90ஸ் கிட்ஸ்களின் கனவு கார் மீண்டும் வருகிறது! விலை இவ்வளவு கம்மியா வருமா?
டாடா நிறுவனம் இன்று தனது சியாரா காரை வெளியிட்டுள்ளது. நீண்ட ஆண்டு கால எதிர்பார்ப்பிற்கிடையில் இந்த கார் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காரின் அதிகாரப்பூர்வமான அறிமுகம் வரும் 25ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் இன்று வெளியிடப்பட்ட டாடா சியாரா கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டாடா நிறுவனம் கடந்த 1991ம் ஆண்டு முதன் முறையாக சியாரா என்ற பெயரில் காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அந்த கார் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றது.இந்த பெரியில் வெளியான கார் மக்கள் மத்தியிலும் நன்மதிப்பை பெற்றது. இந்நிலையில் கடந்த 2003ம் ஆண்டுடன் இந்த காரின் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. அப்பொழுது வெளியான கார் 3 டோர் வெர்ஷன் கொண்ட காராக வடிவமைக்கப்பட்டது.,

இந்நிலையில் இந்த காரை மீண்டும் நவீன அம்சங்களுடன் கொண்டு வர டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த கார் நவீன அம்சங்கள் இணைக்கப்பட்டு புதிய டாடா சியாரா காராக இன்று வெளியிடப்பட்டுள்ளது.டாடா நிறுவனம் இந்த காரை கர்வ், மற்றும் ஹாரியர் ஆகிய கார்களுக்கு இடையே பொசிஷன் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் ரெட்ரோ கூல் டிசைன் வடிவமைப்பில் வழங்கப்பட்டுள்ளது. ஒரிஜினல் சியாரா காரின் லுக் இதில் அப்படியே கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த காரின் வெளிப்புற வடிவமைப்பு மினிமலான டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் கிளாஸியான கருப்பு நிற வெளிப்புறம் கொண்ட ஹெட்லைட் வழங்கப்ப்டடுள்ளது. கனெக்டெட் டிஆர்எல் வழங்கப்பட்டுள்ளது. ரேடியேட்டர் கிரில் பகுதியில் சியாரா பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் சில்வர் ஸ்கிரிட் பிளேட் லோயர் ஏர் டிரம் வழங்கப்பட்டுள்ளது.

பக்கவாட்டு பகதியில் டைமண்ட் கட் அலாய் வீல்கள்வ ழங்கப்பட்டுள்ளது. இது போக பிளாட் டோர் ஹேண்டில்கள், ரூஃப் இன்செர்ட்மிமிக் கவர்டு ஜன்னல்கள் வழங்கப்ப்டடுள்ளது. பின்பக்கம் கனெக்டெட் டெயில் லைட், பெரிய ரூஃப் ஸ்பாய்லர்கள் கிளாஸி கருப்பு நிற கிளாடிக் ஷார்ப்பான சில்வர் ஸ்கிட் பிளேட் வழங்கப்ப்டடுளு்ளது.
இந்த காரின் உட்புறம் டுயல் டோனில் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் வழங்கப்ப்டடுள்ளது. உள்ளே 3 ஸ்கிரீன் செட்டப் இருக்கிறது. இதில் 12.3 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் நடுவிலும், 10.25 இன்ச் டிஜிட்டல்இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரும், 12.3 இன்ச் முன்பக்க பயணிக்கான எண்டர்டெயின்மென்ட் சிஸ்டமும் வழங்கப்ப்டடுள்ளது.

4 ஸ்போக் கொண்ட கருப்பு நிற ஸ்டியரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது. இதே ஸ்டியரிங் வீல் தான் கர்வ் காரிலும் வழங்கப்பட்டுள்ளது. சீட் பகுதியில் அட்ஜெஸ்டபிள் ஹெட்ரெட் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் சொகுசு வசதியை இது வழங்குகிறது. இந்த காரில் ஏகப்ப்டட தொழிற்நுட்ப அம்சங்கள் உள்ளது. முன்பக்க சீட் வென்டிலேட்ட் சீட்களாக உள்ளுது. இது போக பெரிய பானரோமிக் சன் ரூஃப், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ அல்லது அப்பிள் கார்பிளே வசதி, 12 ஸ்பீக்கர் கொண்ட ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம், பவர்டு டெயின்கேட், பவர்டு டிரைவர் சீட், ஆட்டோ டிம்மிங் ரியர்வியூ மிரர், டுயல் ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர், ஆம்பியன்ஸ் லைட்டிங் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது.
பாதுகாப்பிற்காக லெவல் 2 அடாஸ், 7 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா, ஹில் ஹோல்டு அசிஸ்ட், எலெகட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஆட்டோ ஹோல்டு மற்றும் முன் மற்றும் பின்பக்க பயணிகளுக்கான பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது.
இந்த காரில் உள்ளஇன்ஜின் பொருத்தவரை 1.5 லிட்டர் டிஜிடிஐ டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட வாய்ப்புள்ளது. இது போக 1.5 லிட்டர் டீசல்இன்ஜினும் ஆப்ஷனாக வழங்கப்பட வாய்ப்புள்ளது.இந்த கார் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷன்களுடன் கிடைக்கும். இதன் பவர் மற்றும் டார்க் குறித்த விபரங்களை பொருத்தவரை 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் 170 பிஎஸ் பவரையம் 280 என்எம்டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையிலும், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் 118 பிஎஸ் பவர் மற்றும் 260 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார் வரும் 25ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகிறது. அப்பொழுது தான் இன் முழு விபரம் நமக்கு தெரியவரும். இந்த கார் விலையை பொருத்தவரை ரூ12-20 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications









