கார் ரூ10.73 லட்சம் முதல் ரூ 20.20 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இ்நத கார் மொத்தம் 70 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. இதில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. ஆட்டோமெட்டிக் மற்றும் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷனும் உள்ளது.

Tata Sierra Price Comparison

கியா நிறுவனத்தின் செலடோஸ் காரும் இந்த செக்மெண்டில் சிறப்பாக விற்பனையாகும் கார் தான் இந்த கார் ரூ10.79 லட்சம் முதல் ரூ19.81 லட்சம் என்ற விலையில் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் மொத்தம் 24 விதமான வேரியன்ட்கள் உள்ளன. இ்நத காரிலும் பெட்ரோல், டீசல் இன்ஜின் ஆப்ஷன்களும், ஆட்டோமெட்டிக் மற்றும் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும் உள்ளது.

மாருதி நிறுவனத்தின் கிராண்ட் விட்டாரா கார் இந்த செக்மெண்டில் முக்கியமான காராக இருக்கிறது. இந்த கார் மார்கெட்டில் ரூ10.77 லட்சம் முதல் ரூ19.72 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் மொத்தம் 35 விதமான வேரியன்ட்கள் உள்ளன. இந்த காரில் பெட்ரோல், சிஎன்ஜி, பெட்ரோல் ஹைபிரிட், மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது.

ஹோண்டா நிறுவனத்தின் எலெவேட் காரை பொருத்தவரை ரூ11.10 லட்சம் முதல் ரூ16.67 லட்சம் வரையிலான விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் மொத்தம் 22 விதமான வேரியன்ட்களில் விற்பனவையாகி வருகிறது. இந்த கார் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. கியர் பாக்ஸ் ஆப்ஷனை பொருத்தவரை மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

இதை ஒப்பிடும் போது கிட்டத்தட்ட டாடா சியாரா காரும் இதே விலைடயில் தான் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஆரம்ப விலை குறித்த விபரங்கள் மட்டுமே வெளியாகியுள்ளன. மற்ற வேரியன்ட்களுக்கான விலை விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கலாம். டாடா நிறுவனம் இந்த சியாரா காருக்கான புக்கிங்கை வரும் டிசம்பர் 16ம் தேதி துவங்குகிறது. இந்த காரின் டெலிவரி ஜனவரி 15ம் தேதி துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நிறுவனம் எஸ்யூவி மார்கெட்டில் தனது நிலையை தொடர்ந்து சிறப்பாக வைத்திருக்க சியாரா காரை களம் இறக்குகிறது. இந்த கார் நிச்சயம் மக்களின் கவனத்தை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரை வாங்க மக்கள் போட்டி போட்டு காத்திருக்கிறார்கள். இந்த கார் குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 25, 2025, 15:35 [IST]
English summary
Tata sierra price comparison with competitors cars
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+