28 கிமீ மைலேஜ்! ஜிஎஸ்டி குறைப்பால் பைக் விலைக்கு வரப்போகும் பாதுகாப்பான கார்! மாருதி ஆல்டோலாம் இனி அவ்ளோதான்!
இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில் ஒரு ஹேட்ச்பேக் (Hatchback) ரக காரை வாங்க வேண்டும் என்றால், பலரது மனதிற்கும் முதலில் நினைவிற்கு வரும் கார்களில் ஒன்று டாடா டியாகோ (Tata Tiago). இதன் ஐசி இன்ஜின் வெர்ஷனின் சிஎன்ஜி/ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள் அதிகபட்சமாக ஒரு கிலோவிற்கு 28.06 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்குகின்றன.
வசதிகளை (Features) பொறுத்தவரையில், 26.03 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ/ஆப்பிள் கார்பிளே, ஹெச்டி ரிவர்ஸ் பார்க்கிங் டிஜிட்டல் கேமரா, வாஷர் உடன் ரியர் வைப்பர் மற்றும் டீஃபாகர் உள்ளிட்டவை எல்லாம் டாடா டியாகோ காரின் மிகவும் முக்கியமான அம்சங்களாக உள்ளன.

நடப்பு 2025-26ம் நிதியாண்டின் முதல் 4 மாதங்களில் (ஏப்ரல்-ஜூலை) ஒட்டுமொத்தமாக 26,291 டாடா டியாகோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வி3 கார்ஸ் தளம் வெளியிட்டுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்டில் (Sales Report) தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நடப்பு 2025-26ம் நிதியாண்டின் முதல் 4 மாதங்களில் சராசரியாக ஒவ்வொரு மாதமும் 6,572 டாடா டியாகோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஆனால் வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கை வெகுவாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ஜிஎஸ்டி (GST) வரியை குறைத்திருப்பதுதான் இதற்கு காரணம். கார்கள் மீதான 28 சதவீத ஜிஎஸ்டி வரி சமீபத்தில் வெறும் 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது வரும் செப்டம்பர் 22ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.

அதற்கு முன்னதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போதே, தங்களது நிறுவன கார்களின் விலை எவ்வளவு குறையும்? என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது. இதன்படி பார்த்தால், டாடா டியாகோ காரின் விலை 75 ஆயிரம் ரூபாய் வரை குறையவுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் டியாகோ காரின் விலை பொதுவாக 75 ஆயிரம் ரூபாய் வரை குறையும் என்றுதான் டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. வேரியண்ட் வாரியாக டாடா டியாகோ காரின் விலை எவ்வளவு? குறையவுள்ளது என்ற தகவலை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இது குறித்த விரிவான தகவல்களுக்கு, உங்களுக்கு அருகில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்பை அணுகும்படி டாடா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் டாடா டியாகோ காரின் ஐசி இன்ஜின் வெர்ஷனின் ஆரம்ப விலை 5 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 8.85 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
தற்போதைய நிலையிலேயே டாடா டியாகோ மிகவும் விலை குறைவான கார்களில் ஒன்றாகதான் இருக்கிறது. ஆனால் 75 ஆயிரம் ரூபாய் வரை விலை குறையவுள்ளதால், டாடா டியாகோ இன்னும் விலை குறைவான கார்களில் ஒன்றாக மாறவுள்ளது. எனவேதான் வரும் மாதங்களில் டாடா டியாகோ காரின் விற்பனை எண்ணிக்கை வெகுவாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்தபடி, 75 ஆயிரம் ரூபாய் வரை விலை குறைக்கப்பட்ட பிறகு, கிட்டத்தட்ட ஒரு சில பிரீமியம் பைக்குகளுக்கு இணையான விலையில்தான், டாடா டியாகோ கார் விற்பனை செய்யப்படும். எனவே டாடா டியாகோ காரின் விற்பனை எண்ணிக்கை உயர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன.
டாடா டியாகோ கார் விலை குறைவானதாக இருந்தாலும் கூட, மிகவும் பாதுகாப்பானது ஆகும். குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில் டாடா டியாகோ கார் 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (4 Star Safety Rating) பெற்று அசத்தியுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயமாக இருக்கிறது.
டாடா டியாகோ கார் தற்போதைய நிலையில் ஐசி இன்ஜின் மட்டுமல்லாது, எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். டாடா டியாகோ காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனின் லாங் ரேஞ்ச் வேரியண்ட்கள் அதிகபட்சமாக 293 கிலோ மீட்டர்கள் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) வழங்க கூடியவையாக உள்ளன.
தற்போதைய நிலையில் டாடா டியாகோ காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 7.99 லட்ச ரூபாய் ஆக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையோ 11.14 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவையும் எக்ஸ்-ஷோரூம் விலைதான்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10) மற்றும் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-presso) போன்ற கார்களுக்கு எல்லாம், டாடா டியாகோ மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








