சியராவை தவிர எந்த காரை வாங்கினாலும் இந்த வசதிகள் இருக்காது! டாடா நிறுவனத்தின் செக்-மேட்!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம், சியரா (Sierra) எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.11.40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயிக்கபட்டுள்ளது. இந்த புதிய 5-கதவு டாடா எஸ்யூவி காருக்கான முன்பதிவுகள் டிசம்பர் 16ஆம் தேதியில் இருந்தும், டெலிவரிகள் 2026 ஜனவரி 15ஆம் தேதியில் இருந்தும் துவங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சியரா கார் அதன் காம்பாக்ட்-எஸ்யூவி கார்கள் பிரிவிலேயே முதல்முறையாக பல வசதிகளை பெற்று வந்துள்ளது. அவற்றுள் முக்கியமானவற்றை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

tata sierra segment-first features

ஆர்19 அலாய் சக்கரங்கள்: டாடா சியரா, அதன் பிரிவிலேயே முதன்முறையாக 19 அங்குல அலாய் சக்கரங்களை அறிமுகப்படுத்துகிறது. இது செல்டோஸ், க்ரெட்டா மற்றும் கிராண்ட் விட்டாரா போன்ற போட்டியாளர்களை மிஞ்சுகிறது. இது காரின் நிலைத்தன்மையையும், கவர்ச்சியான தோற்றத்தையும் மேம்படுத்தும் அதே வேளையில், சீரற்ற மேற்பரப்புகளில் சௌகரியமான பயணத்திற்கு ஏற்ப காரின் சஸ்பென்ஷனும் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

tata sierra segment-first features

பெரிய பனோரமிக் சன்ரூஃப்: டாடா சியரா, அதன் பிரிவில் மிகப்பெரிய பனோரமிக் சன்ரூஃப் (1525 மிமீ X 925 மிமீ) உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 'பனோராமாக்ஸ்' என்று அழைக்கப்படுகிறது. இது இரண்டாவது வரிசை இருக்கைகளுக்கு அப்பாலும் நீண்டுள்ளது. முன்பக்க இருக்கைகளில் இருந்து C-பில்லர் வரை பரவியுள்ள இந்த சன்ரூஃப், கேபினுக்குள் இயற்கை ஒளியை அதிகரித்து, விசாலமான கேபின் உணர்வை அளிக்கிறது.

டிரிபிள் ஸ்கிரீன் டாஷ்போர்டு (Triple Screen Dashboard): டாடா சியரா காரின் உட்புறத்தில் உள்ள குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்களில் ஒன்று அதன் தியேட்டர் புரோ (TheatrePro) டிரிபிள் ஸ்கிரீன் டாஷ்போர்டு ஆகும். பொதுவாக மற்ற எஸ்யூவி கார்களில் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் செயல்பாடுகளுக்காக இரண்டு டிஸ்ப்ளேக்கள் மட்டுமே இருக்கும் நிலையில், சியரா ஒரு படி மேலே சென்று, முன்பக்க பயணிக்கு ஒரு தனி திரையை வழங்குகிறது.

tata sierra segment-first features

இதில் 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 12.3 அங்குல சென்ட்ரல் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் நேவிகேஷன் டச்ஸ்கிரீன் மற்றும் முன் இருக்கை பயணிக்கு எதிரே மற்றொரு 12.3 அங்குல டிஸ்ப்ளே ஆகியவை அடங்கும். இந்த அமைப்பு சியராவுக்கு உள்ளே ஒரு பிரீமியம் தோற்றத்தை அளிக்கிறது.

tata sierra segment-first features

சவுண்ட் சிஸ்டம்: டாடா சியராவில் 12 ஸ்பீக்கர் JBL பிளாக் ஆடியோ சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது டால்பி அட்மாஸ் (Dolby Atmos) சவுண்டுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு சிறப்பம்சம், சோனிக்சாஃப்ட் (SonicShaft) சவுண்ட்பார் ஆகும். இது டாஷ்போர்டில் க்ளைமேட் கண்ட்ரோல்களுக்கு மேலே தடையின்றி செயல்படும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

AR ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே (AR HUD): இத்தகைய டிஸ்ப்ளே உடன் இந்தியாவின் முதல் உள்நாட்டு ICE வாகனம் டாடா சியரா ஆகும். இதன் AR ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே ஆனது ஓட்டுநருக்கு தேவையான முக்கிய தகவல்களை நேரடியாக முன்பக்க விண்ட்ஷீல்டு கண்ணாடியில் காட்டுகிறது. இது பெரிய திசை காட்டும் அம்புக்குறிகளுடன் நிகழ்நேர வழிகாட்டுதலை வழங்குகிறது. இந்த ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே அமைப்பில் ஸ்டாண்டர்ட், இம்மெர்சிவ், பர்சனல் மற்றும் ஸ்னோ ஆகிய நான்கு தனித்தனி மோட்கள் மற்றும் 19 ஸ்மார்ட் விஷுவல்கள் உள்ளன.

tata sierra segment-first features

75 வசதிகள் உடன் கனெக்டட் கார் செயலி: டாடா சியரா, iRA எனப்படும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கனெக்டட் கார் செயலி உடன் வருகிறது. இதில் 75 இன்டெலிஜென்ட் வசதிகள் உள்ளன. இவற்றில் ஐந்து அம்சங்கள் இந்திய காம்பாக்ட் எஸ்யூவி கார்கள் பிரிவிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பயணங்களை எளிதாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட இது, ஸ்மார்ட் எச்சரிக்கைகள், முன்னெச்சரிக்கை கவனிப்புகள் மற்றும் ஓட்டுநரின் தேவைகளுக்கு ஏற்ற வசதிகளை வழங்குகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: போட்டி நிறைந்த எஸ்யூவி கார்கள் சந்தையில் சியராவை தனித்துவமாக நிலைநிறுத்த, பல புதிய சிறப்பம்சங்களுடன் இந்த காரை டாடா வடிவமைத்துள்ளது. நவீன வடிவமைப்பு, மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் சௌகரியம் ஆகியவற்றின் கலவையாக வந்துள்ள டாடா சியரா, மேற்கூறப்பட்ட அதன் பிரிவிலேயே-முதல் அம்சங்கள் மூலம் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 25, 2025, 22:07 [IST]
English summary
Tata sierra segment first features r19 alloy wheels and triple screen dashboard etc
மேலும்... #tata motors #suv car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X