லாரிக்கு இணையான நீளம்... 25 வருஷத்துக்கு பின் மீண்டும் அதே தோற்றத்தில் வந்துட்டனு சொல்லு!

டாடா சியார்ரா (Tata Sierra), டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக எதிர்பார்க்கப்படும் கார்களுள் ஒன்று. அதிக பேர் பயணிக்கக்கூடிய 7-சீட்டர் (7-Seater) கார்களை அறிமுகம் செய்வதில் சமீப காலமாகவே ஆர்வமாக இருக்கும் டாடா நிறுவனம், அந்த வகையில் சியார்ரா காரை மார்க்கெட்டில் களமிறக்க உள்ளது. இந்த நிலையில், அறிமுகத்திற்கு முன்னதாக டாடா சியார்ரா கார் மீண்டும் சாலையில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு உள்ளது.

'மீண்டும்' என்கிற வார்த்தையை இங்கு ஏன் நாங்கள் குறிப்பிடுகிறோம் என்றால், சியார்ரா கார் சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்படுவது இது ஒன்றும் முதல்முறை அல்ல. மேலும், டாடா சியார்ரா என்கிற பெயரில் கார் ஒன்று மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுவதும் இது ஒன்றும் முதல்முறை அல்ல. 1990ஆம் காலக்கட்டத்திலேயே சியார்ரா என்கிற பெயரில் கார் ஒன்றை டாடா நிறுவனம் விற்பனை செய்தது.

tata sierra car spotted

அதன் பரிணாம வளர்ச்சியாகவே புதிய சியார்ரா கார் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த 2025ஆம் ஆண்டின் துவக்கத்தில் டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ (Auto Expo) கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த டாடா சியார்ரா கார் கடந்த சில மாதங்களில் பலமுறை சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு உள்ளது.

அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பான ஸ்பை படங்கள் (Spy Images) யாஷ் சிங்வி என்பவர் மூலமாக நமக்கு கிடைக்க பெற்றுள்ளன. இவ்வாறு தொடர்ச்சியாக சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு இருப்பினும், சியார்ராவின் அறிமுகத்தை அடுத்த 2026ஆம் ஆண்டில்தான் எதிர்பார்க்கிறோம்.

tata sierra car spotted

டாடா சியார்ரா காரின் சமீபத்திய சோதனை ஓட்டம் ஆனது புனேவில் நெரிசல் மிகுந்த சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. வழக்கம்போல் இந்த சோதனை ஓட்டத்திலும் கார் முழுவதுமாக மறைப்புகளால் மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது. இருப்பினும், சியார்ரா காரின் பெட்டகம் வடிவிலான வடிவத்தையும், நிமிர்ந்த தோற்றம் கொண்ட முன்பக்கத்தையும் தெளிவாக காண முடிகிறது.

1990களில் விற்பனையில் இருந்த சியார்ரா காருக்கும் தற்போதைய காருக்கும் சில ஒற்றுமைகள் இருப்பதை மறைப்புகளை தாண்டி பார்க்க முடிகிறது. 2025 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்ததற்கும், விரைவில் உற்பத்தி பணிகளில் உட்படுத்தப்பட உள்ள சியார்ரா காருக்கும் நிறைய விஷயங்களில் வேறுப்பாடுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், அதனால்தான் சியார்ரா கார் சோதனை ஓட்டங்களில் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் உட்படுத்தப்படுகிறது.

tata sierra car spotted

அடுத்த வருடத்தில் உற்பத்தியில் இறங்கவுள்ள சியார்ரா காரை சமீபத்தில் கூட்டணி டீலர்கள் முன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் காட்சிப்படுத்தி உள்ளது. அதன் மூலம் பார்க்கும்போது, சியார்ரா காரின் முழு அகலத்திற்கும் எல்இடி ஸ்ட்ரிப், சதுர வடிவிலான எல்இடி டர்ன் இண்டிகேட்டர்கள் உள்ளிட்டவை முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளன. மேலும், காரின் முன்பக்கத்தில் முரட்டுத்தனமான தோற்றத்திற்கு பம்பர் பொருத்தப்பட்டு உள்ளது.

காரின் பெட்டக வடிவிலான தோற்றத்திற்கு ஏற்ப சக்கரங்களுக்கு மேலே வீல் ஆர்ச்சுகளும் சதுர வடிவில் கொடுக்கப்பட உள்ளன என்பதை மறைப்புகளை தாண்டி பார்க்க முடிகிறது. மேலும், தட்டையான மேற்கூரை மற்றும் தடிமனான B-பில்லர்களையும் சியார்ரா காரில் எதிர்பார்க்கலாம். இந்த புதிய டாடா காரின் அலாய் சக்கரங்களும் நன்கு அளவில் பெரியதாக 19-இன்ச்சில் பொருத்தப்பட்டுள்ளதை தற்போது வெளியாகி உள்ள படங்களில் பார்க்க முடிகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீப காலமாக கார்கள் விற்பனையில் மெல்ல மெல்ல சரிவை சந்தித்து வருகிறது. இதனை சரி செய்ய டாடா நிறுவனமும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றுதான், சியார்ரா காரின் அறிமுகம் ஆகும். இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே 7-சீட்டர் கார்களில் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருவதால், டாடா சியார்ரா காருக்கும் போதுமான அளவிற்கு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Saturday, August 16, 2025, 13:05 [IST]
English summary
Tata sierra spotted in pune ahead of launch in 2026 check all details here
மேலும்... #tata motors #spy pics #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X