பேஸ் வேரியன்டிலேயே இவ்வளவு வசதிகளா? டாடா சியாரா வேரியன்ட் வாரியாக அம்ச விபரங்கள்!
டாடா நிறுவனம் சியாரா காரை நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரின் பேஸ் மாடல் விலை மட்டுமே தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த கார் ரூ11.49 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனைக்கு வருகிறது. இந்த காரின் பேஸ் மாடல் விலை மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்தாலும் மொத்தம் உள்ள 7 வேரியன்ட்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளது. இந்த 7 வேரியன்ட்களிலும் என்னென்ன அம்சங்கள் உள்ளது என்ற விபரங்களை காணலாம் வாருங்கள்.
புதிய சியாரா காரை பொருத்தவரை மொத்தம் 7 விதமான வேரயன்ட்களில் கிடைக்கிறது. இந்த கார் ஸ்மார்ட் +, ப்யூர், ப்யூர் +, அட்வெஞ்சர்,அட்வெஞ்சர் +, அக்கம்பிளிஷ், அக்கம்பிளிஷ்+ ஆகிய வேரியன்ட்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த காரின் புக்கிங் டிசம்பர் 16ம் தேதி முதல் துவங்குகிறது. வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி முதல் இந்த காரின் டெலிவரி துவங்குகிறது. இந்த கார் 6 விதமான கலர் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வருகிறது.

இந்த காரின் இன்ஜின் பொருத்தவரை 2 பெட்ரோல் மற்றும் 1 டீசல் இன்ஜின் ஆப்ஷன் இருக்கிறது. இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 106 பிஎஸ் பவர் மற்றும் 145 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது போக 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் 160 பிஎஸ் பவர் மற்றும் 255 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. டீசல்இன்ஜினை பொருத்தவரை 120 பிஎஸ் பவர் மற்றும் 280 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கியர் பாக்ஸை பொருத்தவரை 6 ஸ்பீடு மேனுவல், டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் மற்றும் டிசிடி கியர் பாக்ஸ் உடன் வருகிறது. வேரியன்ட் மற்றும் இன்ஜின் ஆப்ஷனை பொருத்து இது மாறுபடும்.
டாடா நிறுவனம் இந்த காரை புதிய மாடுலர் ARGOS பிளாட்ஃபார்மில் உரவாக்கியுள்ளது. இதில் பல்வேறு இன்ஜின் ஆப்ஷன்களும் உள்ளன. இது பல்வேறு இன்ஜின் மற்றும் பாடி ஸ்டைல் கொண்ட வாகனத்தை உருவாக்க ஏற்ற பிளாட்ஃபார்ம் ஆகும். இனி வேரயன்ட் வாரியிலான அம்சங்கள் குறித்த விரிவான விபரங்களை காணலாம்

ஸ்மார்ட் + பேஸ் வேரியன்ட்
புஷ் ஸ்டார்ட் பட்டன், ஸ்மார்ட் கீ ஆக்ஸஸ், ஆட்டோ ஹோல்டு ஃபங்சன் உடன் கூடிய எலெக்ட்ரிக் பார்க் பிரேக், எம்ஐடியுடன் கூடிய செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், முன்பக்க சீட்டின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் ஆப்ஷன், 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், டிராக்ஷன் கண்ட்ரோல், பின்பக்க ஏசிவென்ட்கள், 4 வீல்களிலும் டிஸ்க் பிரேக், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், எல்இடி லைட் டிஆர்எல், பை எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட், ஃபிளாஷ் டோர் ஹேண்டில், எலெக்ட்ரிக் ஓஆர்விஎம், டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் ஸ்டியரிங் வீல், சென்டர் மற்றம் ஸ்பீடு சென்சிங் டோர் லாக்குகள், பின்பக்க விண்டோ சன் பிளைன்ட், பின்பக்க பார்க்கிங் சென்சார், ஐஎஸ்ஓ சைல்டு ஃபிக்ஸ் மவுண்ட், 17 இன்ச் ஸ்டீல் ரிம்கள், முன்பக்கம் ஸ்டோரேஜ் உடன் கூடிய ஸ்லைடிங் ஆர்ம் ரெஸ்ட்கள்.
ப்யூர் வேரியன்ட்
ஸ்மார்ட் + வேரியன்ட்டில் உள்ள அனைத்து அம்சங்களும் உள்ளன. அது போக கூடுதலாக, வயர் லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, பெரிய 10.25 இன்ச் டச்ஸ்கிரீன் டிஸ்பிளே, ஆட்டோமெட்டிக் டிசிடி வேரியன்ட்களுக்கு பெடல் ஸ்விஃப்டர்கள், மோனோ ஸ்டெபிள் எலெக்ட்ரானிக் கியர் செலெக்டர், மல்டி ஃபங்சன் ஸ்டியரிங் வீல், ஆட்டோ ஃபோல்டிங் மிரர், சிட்டி மற்றும் ஸ்போர்ட் ஆகிய டிரைவ் மோடுகள், பின்பக்க வியூ கேமரா, க்ரூஸ் கண்ட்ரோல் சிஸ்டம், ஹில் டிசென்ட் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 8 ஸ்பீக்கர் கொண்ட ஆடியோ செட்டப், 6 மொழிகளில் வாய்ஸ் கமெண்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது.
ப்யூர் + வேரியன்ட்
ப்யூர் வேரியன்ட்டில் உள்ள அத்தனை அம்சங்களும் இந்த ப்யூர் + வேரியன்டில் உள்ளது. இது போக கூடுதலாக ஆட்டோமெட்டிக் ஹெட்லைட் ஆக்டிவேஷன், ரெயின் சென்சிங் முன்பக்க வைப்பர்கள், வாய்ஸ் கண்ட்ரோல்டு பானரோமிக் சன்ரூஃப், பின்பக்க டிஃபாகர் மற்றும் வாஷ் வைப், இரண்டு 65W யூஎஸ்பி டைப் சி போர்ட்கள், டுயல் ஸோன் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், ஒன் டச் டிரைவர் சீட் ஜன்னல் ஒப்பன், கிளோஸ், 17 இன்ச் அலாய் வீல்கள் ஆகிய அம்சங்கள் உள்ளது.
அட்வெஞ்சர்
ஃப்யூர் + வேரியன்டில் உள்ள அத்தனை அம்சங்கள் இதில் உள்ளது. இது போக கூடுதலாக ஸ்பிளிட்ட டிரைவர் டிஸ்பிளே 7 இன்ச், சரவுண்ட் வியூ கேமரா, சிஸ்டம், அட்ஜெஸ்டபிள் ரூஃப் ரெயில்கள், ஸ்லைடிங் அம்சத்துடன் கூடிய பார்சல் டிரே, லெதர் விராப் செய்யப்பட்ட ஸ்டியரிங் வீல் மற்றும் ஸ்விஃப்டர்கள், முன்பக்க கார்னரிங் எல்இடி ஃபாக் லைட், முன்பக்க பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது.
அட்வெஞ்சர் +
அட்வெஞ்சர் வேரயின்டில் உள்ள அத்தனை அம்சங்களும் இதில் உள்ளது. இது போக கூடுதலாக, டிரைன் மோடு செலக்ஷனில் வெட், மட், ஸ்டாண்டர்டு ஆகிய மோடுகளை செலெக்ட் செய்யும் ஆப்ஷன், அடாப்டிவ் ஃப்ரீக்கோன்ஸி பேஸ்டு சூப்பர் கிளைடு சஸ்பென்சன், முன்பக்க பயணிகள் சீட்டிற்கு பாஸ் மோடு, முன்பக்கம் இரண்டு 65W டைப் சி ஃபாஸ்ட் சார்ஜர்கள், 12.3 இன்ச் ஃப்ளோட்டிங் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், 10.25 இன்ச் டிரைவர் டிஜிட்டர் டிரைவர் டிஸ்பிளே, பின்பக்கம் 60:40 என பிரிக்கப்பட்ட சாய்வு சீட்டுகள், அட்ஜெஸ்டபிள் பின்பக்க ஹெட்ரெஸ்ட்கள், கூல்டு கிளவ் பாக்ஸ், அட்வான்ஸ்டு ஆம்பியன்ஸ் லைட்டிங் பேக்கேஜ், பின்பக்க பயணிகள் இருப்பு கண்டறியும் சென்சார், முன்பக்க பயணிகளுக்கு நீட்டிக்கப்பட்ட தொடை சப்போர்ட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது.
அக்கம்ப்ளீஷ்டு
அட்வெஞ்சர் + வேரியன்டில் உள்ள அத்தனை அம்சங்கள் இதில் வழங்கப்ப்டடுள்ளது. இது போக இந்த காரில் 12 ஸ்பீக்கர் கொண்ட ஜேபிஎல் சரவுண்ட் டால்பி அட்மாஸ் செட்டப், முன்பக்கம் வென்டிலேட்டட் சீட்டுகள், வயர்லெஸ் மொபைல் சார்ஜிங் பேட்கள், லெதரேட் அப்ஹோல்சரி, 6 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன்பக்க எலெக்ட்ரிக் டிரைவர் சீட், லெவல் 2 அடாஸ் சூட், எக்ஸ்பிரஸ் கேபின் கூலிங் மோட், ஆர்க்கயூமென்டட்ட ரியாலிட்டி ஹெட்ஸ் அப் டிஸ்பிளே, எக்ஸ்டென்டட் மூட் லைட்டிங் ஸோன் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது.
அக்கம்ப்ளீஷ்டு + டாப் வேரியன்ட்
இதில் அக்கம்ப்ளீடு வேரயின்ட்டில் உள்ள அம்சங்கள் எல்லாம் இருக்கிறது.இது போக கெஸ்டர் பேஸ்டு டெயில் கேட், வெல்கம், குட்பை வெளிப்பட்ட லைட் ஷோ, பின்பக்க கிராஸ் டிராஃபிக் அலர்ட், பிளைன்ட் ஸ்பார்க் மானிட்டரிங் சிஸஅடம், டோர் ஓப்பன் கோலிஷன் அலர்ட், 12.3 இன்ச் முன்பக்க பயணிகள் சீட்டிற்கான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மேப்பில்ஸ் இன்பில்டு நேவிகேஷன், அமேசான் அலெக்ஸா சப்போர்ட், ஐஆர்ஏ கனெக்டெட் கார் டெக்னாலஜி சூட், ஏர் ஃப்ரீஃபையர், ஏக்யூஐ டிஸ்பிளே, நைட் சாபர் ஹெட்லைட் செட்டப், ஸீக்கோன்ஸியல் டர்ன் இன்டிகேட்டர், பின்பக்க ஃபாக் லைட், எஸ்ஓஎஸ் எமெர்ஜென்ஸி அசிஸ்டென்ஸ், மெமரி ஃபங்சன் ஃபார் பவர்டு டிரைவர் சீட், பின்பக்க டுயல் ஃபாஸ்ட் சார்ஜிங், டைப் சி போர்ட்கள், நீட்டிக்கப்பட்ட அடாஸ் அம்சங்கள், உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சியாரா காரில் உள்ள 7 வேரியன்ட்களிலும் உள்ள அம்சங்கள் நிச்சயம் ஆச்சரியப்பட வைக்கிறது. பேஸ் வேரியன்டிலேயே பல சொகுசு அம்சங்கள் இருக்கிறது.இதனால் இந்த காரை பலர் விரும்பி வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் நீங்கள் விரும்பும் வேரியன்ட் பெயரை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








