டாடாக்கு அஸ்திவாரத்திலேயே கை வைக்கும் 3 கார்கள்! இன்னும் 6 மாசத்துல நிலைமையே மாறப்போகுது!
டாடா நிறுவனத்தின் சியாரா கார் இந்தியாவில் குறிப்பிட்ட செக்மெண்டில் பிரபலமான காராக இருக்கிறது.இந்த செக்மெண்டில் கார் வாங்க நினைப்பவர்கள் பலர் சியாரா காரை தேர்வு செய்து வரும் நிலையில் இந்த காருக்க போட்டியாக இன்னும் 6 மாதத்தில் 3 கார்கள் வரப்போகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டாடா நிறுவனத்தின் சியாரா கார் மிட் சைஸ் எஸ்யூவி கார் ஆகும். இந்த செக்மெண்டில் மொத்தம் 3 புதிய கார்கள் அடுத்த 6 மாதத்தில் களம் இறங்கப்போகிறது. இப்படியாக சியாரா காருக்கு போட்டியாக வரப்போகும் கார்கள் குறித்த விரிவான விபரங்களை பார்ப்போம்.

முதலில் வரும் 10ம் தேதி சியா நிறுவனம் தனது அடுத்த தலைமுறை செல்டோஸ் காரை வெளியிடபோகிறது. இந்த கார் வரும் ஜனவரி மாதம் அறிமுகமாக வாய்ப்புள்ளுது.இது தற்போது விற்பனையாகும் மாடலை விட 100 மிமீ அதிகம் ஆகும். இதனால் வீல் பேஸ் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். ஜீப் காம்பஸ் காரை விட இது பெரியதாக மாற வாய்ப்புள்ளது.
இந்த கார் அடிப்படையில் வடிவமைப்பு மாறாமல் சில அக்ரஸிவான டிசைன்கள் இடம் பெற வாய்ப்புள்ளது. இந்த மாற்றம் முகப்பு பகுதியில் தெளிவாக தெரியும்படி இருக்கும். இது போக ஹெட்லைட் மற்றும் டிஆர் எல்ல பகுதியில் டிசைன் மாற்றம் இடம்பெறுகிறது. இதனால் இந்த காரின் ரோடு பெரசென்ஸ் சிறப்பாக இருகு்கும். அகலமாக பாக்ஸி வடிவிலா ரேடியேட்டர் கிரில் ஆகியன வழங்கப்பட்டுள்ளன.

பின்பக்கம் புதிய செல்டோஸ் காரில் உள்ளதை போல வெர்டிகலான டெயில் லைட், இன்டீரியர் விரிவாக்கப்பட்ட டிசைனில் கியா டிரினிட்டி பானரோமிக் டிஸ்பிளே உடன் மாற்றியமைக்க வாய்ப்புள்ளது.இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் அம்சங்களில் மாற்றம் இல்லாமல் தற்போது உள்ள மாடலில் உள்ள அதே ஆப்ஷன் தான் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தாக வரும் ஜனவரி 26ம் தேதி ரெனால்ட் நிறுவனம் தனது டஸ்டர் காரை அறிமுகப்படுத்துகிறது. இந்த கார் ஏற்கனவே சர்வதேச மார்கெட்டில் வேறு வேறு பெயர்களில் விற்பவனையாகி வருகிறது. இந்த கார் இந்தியாவிற்கு வரும்போது இந்தியாவிற்கு ஏற்ற வெளிப்புடிசைன் உடன் சியாரா காருக்கு போட்டியாக களம் இறங்கும் என எதிர்பார்க்கலாம். இது சிம்பிள் மற்றும் பிராக்டிக்கலா உட்புற கட்டமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் 1.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது போக 1.3 லிட்டர் டர்போ சார்ஜ்டு 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஒரு ஆப்ஷனாக இடம்பெற வாய்ப்புள்ளது. இந்த கார் வரும் பிப்ரவரி மாதம் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. இது போக பின்னர் 1.8 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு இன்ஜின் பொருத்தப்பட்ட ஹைபிரிட் காரும் இடம் பெற வாய்ப்புள்ளது.
அடுத்தாக டஸ்டர் காரை அடிப்படையாக கொண்ட நிஸான் பிராண்ட் கார் ஒன்று வரப்போகிறது.இந்த காருக்கு அந்நிறுவனம் டெக்டான் என்ற பெயர் வைத்துள்ளது. இந்த பெயர் பானட் பகுதியில் இந்த பெயர் இடம் பெற்றுள்ளது. இந்த காரில் கனெக்டெட் எல்இடி டிஆர்எல் வழங்கப்பட்டுள்ளுது. இந்த காிரன் இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் அப்படியே டஸ்டர் கார் போல இடம்பெறும் என எதிர்பார்க்கலாம்
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மிட் சைஸ் எஸ்யூவி கார்களுக்கு தனி மரியாதை இருக்கிறது. இந்த கார்களின் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சியாரா காருக்கு உடனடியாக பலத்த போட்டிகள் வருகிறது. எந்த கார் விற்பனையில் ஜொலிக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!


Click it and Unblock the Notifications









