2000ஆம் காலக்கட்டத்தில் இந்த டாடா கார் இருந்ததே பலருக்கு தெரியாது! கேமராவில் சிக்காமல் போய்டுமா?
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட உள்ள கார், சியார்ரா (Sierra) ஆகும். டாடா சியார்ரா ஆனது 25 வருடங்களுக்கு முன்பே 2000ஆம் காலக்கட்டத்தில் விற்பனையில் இருந்த கார் ஆகும். அதனை தற்போதைய மாடர்ன் உலகிற்கு ஏற்ப புதிய தோற்றத்திற்கு மாற்றி டாடா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. இதற்காக சியார்ரா காரின் தோற்றத்திற்கான காப்புரிமையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக சமீபத்தில்தான் நமது டிரைவ்ஸ்பார்க் செய்தித்தளத்தில் பார்த்திருந்தோம்.
இதற்கிடையில், டாடா சியார்ரா கார்கள் தொடர்ச்சியாக சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த பிப்ரவரி மாதத்தில்கூட சியார்ரா கார் ஒன்று சாலையில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு இருந்தது. அந்த வரிசையில், தற்போது மீண்டும் ஒரு சியார்ரா கார் முழுவதுமாக மறைப்புகளால் மறைக்கப்பட்ட நிலையில் பொது சாலையில் ஓட்டி பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இந்தியாவில் எந்த பகுதியில் சியார்ராவின் இந்த சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்கிற விபரத்தை அறிய முடியவில்லை. கடந்த 2025 ஜனவரி மாதத்தில் டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ (Auto Expo) கண்காட்சியில் சியார்ரா காரை டாடா நிறுவனம் காட்சிக்கு நிறுத்தி இருந்தது. அதாவது, தனது நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ள கார் என்பதை டாடா நிறுவனம் சொல்லாமல் சொல்லி இருந்தது.
சியார்ரா காரை பெட்ரோல்/ டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் மட்டுமின்றி, எலக்ட்ரிக் வெர்சனிலும் எதிர்காலத்தில் டாடா நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவர உள்ளது. அதாவது, வரும் ஆண்டுகளில் சியார்ரா இவி எலக்ட்ரிக் கார் (Electric Car)-உம் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆனால், தற்போது பொது சாலையில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு இருப்பது சியார்ரா காரின் எரிபொருள் என்ஜின் வெர்சன் ஆகும்.

முன்பு கடந்த பிப்ரவரியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை ஓட்டத்தை போல் இந்த சோதனை ஓட்டத்திலும் சியார்ரா கார் முழுவதுமாக மறைப்புகளால் மறைக்கப்பட்ட நிலையில் உள்ளது. இருப்பினும், மறைப்புகளையும் தாண்டி சியார்ரா காரின் பெட்டகம் வடிவிலான தோற்றத்தை நம்மால் காண முடிகிறது. மேலும், முந்தைய சோதனை ஓட்டத்தை போல இந்த சோதனை ஓட்டத்திலும் சியார்ரா காரின் கடைசி ஜன்னல் கண்ணாடிகள் மறைக்கப்பட்டுள்ளன.
தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சோதனை ஓட்டத்தில் டாடா சியார்ரா காருக்கு அருகே சாலையில் ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) கார் ஒன்று செல்வதை காணலாம். இதன் மூலம் தோற்றத்தில் கிரெட்டாவை காட்டிலும் சியார்ரா எந்த அளவிற்கு பெரியது என்பதை அறிய முடிகிறது. முந்தைய சோதனை ஓட்டத்தில் சியார்ரா காரில் இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டு இருந்தன.

ஆனால், தற்போதைய சோதனை ஓட்டத்தில் சியார்ரா காரில் அலாய் சக்கரங்கள் உள்ளன. இதில் இருந்து சியார்ரா காரில் எந்த மாதிரியான டிசைனிலான அலாய் சக்கரங்களை பொருத்துவது என்கிற முடிவிற்கு ஒருவழியாக டாடா நிறுவனம் வந்துள்ளது என்பதை அறிய முடிகிறது. புதிய சியார்ரா காரில் முற்றிலும் புதிய 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜினை டாடா நிறுவனம் வழங்கலாம் என எதிர்பார்க்கிறோம்.
இந்த புதிய டர்போ பெட்ரோல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 168 பிஎச்பி மற்றும் 280 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும் என கூறப்படுகிறது. அதேநேரம், தற்போதைய டாடா ஹெரியர் மற்றும் சஃபாரி கார்களில் பொருத்தப்படும் அதே 2 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனும் சியார்ரா காரில் வழங்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 25 வருடங்களுக்கு முன்னர் விற்பனையில் இருந்த சியார்ரா கார் ஆனது அந்த சமயத்தில் மக்களை பெரியதாக கவரவில்லை. ஆதலால், மாடர்ன் தோற்றத்தில் வரும் புதிய டாடா சியார்ரா கார் இந்த முறை மக்களை எந்த அளவிற்கு ஈர்க்க போகிறது என்பதை அறிய ஆவலாக உள்ளோம். ஆனால், புதிய சியார்ரா காரின் அறிமுகத்திற்கு இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
Source: Carwale


Click it and Unblock the Notifications









